2032 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்

From Wikipedia, the free encyclopedia

2032 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்
Remove ads

2032 கோடை ஒலிம்பிக்குப் போட்டிகள் (2032 Summer Olympics, அதிகாரபூர்வமாக 35-வது ஒலிம்பியாது போட்டிகள் (Games of the XXXV Olympiad), பொதுவாக பிரிசுபேன் 2032 (Brisbane 2032) என்பது 2032 சூலை 23 முதல் ஆகத்து 8 வரை ஆத்திரேலியாவின் குயின்சுலாந்து மாநிலத் தலைநகர் பிரிசுபேனில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள பன்னாட்டுப் பல்துறை விளையாட்டுப் போட்டிகள் ஆகும்.[1] 2032 போட்டிகளை நடத்துவதற்கான வெற்றிகரமான ஏலம் பன்னாட்டு ஒலிம்பிக் குழுவால் 2021 சூலை 21 அன்று 2020 தோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன்னதாக அறிவிக்கப்பட்டது.[2] 2021 பிப்ரவரி 24 அன்று பிரிஸ்பேன் நகரம் முதன்மை விருப்பு நகரமாக அறிவிக்கப்பட்டது, 2021 சூலை 10 அன்று பன்னாட்டு ஒலிம்பிக் நிர்வாகக் குழுவின் முறையான அங்கீகாரத்தைப் பெற்றது.[3][4][5] புதிய ஏல நடைமுறைகளின் கீழ் ஒலிம்பிக் போட்டியை நடத்தத் தெரிவான முதல் நகரமாகவும், 1984 லாஸ் ஏஞ்சலசு போட்டிகளுக்குப் பின்னர் போட்டியின்றி வென்ற முதல் நகரமாகவும் பிரிஸ்பேன் ஆனது.[1]

விரைவான உண்மைகள் நடத்தும் நகரம், துவக்கம் ...

இது ஆத்திரேலியாவில் நடைபெறும் மூன்றாவது கோடை ஒலிபிக்குப் போட்டியாகும். முன்னதாக 1956 இல் மெல்பேர்ண் நகரமும், 200-ஆம் ஆண்டில் சிட்னி நகரமும் கோடைப் போட்டிகளை நடத்தியிருந்தன.[6]

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads