அதிர்ச்சி (மருத்துவம்)

From Wikipedia, the free encyclopedia

Remove ads

அதிர்ச்சி (ஒலிப்பு) அல்லது குருதிச்சுற்றோட்ட அதிர்ச்சி (Circulatory shock) என்பது குறைவான குருதிச்சுற்றோட்டத்தின் காரணத்தால் உயிரணுக்களின் அல்லது இழையங்களின் சுவாசத்துக்குத் (கலச்சுவாசம்) தேவையான பற்றுப்பொருள் போதியளவில் கிடைக்காமையால் ஏற்படும் உயிர்வாழ்வுக்கு அச்சமூட்டக்கூடிய மருத்துவ அவசர நிலைமைகளில் ஒன்றாகும்.[1] இதன் ஆரம்ப நிலையில் உடலுறுப்புக்களின் உயிரணுக்களுக்கு ஒட்சிசன் கலந்துள்ள குருதி போதிய அளவு கிடைப்பதில்லை.[2]

விரைவான உண்மைகள் ஐ.சி.டி.-10, ஐ.சி.டி.-9 ...

குருதிச்சுற்றோட்ட அதிர்ச்சி என அழைக்கப்படும் அதிர்ச்சியை உளத்துடன் தொடர்புபட்டு உணர்வெழுச்சியால் உண்டாகும் அதிர்ச்சியென நினைத்துக் குழம்புதலைத் தவிர்த்தல் வேண்டும், இவை நேரிடையாக ஒன்றுக்கொன்று தொடர்பு அற்றவை. குருதிச்சுற்றோட்ட அதிர்ச்சி உயிர்த் தீங்கு விளைவிக்கும் மருத்துவ அவசர நிலைமைகளுள் ஒன்றாகும். அதிர்ச்சி பல்வேறு ஈற்று விளைவுகளை உண்டாக்கலாம். எடுத்துக்காட்டாக, குருதி உயிர்வளிக் குறைவு, இதய நிறுத்தம் என்பன அடங்கும்.[3]

பொதுவான அதிர்ச்சியின் அறிகுறிகளாக தாழ் குருதியழுத்தம், உயர் இதயத்துடிப்பு, உடல் உறுப்புகளுக்கு போதியளவு குருதி கிடைக்காமையால் ஏற்படக்கூடிய அறிகுறிகள் (எ.கா: சிறுநீரகத்துக்கு குருதி வழங்கல் குறைவதால் குறைவான சிறுநீர் வெளியேற்றம்) போன்றவை உருவாகலாம். குருதியழுத்தத்தை மட்டும் வைத்து அதிர்ச்சியைக் கணிப்பிடலாகாது, ஏனெனில் குருதிச்சுற்றோட்ட அதிர்ச்சி உடையவருக்கு சிலவேளைகளில் குருதியழுத்தம் நிலையானதாகக் காணப்படலாம். [4]

Remove ads

காரணங்கள்

  1. உடலின் திரவத்தன்மை குறைகின்றபோது ஏற்படும் (வாந்தி, பேதி, எரிகாயம், இரத்தப் பெருக்கு)
  2. ஒவ்வாமை

உள்ளவர்களுக்கு ஏற்படலாம்.

முதல் உதவி

  1. வாந்தி பேதி உள்ள நோயாளர்களைத் தவிர எவருக்கும் உண்ணவோ குடிக்கவோ கொடுக்கவேண்டாம்.
  2. அதிர்ச்சிக்கு உள்ளானவரை கிடையாகப் படுக்க வைத்து இரண்டு கால்களையும் சிறிது உயர்த்தி வைத்தல் வேண்டும்.

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

உசாத்துணை

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads