அமெரிக்காவின் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகளின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல் From Wikipedia, the free encyclopedia

அமெரிக்காவின் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகளின் பட்டியல்
Remove ads

அமெரிக்காவின் நீதித்துறையின் மிக உயர்ந்த நீதிமன்றமானது அமெரிக்காவின் உச்ச நீதிமன்றம் ஆகும். 1869 ஆம் ஆண்டின் நீதித்துறைச் சட்டத்தால் நிர்ணயிக்கப்பட்டபடி, அதன் நீதிபதிகளின் எண்ணிக்கையானது அமெரிக்காவின் தலைமை நீதிபதி மற்றும் எட்டு இணை நீதிபதிகள் அவார்கள். அவர்களில் ஆறு பேருக்கு குறையாமல் இருப்பது தான் அனுமதிக்கப்பட்ட அமர்வாகும். அரசியலமைப்பின் உறுப்பு II, பிரிவு 2, உட்பிரிவு 2 ன்படி, அமெரிக்காவின் ஜனாதிபதியானவர் உச்சநீதிமன்றத்திற்கு நீதிபதிகளை நியமிக்கும்போது, அமெரிக்காவின் செனட்டின் ஆலோசனை மற்றும் ஒப்புதலுடன் நியமிக்க முழுமையான அதிகாரத்தை அளிக்கிறது. நீதிபதிகள் ஆயுட்காலம் முழுவதும் நீதிபதியாக இருக்கவும் மற்றும் 2014 ஆம் ஆண்டு நிலவரப்படி தலைமை நீதிபதிக்கு ஆண்டுக்கு 255,500 அமெரிக்க டாலர்கள் ஊதியமாகவும், ஒவ்வொரு இணை நீதிபதிக்கும் ஆண்டுக்கு 244,400 அமெரிக்க டாலர் ஊதியமாகவும் நிர்ணயிக்கப்பட்ட சம்பளம் பெறுகின்றனர்.[2]

விரைவான உண்மைகள் அமெரிக்க ஐக்கியத்தின் உச்ச நீதிமன்றம், நிறுவப்பட்டது ...

அமெரிக்காவின் அரசியலமைப்பின் உறுப்பு III பிரிவின்படி உச்சநீதிமன்றம் உருவாக்கப்பட்டது, இது "அமெரிக்காவின் நீதித்துறை அதிகாரம் ஒரு உச்சநீதிமன்றத்தில் வழங்கப்படும்" என்று குறிப்பிடுகிறது, இது முதவாவது ஐக்கிய அமெரிக்க காங்கிரஸால் அமைக்கப்பட்டது.[3] 1789 ஆம் ஆண்டு நீதித்துறைச் சட்டத்தின் மூலம், நீதிமன்றத்தின் அசல் மற்றும் மேல்முறையீட்டு அதிகார வரம்பை காங்கிரஸ் குறிப்பிட்டது, மற்றும் பதின்மூன்று நீதித்துறை மாவட்டங்களை உருவாக்கியது, மேலும் நீதிபதிகளின் எண்ணிக்கையை ஆறு (ஒரு தலைமை நீதிபதி மற்றும் ஐந்து இணை நீதிபதிகள்) என நிர்ணயித்தது.[4][5]

1789 ஆம் ஆண்டு முதல், வரலாற்று ரீதியாக நாட்டின் சொந்த அளவு விரிவாக்கத்திற்கு ஏற்றவாறு, அமெரிக்க காங்கிரஸ் அவ்வப்போது உச்சநீதிமன்றத்தின் அளவை அதிகரித்துள்ளது. 1801 ஆம் ஆண்டின் சட்டம் நீதிமன்றத்தின் காலியிடத்தை ஐந்து உறுப்பினர்களாக குறைத்தது. எனினும், 1802 சட்டமானது 1801 சட்டத்தின் விளைவுகளை காலியிடங்கள் ஏற்படுவதற்கு முன்பு எற்க மறுத்துவிட்டது, இது, நீதிமன்றத்தின் அளவை ஆறு உறுப்பினர்களாக மாற்றியது. பின்னர் 1807 இல் ஏற்பட்ட சட்டம் உறுப்பினர்களின் எண்ணிக்கையை ஏழு உறுப்பினர்களாகவும், 1837 இல் எற்பட்ட சட்டம் ஒன்பது ஆகவும், 1863 இல் ஏற்பட்ட சட்டம் பத்து உறுப்பினர்களாகவும் அதிகரித்தது. 1866 ஆம் ஆண்டின் ஒரு சட்டம், அதன் அடுத்த மூன்று காலியிடங்களில் நீதிமன்றத்தின் அளவை பத்து உறுப்பினர்களிடமிருந்து ஏழு ஆகக் குறைத்தது, இந்த காலகட்டத்தில் இரண்டு காலியிடங்கள் ஏற்பட்டன. இருப்பினும், மூன்றாவது காலியிடம் ஏற்படுவதற்கு முன்பு, 1869 ஆம் ஆண்டின் நீதித்துறை சட்டம் தலையிட்டு, நீதிமன்றத்தின் அளவை ஒன்பது உறுப்பினர்களுக்கு மீட்டெடுத்தது, அது அன்றிலிருந்து இன்றுவரை நடப்பில் உள்ளது.[6]

உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் ஆயுள் காலத்திற்காக நியமிக்கப்பட்டாலும், பலர் ஓய்வு பெற்றனர் அல்லது ராஜினாமா செய்துள்ளனர். 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், நீதிமன்றத்தை விட்டு வெளியேறிய பல நீதிபதிகள் கூட்டாட்சி நீதித்துறையை முழுவதுமாக விட்டு வெளியேறாமல் தானாக முன்வந்து நீதிமன்றத்தில் இருந்து ஓய்வு பெறுற்றுள்ளனர். அவர்கள் அமெரிக்க சட்டப்படி, ஓய்வுபெற்ற நீதிபதிகள், உச்சநீதிமன்றத்தில் உறுப்பினராக இல்லை, ஆனால் யு.எஸ். மேல்முறையீட்டு நீதிமன்றம் அல்லது மாவட்ட நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப் படுவதற்கு தகுதியுடையவர்கள் ஆவார்கள். மேலும், பல ஓய்வு பெற்ற நீதிபதிகள் இந்த தகுதியில் பணியாற்றியுள்ளனர். வரலாற்று ரீதியாக, நீதிமன்றத்தில் சேவையின் சராசரி நீளம் 15 ஆண்டுகளுக்கும் குறைவாகவே உள்ளது. இருப்பினும், 1970 முதல் சேவையின் சராசரி நீளம் சுமார் 26 ஆண்டுகளாக அதிகரித்துள்ளது.[7]

Remove ads

தற்போதைய நீதிபதிகள்

ஒன்பது நீதிபதிகள் தற்போது உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றுகின்றனர். மூப்பு வரிசையில் பட்டியலிடப்பட்டுள்ளபை, அவர்கள்:

Remove ads

அனைத்து நீதிபதிகள்

1789 இல் உச்ச நீதிமன்றம் நிறுவப்பட்டதிலிருந்து, 115 பேர் நீதிமன்றத்தில் பணியாற்றியுள்ளனர். 106 பதவியில் இல்லாத நீதிபதிகளுக்கான நீதிமன்றத்தின் சேவையின் நீளத்தின் படி வில்லியம் ஓ. டக்ளஸின் 36 ஆண்டுகள், 211 நாட்கள் நீளம் முதல் தாமஸ் ஜான்சனின் 163 நாள் பதவிக்காலம் வரை வேறுபடுகிறது. 1சூன், 2021 ஆம் ஆண்டு நிலவரப்படி, தற்போதைய ஒன்பது நீதிபதிகளுக்கான சேவையின் நீளம் கிளாரன்ஸ் தாமஸின் 29 ஆண்டுகள், 215 நாட்கள் முதல் ஆமி கோனி பாரெட்டின் 211 நாட்கள் வரை வேறுபட்டு இருக்கும். இணை நீதிக்காக ஐந்து நபர்கள் உறுதி செய்யப்பட்டனர், பின்னர் தலைமை நீதிபதியாக தனித்தனியாக நியமிக்கப்பட்டனர்: ஜான் ரூட்லெட்ஜ், எட்வர்ட் டக்ளஸ் வைட், சார்லஸ் எவன்ஸ் ஹியூஸ், ஹார்லன் எஃப். ஸ்டோன் மற்றும் வில்லியம் ரெஹ்ன்கிஸ்ட். இரண்டு முறை பட்டியலிடப்பட்டாலும், அவை ஒவ்வொன்றிற்கும் ஒரு குறியீட்டு எண் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள்:[17][18]

Remove ads

குறிப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads