2027 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

2027 ஐசிசி ஆண்கள் துடுப்பாட்ட உலகக்கிண்ணம் (2027 ICC Men's Cricket World Cup) என்பது துடுப்பாட்ட உலகக்கிண்ணத்தின் 14-ஆவது பதிப்பாகும், இது பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையினால் ஒழுங்கு செய்யப்பட்டு நான்காண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத் தொடர் ஆகும். இத்தொடரை 2027 அக்டோபர் முதல் நவம்பர் வரை தென்னாப்பிரிக்கா, சிம்பாப்வே, நமீபியா ஆகிய நாடுகள் பொறுப்பேற்று நடத்துகின்றன.[1] இது தென்னாப்பிரிக்காவும் சிம்பாப்வேயும் இணைந்து நடத்தும் இரண்டாவது உலகக்கிண்ணப் போட்டியாகும், முன்னதாக 2003 பதிப்பை இருநாடுகளும் இணைந்து நடத்தின. நமீபியா முதல்தடவையாக உலகக்கிண்ணத்தை நடத்துகிறது. இத்தொடரில் போட்டியிடும் அணிகளின் எண்ணிக்கை 14 ஆக அதிகரிக்கப்படும்.[2] அத்துடன் 2003 உலகக்கிண்ணத்தின்போது பயன்படுத்தப்பட்ட அதே வடிவமைப்பை இது கொண்டிருக்கும்.[3]

விரைவான உண்மைகள் நாட்கள், நிர்வாகி(கள்) ...
Remove ads

தகுதி

Thumb
2027 உலகக்க்கிண்ணத்திற்கான தகுதிப் பாதை.

ஐசிசி பன்னாட்டு ஒருநாள் தரவரிசையில் உள்ள முதல் எட்டு அணிகளுடன் தென்னாப்பிரிக்கா, சிம்பாப்வே அணிகள் (இணை நடத்துநர்கள்) போட்டிக்கு நேரடியாகத் தகுதி பெறும், மீதமுள்ள நான்கு இடங்கள் 2026 இல் நடைபெறவிருக்கும் உலகக்கிண்ணத் தகுதிச் சுற்றில் தீர்மானிக்கப்படும். நமீபியா அதன் துடுப்பாட்ட வரலாற்றில் முதல் முறையாக போட்டியை இணைந்து நடத்தும் என்றாலும், அது முழு ஐசிசி உறுப்பினராக இல்லாததால் அதற்கு ஒரு இடம் உத்தரவாதம் அளிக்கப்பட மாட்டாது, இதன் விளைவாக நமீபியா தகுதி-காண் போட்டிகளில் பங்குபற்ற வேண்டும்.[4]

மேலதிகத் தகவல்கள் தகுதிக்கான வழிமுறைகள், நாள் ...
Remove ads

வடிவமைப்பு

போட்டித்தொடர் ஏழு அணிகள் கொண்ட இரண்டு குழுக்களைப் பயன்படுத்தும், ஒரு குழுவில் உள்ள ஒவ்வொரு அணியும் ஒரே குழுவில் உள்ள மற்ற அணிகளுடன் ஒரு முறை விளையாடும். ஒவ்வொரு குழுவிலும் முதல் மூன்று அணிகள் சூப்பர் ஆறு நிலைக்கு முன்னேறும், அதைத் தொடர்ந்து அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டி இடம்பெறும்.[5] இந்த வடிவம் முன்பு 2003 பதிப்பில் பயன்படுத்தப்பட்டது.

குழு நிலைப் போட்டிகள்

குழு அ

மேலதிகத் தகவல்கள் நிலை, அணி ...

முதல் மூன்று அணிகள் சூப்பர் ஆறுகளுக்குத் தகுதி பெறும்.
     சுப்பர் ஆறிற்கு முன்னேற்றம்

குழு ஆ

மேலதிகத் தகவல்கள் நிலை, அணி ...

முதல் மூன்று அணிகள் சூப்பர் ஆறுகளுக்குத் தகுதி பெறும்.
     சுப்பர் ஆறிற்கு முன்னேற்றம்

Remove ads

சூப்பர் ஆறு

சூப்பர் ஆறு கட்டத்திற்கு தகுதி பெறும் அணிகள் மற்றக் குழுவில் உள்ள அணிகளுக்கு எதிராக மட்டுமே விளையாடும்; அதே குழுவிலிருந்து மற்ற அணிகளுக்கு எதிரான முடிவுகள் இந்த நிலைக்குக் கொண்டு செல்லப்படும்.

மேலதிகத் தகவல்கள் முன்னோக்கி கொண்டு வரப்பட்ட புள்ளிகள், முடிவுகள் ...
மேலதிகத் தகவல்கள் நிலை, அணி ...

தரவரிசையில் முதலிடத்தைப் பிடிக்கும் நான்கு அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெறும்.
     அரையிறுதிக்கு முன்னேற்றம்

Remove ads

ஒற்றை வெளியேற்ற நிலை

  அரையிறுதிகள் இறுதி ஆட்டம்
                 
1  சூப்பர் ஆறு 1-ஆவது இடம்  
4  சூப்பர் ஆறு 4-ஆவது இடம்  
     அரையிறுதி 1-இன் வெற்றியாளர்
   அரையிறுதி 2-இன் வெற்றியாளர்
2  சூப்பர் ஆறு 2-ஆவது இடம்
3  சூப்பர் ஆறு 3-ஆவது இடம்  

அரையிறுதிகள்

நவம்பர் 2027
சூப்பர் 6 1-ஆவது இடம்
சூப்பர் 6 4-ஆவது இடம்

நவம்பர் 2027
சூப்பர் 6 2-ஆவது இடம்
சூப்பர் 6 3-ஆவது இடம்

இறுதி

நவம்பர் 2027
அரையிறுதி 1-இன் வெற்றியாளர்
அரையிறுதி 2-இன் வெற்றியாளர்
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads