2027 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு
இந்தியாவின் 16 ஆவது மக்கள் தொகை கணக்கெடுப்பு From Wikipedia, the free encyclopedia
Remove ads
2027 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, இந்திய அரசு 16வது மக்கள் தொகை கணக்கெடுப்பை 1 அக்டோபர் 2026 மற்றும் 1 மார்ச் 2027 ஆகிய நாட்களில் துவக்க இருப்பதற்கான அரசாணையை 16 சூன் 2025 அன்று வெளியிட்டுள்ளது.[1]2027ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின் சிறப்பம்சம் சாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்வதாகும். ஆகும். இதற்கு முன்னர் 1931ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் போது சாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது. 1941ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் சாதி வாரி தரவுகள் எடுக்கப்பட்டாலும், அவை வெளியிடப்படவில்லை.[2]
பனி அதிகம் பொழியும் லடாக், ஜம்மு காஷ்மீர் ஒன்றிய பகுதிகள் மற்றும் இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தராகண்டம் ஆகிய மாநிலங்களில் மட்டும் அக்டோபர் 1, 2026 நாளை அடிப்படையாகக் கொண்டும், நாட்டின் பிற பகுதிகளில் மார்ச் 1, 2027 நாளை அடிப்படையாகக் கொண்டும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கு நாடு முழுவதிலிருந்து தரவுகளை திரட்டும் பணியில் சுமார் 34 இலட்சம் கணக்கெடுப்பாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் மற்றும் 1.3 லட்சம் கணக்கெடுப்பு அதிகாரிகள் மின்னணு கருவிகளுடன் ஈடுபடுவார்கள். மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது, சாதி வாரி கணக்கெடுப்பும் நடத்தப்படும். மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது சேகரிக்கப்படும் தரவுகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மிக கடுமையான தரவு பாதுகாப்பு நடவடிக்கைகள் நடைமுறையில் இருக்கும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.[3] [4]
Remove ads
பின்னணி
இந்தியாவில் இறுதியாக 2011ஆம் ஆண்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அடுத்த கணக்கெடுப்பு 2021ஆம் ஆண்டில் நடத்தியிருக்க வேண்டும். ஆனால் 2020 கொரனா பெரும் தொற்று மற்றும் 2024 இந்தியப் பொதுத் தேர்தல் காரணமாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளவில்லை.
கணக்கெடுப்பு நடைமுறை
மக்கள் தொகை கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக நடைபெறும். மார்ச் 1 முதல் 30 செப்டம்பர் வரையிலான முதல் கட்ட கணக்கெடுப்பின் போது குடியிருப்பு வீடுகள் மற்றும் வணிகக் கட்டிடங்கள் கணக்கெடுப்பின் போது, அறைகளின் எண்ணிக்கை, கட்டிட உரிமை நிலைமை, கட்டிடம் கட்டுவதற்கான கட்டுமான பொருட்கள் வகை, வீடு அல்லது வணிகக் கட்டிடத்திற்கான நீர் ஆதாரம், மின்சாரம், கழிப்பறை வகை, சமையல் எரிபொருள் வகை, குடும்பத் தலைவர், குடும்ப உறுப்பினர்கள், வீட்டில் பயன்படுத்தும் தொலைக்காட்சி, அலைபேசி, மோட்டார் வாகனங்கள் போன்ற மின்னணு, மோட்டார் மற்றும் மின்சார சாதனங்கள் போன்ற தரவுகள் சேரிக்கப்ப்படும்.
இரண்டாம் கட்டத்தில் தனிநபர் தரவுகளான பெயர், வயது, பாலினம், பிறந்த நாள், குடும்பத் தலைவருடனான உறவு, திருமண நிலை, கல்வி, தொழில், சமயம், சாதி/பழங்குடி, மாற்றுத் திறனாளி நிலை, புலம்பெயர்ந்த வரலாறு போன்ற தரவுகள் சேகரிக்கப்படும்.[5] வீடற்றவர்களின் தரவுகளும் சேகரிக்கப்படும்.
Remove ads
சிறப்பம்சங்கள்
2027 மக்கள் தொகை கணக்கு அடிப்படையில் நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை மறுவரையறை செய்யப்படும். மேலும் இந்திய நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் பட்டியல் சமூகத்தவர்களுக்கான தொகுதிகளும் மறுவரை செய்யும் வாய்ப்புகளும் உள்ளது.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads