2020 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்
சப்பான், தோக்கியோவில் 2021 நடைபெறவிருக்கும் பன்னாட்டு பல்துறை விளையாட்டுப் போட்டிகள் ஆகும் From Wikipedia, the free encyclopedia
Remove ads
2020 கோடை ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் (2020 Summer Olympics, 2020年夏季オリンピック), அலுவல் முறையில் 32வது ஒலிம்பியாட் விளையாட்டுகள் (Games of the XXXII Olympiad), தோக்கியோ 2020 (Tokyo 2020)|東京2020}}, என்பது சப்பான், தோக்கியோவில் 2021 சூலை 23 முதல் ஆகத்து 8 வரை நடைபெற்ற பன்னாட்டு பல்துறை விளையாட்டுப் போட்டிகள் ஆகும். இப்போட்டிகள் முதலில் 2020 சூலையில் நடத்தப்படவிருந்தது, கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக இது தள்ளிப்போடப்பட்டு, பெரும்பாலும் பார்வையாளர்கள் இன்றி நடைபெற்றன. 2021 இல் இப்போட்டிகள் நடைபெற்றாலும், இந்நிகழ்வு சந்தைப்படுத்தல், மற்றும் வர்த்தக நோக்கங்களுக்காக தோக்கியோ 2020 என்றே அழைக்கப்பட்டது.[2] ஒலிம்பிக் போட்டியொன்று தள்ளிப்போடப்பட்டது ஒலிம்பிக் வரலாற்றில் இதுவே முதல் தடவையாகும்.[3] மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டிகள் 2021 ஆகத்து 24 முதல் செப்டம்பர் 5 வரை நடைபெறுகின்றன.[4]
2013 செப்டம்பர் 7 இல் அர்கெந்தீனா, புவெனஸ் ஐரிஸ் நகரில் நடைபெற்ற 125-வது பன்னாட்டு ஒலிம்பிக் குழுக் கூட்டத்தில் 2020 போட்டிகளை நடத்தும் நாடாக தோக்கியோ நகரம் தேர்ந்தெடுக்கப்பட்டது.[5] தோக்கியோ இரண்டாவது தடவையாக கோடைக்காலப் போட்டிகளை நடத்தியது. முன்னதாக 1964 போட்டிகள் தோக்கியோவில் நடைபெற்றன. ஆசியாவில் இரண்டு தடவைகள் ஒலிம்பிக் போட்டிகளை நடத்திய நாடாக தோக்கியோ விளங்குகிறது. மொத்தமாக சப்பான் நான்காவது தடவையாக ஒலிம்பிக் போட்டிகளை நடத்துகிறது. சப்போரோ, நகானோ ஆகிய நகரங்களில் குளிர்காலப் போட்டிகள் முறையே 1972, 1998 ஆம் ஆண்டுகளில் நடந்தன. சப்பான் 1940 கோடைகாலப் போட்டிகளை நடத்தத் தெரிவு செய்யப்பட்டிருந்தாலும், 1938 இல் போட்டிகளை நடத்துவதில் இருந்து விலகிக்கொண்டது.
Remove ads
விளையாட்டுகள்
விளையாட்டுப் போட்டிகள்
2020 கோடை ஒலிம்பிக்கில் 33 விளையாட்டுகளில் 50 பிரிவுகளில் 339 நிகழ்வுகள் நடைபெற்றன.
- நீர் விளையாட்டுகள்
- ஒருங்கிசைந்த நீச்சல் (2)
- நீரில் பாய்தல் (8)
- மராத்தான் நீச்சல் (2)
- நீச்சற் போட்டி (35)
- நீர்ப் பந்தாட்டம் (2)
- வில்வித்தை (2)
- தடகள விளையாட்டு (48)
- இறகுப்பந்தாட்டம் (5)
- அடிபந்தாட்டம்
- அடிபந்தாட்டம் (1)
- மென்பந்தாட்டம் (1)
- கூடைப்பந்தாட்டம்
- கூடைப்பந்தாட்டம் (2)
- 3×3 கூடைப்பந்தாட்டம் (2)
- குத்துச்சண்டை (13)
- கேனோயிங்
- சலாலோம்(4)
- இசுபிரிண்ட் (12)
- மிதிவண்டி விளையாட்டு
- BMX கட்டற்ற (2)
- BMX பந்தயம் (2)
- மலையேற்ற பைக்கிங் (2)
- சாலை மிதிவண்டி (4)
- பந்தையப்பாதை மிதிவண்டி (12)
- குதிரையேற்றம்
- டிரச்ஸேஜ் சவாரி (2)
- குதிரை தேர்வு (2)
- குதித்தல் (2)
- வாள்வீச்சு (12)
- வளைதடிப் பந்தாட்டம் (2)
- கால்பந்தாட்டம் (2)
- குழிப்பந்தாட்டம் (2)
- சீருடற்பயிற்சிகள்
- கலைநயம் (14)
- சீரிசை (2)
- குதித்தெழு (2)
- எறிபந்தாட்டம் (2)
- யுடோ (15)
- கராத்தே
- காட்டா (2)
- குமித்தே (6)
- தற்கால ஐந்திறப்போட்டி (2)
- துடுப்பு படகோட்டம் (14)
- எழுவர் ரக்பி (2)
- பாய்மரப் படகோட்டம் (10)
- குறி பார்த்துச் சுடுதல் (15)
- தரையில் வழுக்கி விளையாட்டு (2)
- ஏறுதல் (விளையாட்டு)
- அலைச்சறுக்கு (2)
- மேசைப்பந்தாட்டம் (5)
- டைக்குவாண்டோ (8)
- டென்னிசு (5)
- நெடுமுப்போட்டி (3)
- கைப்பந்தாட்டம்
- உள்ளரங்க கைபந்தாட்டம் (2)
- கடற்கரை கைப்பந்தாட்டம் (2)
- பாரம் தூக்குதல் (14)
- மற்போர்
- கட்டற்ற (12)
- கிரேக்க-உரோமானிய (6)
Remove ads
பங்கேற்கும் நாடுகள்
205 தேசிய ஒலிம்பிக் குழுக்கள் மற்றும் பன்னாட்டு ஒலிம்பிக் குழுவிக் அகதிகள் ஒலிம்பிக் அணி போட்டிகளில் பங்கேற்றது. ஒவ்வொரு நாடுகளிலிருந்தும் பங்கேற்ற நபர்கள் விபரம்.
Remove ads
பதக்கப் பட்டியல்
* போட்டி நடத்தும் நாடு
Remove ads
இந்தியா வென்ற பதக்கங்கள்
2020 டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் இந்திய வீரர்கள மற்றும் வீராங்கனைகள் 1 தங்கம், 2 வெள்ளி மற்றும் 4 வெண்கலப் பதக்கங்கள் வென்றனர்.[7]
Remove ads
இதனையும் காண்க
குறிப்புகள்
- பொதுவான தடகள வீரர்கள் உருசியாவிலருந்து, ஆனால் இவர்கள் தேசிய அணியில் இடம் பெறமாட்டார்கள்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads