அபிநந்தன் இராமானுஜம்
இந்திய ஒளிப்பதிவாளர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
அபிநந்தன் ராமானுஜம் (Abinandhan Ramanujam) தமிழ்நாட்டின் சென்னையைச் சேர்ந்த ஒரு இந்திய ஒளிப்பதிவாளர் ஆவார். இவர் மலையாளம், தமிழ் , பாலிவுட் படங்களில் பணியாற்றுகிறார்.[1]
ஆரம்ப கால வாழ்க்கை
அபிநந்தன் ராமானுஜம் சென்னையில் பிறந்தார். இவர் எல். வி. பிரசாத் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தில் தங்கப் பதக்கத்துடன் பட்டம் பெற்றார். பின்னர் இவர் கோயம்புத்தூர் ஜி. ஆர். தாமோதரன் அறிவியல் கல்லூரியில் காட்சி தொடர்பாடல் பாடத்தை பயின்றார். சிறுவயதிலிருந்தே அபிநந்தன் புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் கொண்டிருந்தார். இவரது தந்தை இராமானுஜம் ஒரு வங்கி அதிகாரியாக இருந்தார். அவர் எப்போதும் இவரை வேலையில் ஊக்குவித்தார். இவரது தந்தை வைத்திருந்த பழைய யாசிகா புகைப்படக் கருவியில் பயிற்சி செய்தார். இவரது தந்தை இவருக்கு வழிகாட்டியாக இருந்தார். பள்ளி, கல்லூரி நாட்களில், அபிநந்தன் பல திரைப்பட தயாரிப்பு போட்டிகளில் பங்கேற்றார்.
Remove ads
தொழில்
அபிநந்தனின் போஸ்ட்மேன் என்ற திரைப்படம் 2009இல் சிறந்த திரைப்படம் அல்லாத பிரிவில் தேசிய விருது பெற்றது. இயக்குநர் பிஜோய் நம்பியாரிடமிருந்து தனது முதல் வாய்ப்பை பெற்றார். படப்பிடிப்பைத் தவிர, அபிநந்தனுக்குப் பயணம் செய்வது பிடிக்கும். திரைப்படத் தயாரிப்பாளர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரியுடன் இவரது பணி மிகவும் பாராட்டப்பட்டது.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads