2028 கோடைக்கால ஒலிம்பிக் துடுப்பாட்டப் போட்டிகள்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
2028 கோடைக்கால ஒலிம்பிக் துடுப்பாட்டப் போட்டிகள், (Cricket at the 2028 Summer Olympics), 2028 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் மீண்டும் துடுப்பாட்டம் சேர்க்கப்பட்டுள்ளது. இறுதியாக 1900 கோடைக்கால ஒலிம்பிக் போட்டியில் துடுப்பாட்டப் போட்டிகள் நடத்தப்பட்டது[1]. பின் ஒலிம்பிக் போட்டிகளில் துடுப்பாட்ட விளையாட்டு தடை செய்யப்பட்டது. 128 ஆண்டுகள் கழித்து மீண்டும் லாஸ் ஏஞ்சலஸ் கவுண்டியில் உள்ள பொமோனா நகரத்தில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளில் துடுப்பாட்ட போட்டிகள் நடத்தப்படுகிறது.
Remove ads
போட்டி விவரம்
2028 கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளில் துடுப்பாட்டப் போட்டிகள் 2028 சூலை 20 மற்றும் 29ம் தேதிகளில் பதக்கத்துக்கான போட்டிகள் நடைபெறுகிறது . பெண்கள் துடுப்பாட்ட பதக்கத்துக்கான போட்டிகள் சூலை 20 மற்றும் ஆண்களுக்கான துடுப்பாட்ட பதக்கப் போட்டிகள் சூலை 29 நாட்களில் நடைபெறும். இத்துடுப்பாட்ட போட்டிகள் டி20 முறையில் நடத்தப்படும் என பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை அறிவித்துள்ளது.[2][3]
போட்டிகள் நடைபெறுமிடம்
அனைத்து துடுப்பாட்ட போட்டிகள் லாஸ் ஏஞ்சலஸ் நகரத்திலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பொமோனா நகரத்தின் அருகில் உள்ள ஃபேர்பிளக்ஸ் விளையாட்டுத் திடலில் நடைபெறும் என ஒலிம்பிக் குழு அறிவித்துள்ளது.[4]
பங்கு பெறும் நாடுகள்
2028 ஒலிம்பிக் துடுப்பாட்டப் போட்டிகளில் 12 நாடுகளைச் சேர்ந்த 180 துடுப்பாட்டாளர்கள் கலந்து கொள்கின்றனர்.
வாகையாளர்கள்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads