அரசு மகளிர் கல்லூரி, சிறிநகர்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

சிறிநகர் மகளிர் கல்லூரி என்று பொதுவாக அழைக்கப்படும் சிறிநகர் அரசு மகளிர் கல்லூரி, என்பது ஜம்மு-காஷ்மீரின் கோடைக்கால தலைநகரமான சிறிநகரில் உள்ள முஹம்மது அப்துல்லா சாலையில் ஸ்ரீ பிரதாப் கல்லூரியின் எதிரே உள்ள லால் சவுக் அருகே 8.50 ஏக்கர் வளாகத்தில் 950 இல் நிறுவப்பட்ட மகளிர் கல்லூரியாகும். [1]

விரைவான உண்மைகள் குறிக்கோளுரை, வகை ...

இந்த கல்லூரியும் இன்னும் நான்கு கல்லூரிகளும் இணைந்து ஆரம்பிக்கப்பட்ட சிறிநகர் தொகுப்பு பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது,[2]

பல்கலைக்கழக மானியக் குழு (இந்தியா)வால் அங்கீகரிக்கப்பட்டுள்ள இந்த இளங்கலைக் கல்லூரியானது, தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவையால் 'ஏ' தரத்துடன் அங்கீகாரம் பெற்றுள்ளது[3].

Remove ads

உருவாக்கம்

சம்மு-காசுமீரின் அப்போதைய பிரதமர் ஷேக் முகமது அப்துல்லாவின் ஆட்சியின் போது, அக்டோபர் 1950 ஆம் ஆண்டில்அம்மாநில அரசால் இக்கல்லூரியை, பல்வேறு சமூக-கலாச்சாரப் பின்னணியிலிருந்து வரும் பெண்களின் முன்னேற்றத்திற்காக நிறுவியுள்ளது.

துறைகள்

  • மனித மேம்பாட்டு துறை
  • ஆங்கிலத் துறை
  • அறிவியல் துறை
  • கணினி அறிவியல் துறை
  • சமூக அறிவியல் துறை
  • மனிதநேயம், இஸ்லாமிய மற்றும் கிழக்கத்திய கற்றல் துறை
  • வீட்டு அறிவியல் துறை

பட்டங்கள்[4]

  • இளங்கலை அறிவியல் (மருத்துவம்)
  • இளங்கலை அறிவியல் (மருத்துவம் அல்லாத)
  • இளங்கலை அறிவியல் (வீட்டு அறிவியல்)
  • இளங்கலை கலை
  • இளங்கலை (இதழியல் மற்றும் வெகுஜன தொடர்பு)
  • ஒருங்கிணைந்த எம்சிஏ.
  • இளங்கலை கலை (ஹானர்ஸ் ஆங்கிலம்)
  • மாஸ்டர் ஆஃப் சயின்ஸ் (ஹோம் சயின்ஸ்)
  • நர்சிங் இளங்கலை

அங்கீகாரம்

தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார அவை (என்ஏஏசி) சிறிநகரில் உள்ள இந்த அரசு மகளிர் கல்லூரிக்கு ஏ தரம் வழங்கியுள்ளது.[5]

மேலும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads