அவான் பெசார் எல்ஆர்டி நிலையம்
கோலாலம்பூர், செரி பெட்டாலிங் வழித்தடத்தில் இலகு தொடருந்து நிலையம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
அவான் பெசார் எல்ஆர்டி நிலையம் (ஆங்கிலம்: Awan Besar LRT Station; மலாய்: Stesen LRT Awan Besar; சீனம்: 阿旺柏沙站) என்பது மலேசியா, கோலாலம்பூர், செரி பெட்டாலிங் வழித்தடத்தில் உயர்த்திய நிலையிலான ஓர் இலகு தொடருந்து (LRT) நிலையமாகும்.[2][3]
கோலாலம்பூர் புக்கிட் ஓயூஜி (Bukit OUG) புறநகர்க் குடியிருப்புப் பகுதியில் உள்ளது. அவான் பெசார் நிலையம் மேசோனிக் கோயிலுக்கு (Masonic Temple) அருகில் உள்ள நிலையமாகும். இதன் அருகிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பு வளாகம் புக்கிட் ஓயூஜி காண்டோமினியம் (Bukit OUG Condominium) என்று அழைக்கப்படுகிறது.
Remove ads
பொது
கிள்ளான் பள்ளத்தாக்கில் இயங்கும் மற்ற எல்ஆர்டி நிலையங்களைப் போலவே, இந்த நிலையமும் உயர்த்தப்பட்ட நிலையமாகும்.
இஸ்டார் எல்ஆர்டி அமைப்பின் (STAR-LRT System) இரண்டாம் கட்டத்தின் ஒரு பகுதியாக 15 கி.மீ. தொலைவிற்கு 7 நிலையங்கள் கட்டப்பட்டன. அந்த நிலையங்களில் இந்த செரி பெட்டாலிங் எல்ஆர்டி நிலையமும் ஒன்றாகும். இந்த நிலையம் 11 சூலை 1998 அன்று திறக்கப்பட்டது. இந்த நிலையத்தில் திறந்தவெளி வாகன நிறுத்துமிடங்கள் உள்ளன.[4]
அமைவு
முகிபா எல்ஆர்டி நிலையத்திற்கு முன்னரும்; செரி பெட்டாலிங் எல்ஆர்டி நிலையத்திற்கு பின்னரும் அவான் பெசார் எல்ஆர்டி நிலையம் அமைந்துள்ளது.
Remove ads
பேருந்து சேவைகள்
31 திசம்பர் 2023 வரை; 20 நிமிட இடைவெளியுடன் புக்கிட் ஜாலில் பெவிலியன் (Pavilion Bukit Jalil) பகுதிக்கும்; இந்த அவான் பெசார் நிலையத்திற்கும் இடையே இலவசப் பேருந்து சேவை இருந்தது.[5] தற்சமயம் அந்தச் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
சிலாங்கூர் மாநிலத்தில் பெரும்பாலான தொடருந்து நிலையங்களில் இலவசப் பேருந்து சேவை வழங்கப்படுகிறது. இலவசப் பேருந்து சேவையின் விவரங்கள் கீழே உள்ளன. அத்துடன் முகிபா எல்ஆர்டி நிலையம் – கிள்ளான் லாமா சாலை (Pearl Point - LRT Muhhibah) வரையிலான 651 இலவசப் பேருந்து சேவையும் இந்த அவான் பெசார் நிலையத்தில் தான் முடிவடைகிறது.
Remove ads
அமைப்பு

L1 | ||
பக்க நடைமேடை | ||
நடைமேடை 1 | செரி பெட்டாலிங் >>> SP19 செந்தூல் தீமோர் எல்ஆர்டி; AG18 அம்பாங் எல்ஆர்டி (→) SP11 சான் சோவ் லின் (→) | |
நடைமேடை 2 | செரி பெட்டாலிங் >>> SP31 புத்ரா அயிட்ஸ் எல்ஆர்டி (←) | |
பக்க நடைமேடை | ||
தரை | தெருநிலை | கட்டணங்கள், பயணச்சீட்டு இயந்திரங்கள், நிலையக் கட்டுப்பாடு,(→) புக்கிட் ஜாலில் தேசிய அரங்கம் |
அம்பாங் வழித்தடம்–செரி பெட்டாலிங் வழித்தடம்
அம்பாங் வழித்தடம்; செரி பெட்டாலிங் வழித்தடம் (ஆங்கிலம்: LRT Ampang Line - LRT Sri Petaling Line) என்பது மலேசியா கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்துள்ள இலகு விரைவு தொடருந்து வழித்தடங்கள் (Light Rapid Transit Line) (LRT) ஆகும்.
இந்த இரு வழித்தடங்களின் ஒருங்கிணைந்த வலையமைப்பு 36 நிலையங்களைக் கொண்டது; மற்றும் 45.1 கிலோமீட்டர் (28.0 மைல்) நீளம் கொண்ட தடங்களைக் கொண்டுள்ளது. மலேசியாவில் செந்தர இரும்புப் பாதை மற்றும் தானியங்கி தொடருந்துகளைப் பயன்படுத்திய முதல் வழித்தடங்கள் இவைவே ஆகும்.
Remove ads
காட்சியகம்
அவான் பெசார் எல்ஆர்டி நிலையத்தின் காட்சிப் படங்கள் (2021 - 2022)
மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads