2021 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
2021 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இது 16-ஆவது இந்திய மக்கள் தொகை கணக்கெப்பாகும். இதன் முதல் கட்டப் பணி ஏப்ரல் 2020 முதல் துவங்கி செப்டம்பர் 2020 முடிய நடைபெறும். இரண்டாம் கட்டப் பணி மற்றும் இறுதி கட்டப் பணிகள் 2021-ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதம் 9 முதல் 28 முடிய நடைபெறும். முதல் கட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின் போது, தேசிய மக்கள் தொகை பதிவேடு (என் பி ஆர்) தயாரிப்புப் பணிகளும் சேர்த்து மேற்கொள்ளப்படும். [1]
![]() | இக்கட்டுரை அல்லது கட்டுரைப்பகுதி 2027 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு கட்டுரையுடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடவும்) |

முதல் கட்ட பணியில் மக்கள் குடியிருப்பு வீடுகள் கணக்கெடுக்கப்பட்டுப் பட்டியல் தயாரிக்கப்படும் போது 34 கேள்விகள் கேட்கப்படும்.[2] தேசிய மக்கள் தொகை பதிவேடு திட்டத்தில் 14 கேள்விகளும் இடம்பெறும். மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், அலைபேசி எண் போன்ற விவரங்களும் சேகரிக்கப்படும்.
மக்கள் தொகை கணக்கெடுப்பு எவ்வாறு நடத்த வேண்டும் என்பதற்கான விதிமுறைகளைக் குறித்த 14 பக்க சுற்றறிக்கையை அனைத்து மாநில அரசுகளுக்கு தலைமைப் பதிவாளர் மற்றும் இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையர் அனுப்பியுள்ளார். [3][4] [5]
- முதல் கட்டப் பணியின் போது குடியிருப்புகள் மற்றும் வீட்டுவசதிகள் குறித்த கணக்கெடுப்பு படிவத்தில் இடம் பெறும் விவரங்கள் பின்வருமாறு:
- மாநிலத்தின் பெயர்
- மாவட்டத்தின் பெயர்
- வருவாய் வட்டம் அல்லது ஊராட்சி ஒன்றியம் பெயர்
- நகரம்/கிராமத்தின் பெயர்
- நகரம் எனில் வார்டு எண்
- கதவு எண்
- வீட்டின் தரை, சுவர் மற்றும் மேற்புறத்தை கட்ட பயன்படுத்தப்பட்ட பொருட்கள்
- கணக்கெடுப்புப் கட்டடத்தின் வகை: (குடியிருப்பு/ குடியிருப்பு மற்றும் கடை/ கடை/ தொழிலகம்/வணிகம்/ கல்வி நிலையம்/வழிபாட்டுத் தலம்/பிற)
- வீட்டில் குடியிறுப்பவர்களின் மொத்த எண்ணிக்கை
- அதில் ஆண்கள், பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை
- பட்டியல் சமூகத்தவர் மற்றும் பழங்குடி மக்களின் எண்ணிக்கை. (பட்டியல் சமூத்தவர் எனில் இந்து, சீக்கியம் மற்றும் பௌத்த சமயத்தை பின்பற்றுவர்களை மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்)
- வீட்டின் தலைவர் பெயர்
- வீட்டின் உரிமைத் தன்மை (சொந்த வீடு அல்லது வாடகை வீடு)
- வீட்டில் உள்ள தங்குவதற்கான மொத்த அறைகள் (சமயலறை, கழிவறை, குளிப்பறை, ஸ்டோர் ரூம், நடைபாதைகள் நீங்கலாக)
- வீட்டில் உள்ள திருமணம் ஆன தம்பதியர்களின் எண்ணிக்கை
- வீட்டின் குடிநீருக்கான ஆதாரம்
- வீட்டின் குடிநீருக்கான ஆதாரம் வீட்டிற்குள்ளா அல்லது. வீட்டிற்கு வெளியிலா
- வீட்டிற்கு வெளிச்சம் கிடைப்பதற்கான வழிகள் (மின்சாரம் அல்லது பிற வகைகள்)
- கழிப்பறை வசதிகள்
- கழிவுநீர் வடிகால் அமைப்புகள்
- குளியலறை வசதிகள்
- சமயலறைகள் மற்றும் LPG இணைப்புகள்
- உணவு சமைப்பதற்கான முக்கிய எரிசக்தி ஆதாரங்கள்
- ரேடியோ அல்லது டிரான்சிஸ்டர்கள்
- தொலைக்காட்சிப் பெட்டி மற்றும் Dish/ DTH/கேபிள் இணைப்பு விவரம்
- மடிக்கணினி/ மேசைக் கணினிகள் விவரம்
- தரைவழி தொலைபேசி/கைப்பேசி/திறன்பேசிகள் விவரம்
- சைக்கிள்/ஸ்கூட்டர்/மோட்டார் சைக்கிள்/மொபெட் விவரம்
- கார்/ஜீப்/வேன் விவரம்
- உண்பதற்குப் பயன்படுத்தப்படும் முக்கிய தானியங்கள் (அரிசி/கோதுமை/மக்காச்சோளம் மற்றும் பிற விவரம்)
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads