அசிட்டால்டிகைடு

வேதியல் சேர்மம் From Wikipedia, the free encyclopedia

Remove ads

அசிட்டால்டிகைடு (Acetaldehyde) (முறையான பெயர் எத்தனால்) என்பது CH3 CHO என்ற குறியீட்டைக் கொண்ட ஒரு கரிமச் சேர்மம் ஆகும், சில சமயங்களில் வேதியியல் நிபுணர்களால் MeCHO (Me = methyl) என சுருக்கமாக குறிப்பிடப்படுகிறது. சர்க்கரை வகைகள் ஆல்க்கால்களாக நொதிக்கும்பொழுது அசிட்டால்டிகைடு உடன் வினைபொருளாக உண்டாகிறது. எனவே நொதித்த திரவத்தில் இது அசிட்டால் வடிவத்தில் காணப்படுகிறது. பிராணிகளின் உயிரணுக்களில் நடக்கும் கார்போஹைடிரேட்டு வளிர்சிதை மாற்றத்தில் இந்த ஆல்டிஹைடும் கலந்து கொள்கிறது என்று கருதப்படுகிறது. சில சமயங்களில் இது சிறுநீரிலும் காணப்படுவதுண்டு.

விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...

தொழில் முறையில் அசிட்டால்டிகைடு இருமுறைகளில் தயாரிக்கப்படுகிறது. காற்றின் முன்னிலையிலோ அல்லது அதில்லாமலோ செம்பு வெள்ளி முதலிய சில உலோகங்களை ஊக்கிகளாகக் கொண்டு எதில்ஆல்ககாலுக்கு ஐடிரஜனை ஏற்றி இதைத் தயாரிக்கலாம். இரச உப்புக்களின் உதவியால் அசிட்டிலீன் தண்ணீரைக் கிரகிக்குமாறு செய்து இதைத் தயாரிக்கலாம்.

அசிட்டால்டிகைடு காரமான மணமுடைய திரவம் (கொதிநிலை 21). இது தண்ணீரில் எளிதில் கரைகிறது. இது எளிதில் கூட்டுறுப்பாகும் தன்மையுடையது. ஈரமற்ற ஆல்டிஹைடுக்கு ஒரு சொட்டு அடர் கந்தகாமிலத்தைச் சேர்த்தால் அது உடனே கொதிக்கத் தொடங்கி 124 கொதிநிலையுள்ள பாரால்டிஹைடு என்ற பெயருடைய கூட்டுறுப்பியாக (CH3 CHO)3 மாறுகிறது. குறைந்த வெப்ப நிலைகளில் மெட்டால்டிஹைடு என்ற திண்மக் கூட்டுறுப்பி உண்டாகிறது.

இவற்றை நீர்த்த கந்தகாமிலத்துடன் கொதிக்க வைத்து எளிதில் அசிட்டால்டிகைடாக மாற்றலாம். பாரால்டிஹைடு ஒரு தூக்க மருந்தாகவும், மெட்டால்டிஹைடு ஒரு திட எரி பொருளாகவும் பயன்பட்டு வந்தன. அசிட்டால்டிகைடிலிருந்து செயற்கை இரப்பர், அசிட்டிக அமிலம், அசிட்டோன் போன்ற பல கரிமப் பொருள்கள் தயாரிக்கப்படுவதால் தொழில் முறையில் இது மிகவும் முக்கியமானது.[10]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads