2024 இந்தியப் பொதுத் தேர்தல்
18வது மக்களவைக்கான தேர்தல் From Wikipedia, the free encyclopedia
Remove ads
2024 இந்தியாவின் பொதுத் தேர்தல் 18-ஆவது மக்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக இந்தியாவில் 2024 ஏப்ரல் 19 முதல் 2024 சூன் 1 வரை நடைபெற்றது.[2] ஏழு கட்டங்களாக நடைபெற்ற இத்தேர்தலின் முடிவுகள் 2024 சூன் 4 அன்று அறிவிக்கப்பட்டது.[3][4]
1.4 பில்லியன் மக்கள் தொகையில் 968 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றனர், இது மொத்த மக்கள் தொகையில் 70% க்கு சமம்.[5][6][7] 64.2 கோடி (642 மில்லியன்) வாக்காளர்கள் தேர்தலில் பங்கேற்றனர், இவர்களில் 31.2 கோடி (312 மில்லியன்) பேர் பெண்கள், இது பெண் வாக்காளர்களின் அதிகபட்ச பங்கேற்பு ஆகும்.[8][9] ஏறத்தாழ 10 இலட்சம் வாக்குச் சாவடிகளில் 5.5 இலட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. ஏறத்தாழ ஒன்றரை கோடி தேர்தல் பணியாளர்களும் பாதுகாப்புப் படை வீரர்களும் தேர்தல் நடத்தையை நிர்வகிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இது வரலாற்றில் இதுவரை இல்லாத மிகப் பெரிய தேர்தலாகும், முந்தைய தேர்தலை விஞ்சி, 44 நாட்கள் நீடித்தது, 1951-52 பொதுத் தேர்தலுக்குப் பிறகு இது இரண்டாவது முறையாகும்.
2019, 2014 தேர்தல்களில் நடப்புப் பிரதமர் நரேந்திர மோதியின் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி (பாசக) அறுதிப்பெரும்பான்மை-குறைந்தபட்சம் 272 இடங்களைப் பெற்று ஆட்சியமைத்த நிலையில், தொடர்ந்து மூன்றாவது முறையாக நரேந்திர மோதி போட்டியிட்டார். இந்திய தேசிய காங்கிரசு உட்படப் பல பிராந்தியக் கட்சிகளால் 2023 இல் உருவாக்கப்பட்ட "இந்தியா" என அழைக்கப்படும் இந்தியத் தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணி முதன்மையான எதிர்க்கட்சியாக இருந்தது. மோதியின் பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) வெறுப்புப் பேச்சுகள் மீது நடவடிக்கை எடுக்காததால் தேர்தல் விமர்சிக்கப்பட்டது,[10] மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் (EVM) சில இடங்களில் செயலிழந்தது,[11][12] பாஜக தனது அரசியல் எதிரிகளை அடக்கியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.[13]
ஆந்திரப் பிரதேசம், அருணாசலப் பிரதேசம், ஒடிசா, சிக்கிம் ஆகிய மாநிலங்களின் சட்டப் பேரவைத் தேர்தல்களும், 12 சட்டப் பேரவைகளில் உள்ள 25 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களும் பொதுத் தேர்தலுடன் ஒரே நேரத்தில் நடைபெற்றன.
மோதியின் தேசிய ஜனநாயகக் கூட்டணி, மக்களவையில் 543 இடங்களில் 293 இடங்களைப் பெற்றாலும், எதிர்க்கட்சிகள் தொடக்கத்தில் கணித்ததை விட அதிக இடங்களைப் பெற்றதால், பாஜக அதன் பெரும்பான்மையை இழந்தது. எதிர்க்கட்சிகளின் இந்தியத் தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணி (இந்தியா) 235 இடங்களைப் பெற்றது, இந்திய தேசிய காங்கிரசு 99 இடங்களைப் பெற்றது.[14][15][16]
முக்கிய ஊடகங்களின் கருத்துக் கணிப்புகள் பாசக மற்றும் அதன் கூட்டணியான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு (என்டிஏ) தீர்க்கமான வெற்றியைக் கணித்திருந்தன. இருப்பினும், பாசக தனித்து 240 இடங்களை மட்டுமே வென்றது, இது 2019 இல் அக்கட்சி தனித்துப் பெற்ற 303 இடங்களிலிருந்து குறைந்தது, அத்துடன் மக்களவையில் அதன் தனிப்பெரும்பான்மையையும் இழந்தது, அதேவேளை தேசிய ஜனநாயகக் கூட்டணி ஒட்டுமொத்த 543 மக்களவை இடங்களில் 293 இடங்களைப் பெற்று அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றது.[17] இந்தியாக் கூட்டணி எதிர்பார்ப்புகளையும் மீறி, 234 இடங்களைப் பெற்றது, இவற்றில் 99 இடங்களை காங்கிரசு தனித்து வென்றது, 10 ஆண்டுகளில் முதல் முறையாக இக்கட்சி அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சி என்ற இடத்தைப் பிடித்தது.[18][19][20] மக்களவையில் ஏழு சுயேச்சைகளும், அணிசேராக் கட்சிகளின் பத்து வேட்பாளர்களும் வெற்றி பெற்றனர்.[21][22][23] 2024 சூன் 7 அன்று, இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு 293 மக்களவை உறுப்பினர்களின் ஆதரவை நரேந்திர மோதி உறுதிப்படுத்தினார்.[24] 2024 சூன் 9 அன்று நரேந்திர மோதி மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றார்.[25] முதல் முறையாக ஒரு கூட்டணி அரசாங்கத்திற்கு இவர் தலைமை தாங்கினார்,[26] ஆந்திரப் பிரதேசத்தின் தெலுங்கு தேசம் கட்சி, பீகாரின் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய பிராந்தியக் கட்சிகள் மோதி அரசின் இரண்டு முக்கிய பங்காளிகளாக உருவெடுத்தன.[27][28][29]
Remove ads
பின்னணி
பதினேழாவது மக்களவையின் பதவிக்காலம் 2024 சூன் 16 முடிவடைந்தது.[30] முந்தைய பொதுத் தேர்தல் 2019 ஏப்ரல்-மே மாதங்களில் நடத்தப்பட்டன. தேர்தலுக்குப் பிறகு, பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, தொடர்ந்து இரண்டாவது முறையாக நரேந்திர மோதி தலைமையில் நடுவண் அரசை அமைத்தது.[31]
தேர்தல் முறை
இந்திய அரசியலமைப்பின் பிரிவு 83 இன் படி ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை மக்களவைக்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும். அனைத்து 543 தொகுதிகளிலிருந்தும் மக்களவைக்கு ஒவ்வொரு உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். ஒவ்வொரு தொகுதியிலும் அதிக வாக்குகளைப் பெற்ற வேட்பாளர் அந்த குறிப்பிட்ட தொகுதியின் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்.[32] 2020 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட அரசியலமைப்பின் 104வது திருத்தம் ஆங்கிலோ-இந்திய சமூகத்திற்கு மக்களவையில் ஒதுக்கப்பட்டிருந்த இரண்டு இடங்களை ரத்து செய்தது.[33]
இந்த தேர்தலில் 18 வயதுக்கு மேற்பட்ட இந்தியக் குடிமக்கள் வாக்களிக்க தகுதியானவர்கள். தகுதியான வாக்காளர்கள் குறிப்பிட்ட தொகுதியில் குடியிருத்தல் அல்லது வாக்களிக்கப் பதிவு செய்திருத்தல் வேண்டும். தேர்தல் நாளின் போது வாக்களிக்க இந்திய தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட வாக்காளர் அடையாள அட்டை அல்லது செல்லுபடியாகும் மற்ற அடையாள அட்டைகளில் ஏதேனும் ஒன்று கட்டாயமாக இருக்க வேண்டும்.[34] குறிப்பிட்ட குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்ட சிலருக்கு மற்றும் சிறையிலிருப்பவர்களுக்கு வாக்களிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. வேறு நாட்டின் குடியுரிமை வைத்திருக்கும் எவராலும் வாக்களிக்க இயலாது.[35] இந்த தேர்தலில் ஏறத்தாழ 96.8 கோடி மக்கள் வாக்களிக்க தகுதி பெற்றனர்.[36][37][38]
மார்ச் 2024 இல், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் பயன்பாட்டை தடை செய்யவும், காகித வாக்குச்சீட்டுகள் மற்றும் கையில் எண்ணும் முறைக்கு மாறவும் உத்தரவு பிறப்பிக்குமாறு காங்கிரசு கட்சி தாக்கல் செய்த மனுவை இந்திய உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.[39] இந்தத் தேர்தலில் ஏறத்தாழ 10 இலட்சம் வாக்குச் சாவடிகளில் 5.5 இலட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. ஏறத்தாழ ஒன்றரை கோடி தேர்தல் பணியாளர்கள் மற்றும் பாதுகாப்புப் படை வீரர்கள் தேர்தல் நடத்தையை நிர்வகிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.[40]
Remove ads
தேர்தல் அட்டவணை

- பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளரின் மரணம் காரணமாக மத்தியப் பிரதேசத்தில் உள்ள பெதுல் தொகுதியில் தேர்தல் 26 ஏப்ரல் 2024 (கட்டம் 2) இருந்து 7 மே 2024 ஆக (கட்டம் 3) மாற்றப்பட்டது.[41]
- மணிப்பூரில் உள்ள வெளி மணிப்பூர் தொகுதியில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டது.[42]
Remove ads
கட்சிகள் மற்றும் கூட்டணிகள்
தேசிய அளவிலான
தேசிய ஜனநாயகக் கூட்டணி
இந்தியத் தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணி
கூட்டணிக் கட்சிகளுக்கிடையேயான போட்டி
பிற கட்சிகள்/கூட்டணிகள்
Remove ads
வாக்களிப்பு வீதம்
Remove ads
இறுதி முடிவுகள்
முதல் சுற்றைத் தொடர்ந்து, குசராத்தில் உள்ள சூரத் தொகுதியின் வேட்பாளரான முகேசு தலால், மற்ற வேட்பாளர்கள் நிராகரிக்கப்பட்டு மீளப் பெறப்பட்டதைத் தொடர்ந்து போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து, பாசக தனது முதல் இடத்தை வென்றது.[47][48] போட்டி வேட்பாளர்கள் இல்லாத காரணத்தால் தேர்தல் முடிவுகள் இரண்டு வாரங்களுக்கு முன்பே தேர்தல் ஆணையம் சான்றளித்ததால், அந்தத் தொகுதியில் வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை.[49]
ஒட்டுமொத்த தேர்தல் முடிவு நரேந்திர மோதிக்கு ஒரு "அதிர்ச்சி" என்று விமர்சிக்கப்பட்டது,[50][51] பாசக 400 இடங்களை வெல்லும் என்று எதிர்பார்த்ததை விடக் குறைந்துவிட்டது.[52] தேர்தலுக்கு முந்தைய கணிப்புகள் பாசக-விற்கு அமோகப் பெரும்பான்மை கிடைக்கும் என்றாலும், தேர்தல் நாளன்றைய கணிப்புகளை விட இந்தியக் கூட்டமைப்பு மிகவும் சிறப்பாக செயல்பட்டது,[53] உத்தரப் பிரதேசம், மகாராட்டிரம், மேற்கு வங்காளம் போன்ற முக்கிய மாநிலங்களில் அது எதிர்பார்த்ததை விடப் பெரும் வெற்றியடைந்தது.[54] மக்களவையில் என்.டி.ஏ பெரும்பான்மையைத் தக்கவைக்க, சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆந்திராவைத் தளமாகக் கொண்ட தெலுங்கு தேசம் கட்சி, நிதிஷ் குமார் தலைமையிலான பீகாரைச் சேர்ந்த ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் பெற்ற 28 தொகுதிகளை பாசக நம்ப வேண்டியிருந்தது.[55][56][57]
கட்சி/கூட்டணி வாரியாக முடிவுகள்
மாநிலம் அல்லது ஒன்றிய ஆட்புலங்கள் வாரியாக
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads