அண்ணா நகர் மேற்கு விரிவு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
அண்ணா நகர் மேற்கு விரிவு என்பது சென்னை மாநகராட்சியின் ஒரு பகுதி ஆகும்.
Remove ads
அமைவிடம்
இது சென்னை மத்திய இரயில் நிலையத்திற்கு 10 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு 12 கிலோமீட்டர் தொலைவிலும் மற்றும் சென்னை புறநகர் பேருந்து நிலையத்திற்கு 2 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. பாடி, கொரட்டூர், அண்ணா நகர் மேற்கு, முகப்பேர், நொளம்பூர், அயனம்பாக்கம், அத்திப்பட்டு மற்றும் கோயம்பேடு போன்ற பகுதிகள் அண்ணா நகர் மேற்கு விரிவை சுற்றி அமைந்துள்ளன.
நெடுஞ்சாலைகள்
அண்ணா நகர் மேற்கு விரிவிற்கு சென்னை-திருவள்ளூர் நெடுஞ்சாலை 1 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்த நெடுஞ்சாலையை கடக்கும் இடத்தில் பாடி சந்திப்பில் வட்ட வடிவ மேம்பாலம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அண்ணா நகர் மேற்கு விரிவுடன் உள்வட்ட சாலை செல்கிறது.
அஞ்சல் குறியீட்டு எண்
அண்ணா நகர் மேற்கு விரிவின் அஞ்சல் குறியீட்டு எண் 600101 ஆகும்.[3]
பாடசாலைகள்
அண்ணா நகர் மேற்கு பகுதியில் காணப்படும் பாடசாலைகளில் சில:
- எஸ்.பி.ஓ.ஏ ஜூனியர் பள்ளி
- எஸ்.பி.ஓ.ஏ மெட்ரிக் பள்ளி
- லியோ மெட்ரிக் பள்ளி
மருத்துவமனைகள்
அண்ணா நகர் மேற்கு விரிவு பகுதியில் காணப்படும் மருத்துவமனைகளில் சில:
- வீ கேர் மருத்துவமனை
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
