1984 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
1984 கோடைகால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் சூலை 28 முதல் ஆகத்து 12 வரை நடைபெற்ற ஒலிம்பிக் ஆகும். அதிகாரபூர்வமாக இது XXIII ஒலிம்பியாட் என அழைக்கப்பட்டது. இப்போட்டியை நடத்த லாஸ் ஏஞ்சலஸ் நகருடன் போட்டியிட்ட தெக்ரான் ஈரானிய அரசியல் சூழலால் போட்டியிலிருந்து விலகிக்கொண்டதால் லாஸ் ஏஞ்சலஸ் நகருக்கு போட்டியில்லாமல் பன்னாட்டு ஒலிம்பிக் ஆணையகத்தால் வழங்கப்பட்டது. 1932ம் ஆண்டும் லாஸ் ஏஞ்சலஸ் ஒலிம்பிக் போட்டியை நடத்தியுள்ளது. இது லாஸ் ஏஞ்சலசுக்கு இரண்டாவது முறையாகும்.
1980ம் ஆண்டு மாசுக்கோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியை அமெரிக்கா புறக்கணித்ததால் சோவியத் ஒன்றியமும் பல பொதுவுடமை நாடுகளும் இப்போட்டியை புறக்கணித்தன. உருமேனியா இப்போட்டியில் பங்கு கொண்டது. வேறுபல காரணங்களால் ஈரான், லிபியா, அல்பேனியா போன்றவை இப்போட்டியைப் புறக்கணித்தன.
பாதுகாப்பு குறைபாட்டாலும், அமெரிக்க ஆதிக்க மனப்பான்மையாலும் இப்போட்டியைப் புறக்கணிக்க போவதாக சோவியத் ஒன்றியம் மே 8, 1984 அன்று கூறியது. போட்டியைப் புறக்கணித்த நாடுகள் நல்லுறவு போட்டி என்று ஒன்றை சூலை முதல் செப்தெம்பர் வரை நடத்த முற்பட்டனர். ஒலிம்பிக் நடந்த நாட்களில் நல்லுறவு போட்டியில் ஒரு நிகழ்வும் நடக்கவில்லை. அப்போட்டி ஏற்பாட்டாளர்கள் குறிப்பாக சோவியத் ஒன்றியம் இப்போட்டி (நல்லுறவு) ஒலிம்பிக்கிற்கு மாற்றாக நடத்தப்படவில்லை என்றும் அமெரிக்காவின் சிறந்த வீரர்களும் சோவியத் ஒன்றியத்தின் சிறந்த வீரர்களும் 1986 ம் ஆண்டு மாசுகோவில் நல்லிணக்க போட்டியில் கலந்து கொள்ளலாம் என்றும் கூறியது.
1976ல் மொண்ட்ரியாலிலும் 1980ல் மாசுக்கோவிலும் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் போட்டியை நடத்தியவர்களுக்கு போட்டியினால் வருமானம் குறைவாகக் கிடைத்தது. லாஸ் ஏஞ்சலஸ் நகரில் நடந்த போட்டியில் ஏற்கனவே உள்ள அரங்குகளே பயன்படுத்தப்பட்டன. நீச்சல் போட்டிக்காக மட்டும் புதிய அரங்கம் கட்டப்பட்டது. ஆனாலும் அதற்குரிய செலவு முழுவதும் விளம்பரதாரர்களால் ஏற்கப்பட்டது. இதனால் இப்போட்டிக்கான செலவு பெரிதும் குறைவாக இருந்தது. இப்போட்டியினால் கிடைத்த லாபத்தில் சிறிது தென் கலிபோர்னியாவில் இளையோரிடையே விளையாட்டை ஊக்குவிக்கப் பயன்படுத்தப்பட்டது. 1984 ஒலிம்பிக் பொருளாதார அளவில் வெற்றியடைந்த போட்டியாகும்.
இப்போட்டியின் அதிகாரபூர்வ முகடியாக "சாம் ஒலிம்பிக் கழுகு" அறிவிக்கப்பட்டது.
Remove ads
நகரம் தெரிவு
1984 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை நடத்த லாஸ் ஏஞ்சலசும் தெக்ரானும் போட்டியிட்டன. 1976, 1980ம் ஆண்டு போட்டிகளை நடத்த லாஸ் ஏஞ்சலஸ் போட்டியிட்டு அதில் வெற்றி கிடைக்கவில்லை. 1944ம் ஆண்டிலிருந்து அனைத்து போட்டிகளுக்கும் அமெரிக்க ஒலிம்பிக் ஆணையகம் போட்டியிட்டாலும் 1932க்குப் பிறகு அதற்கு வெற்றி கிடைக்கவில்லை.[2] உள்நாட்டு அரசியல் சூழலால் தெக்ரான் போட்டியிலிருந்து விலகினதால் லாஸ் ஏஞ்சலஸ் நகரம் மட்டுமே போட்டியில் இருந்தது. அதனால் இந்நகரம் 1984 கோடைக்கால ஒலிம்பிக் போட்டியை நடத்த போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டது..
Remove ads
பதக்கப் பட்டியல்
போட்டியிட்டவற்றில் 47 நாடுகள் பதக்கம் வென்றன.
போட்டியை நடத்தும் நாடு
முதன்முறையாக தங்கம் வெல்லும் நாடு
முதன்முறையாக பதக்கம் வெல்லும் நாடு
Remove ads
முதன்முறை கலந்துகொண்ட நாடுகள்


140 நாடுகள் இப்போட்டியில் கலந்துகொண்டன. பகுரைன், வங்காளதேசம், பூட்டான், பிரித்தானிய கன்னித் தீவுகள், எக்குவடோரியல் கினி, காம்பியா, சீபூத்தீ, சமோவா, மூரித்தானியா, மொரிசியசு, வடக்கு யேமன், ஓமான், கத்தார், ருவாண்டா, சொலமன் தீவுகள், கிரெனடா, தொங்கா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவை முதன்முறையாக ஒலிம்பிக்கில் பங்கேற்றன. சீனா 1952ம் ஆண்டுக்குப் பின் பங்கேற்கிறது. 1952ம் ஆண்டு சீனா சீன தைபே என்ற பெயரில் பங்கேற்றது.
1979ல் ஆப்காத்தானில் சோவியத் ஒன்றியம் படையெடுப்பை நிகழ்த்தியதைக் கண்டித்து அமெரிக்கா தலைமையில் பல நாடுகள் மாசுக்கோவில் நடந்த 1980 கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளைப் புறக்கணித்தன. அதற்குப் பதிலடியாக சோவியத் ஒன்றியம் தலைமையில் வார்சா உடன்பாடு நாடுகளும் மற்ற பொதுவுடமை, சோசலிச நாடுகளும் 1984 கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளை புறக்கணித்தன. இப்புறக்கணிப்பில் மூன்று சோசலிச நாடுகளான 1984 குளிர்கால ஒலிம்பிக்கை நடத்தும் யுகோசுலோவியாவும், சீனாவும் உருமேனியாவும் கலந்துகொள்ளவில்லை. இதில் உருமேனியா வார்சா உடன்பாடு நாடாகும். இப்போட்டியில் உருமேனியா 20 தங்கம் உட்பட 53 பதக்கங்களை பெற்றது.
புறக்கணிப்பு செய்த நாடுகள்
சோவியத் ஒன்றியம்
பல்கேரியா
கிழக்கு ஜேர்மனி
மங்கோலியா
வியட்நாம்
லாவோஸ்
செக்கோசிலோவாக்கியா
ஆப்கானித்தான்
அங்கேரி
போலந்து
கியூபா
- தெற்கு யேமன்
வட கொரியா
எதியோப்பியா
அங்கோலா
மற்ற 3 நாடுகள்
- இம்மூன்று நாடுகளும் வேறு காரணங்களால் போட்டியில் பங்கேற்கவில்லை.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads