ஆண்டமுக்கம் நகரப் பேருந்து நிலையம்
இந்தியா, கேரளா, கொல்லம் நகரத்திலுள்ள பேருந்து நிலையம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆண்டமுக்கம் நகரப் பேருந்து நிலையம் (Andamukkam City bus stand) இந்திய மாநிலமான கேரளாவில் உள்ள கொல்லம் நகரில் அமைந்துள்ள இரண்டு பேருந்து நிலையங்களில் ஒன்றாகும். கொல்லம் நகரத்தின் டவுன்டவுன் பகுதியில் இது அமைந்துள்ளது, [1] ஆண்டமுக்கம் தனியார் பேருந்து நிலையம் என்றும் இது அழைக்கப்படுகிறது. இப்பேருந்து நிலையம் தனியார் நகரப் பேருந்துகள் மற்றும் கேரள மாநில சாலைப் போக்குவரத்துக் கழக சாதாரண பேருந்து சேவைகள் ஆகிய பேருந்துகளுக்கு மட்டுமே பயன்படுகிறது. சின்னக்கடைக்கு மட்டுமே இங்கிருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மய்யநாடு, இளம்பள்ளூர், சக்திகுளங்கரா, சாவர, தோப்பில்கடவு, பிராக்குளம், கொட்டியம், பெருமான் மற்றும் கடவூருக்கு இணைக்கும் பல்வேறு நகரப் பேருந்துகளின் தொடக்கப் புள்ளியாக சின்னக்கடை திகழ்கிறது. கேரள மாநில சாலைப் போக்குவரத்துக் கழகப் பேருந்து நிலையத்தில் ஒரு செயல்பாட்டு மையம் தொடங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. [2]
Remove ads
வரலாறு
2006 ஆம் ஆண்டு வரை கொல்லத்தின் நகர பேருந்து நிலையம் முதலில் சின்னக்கடையில் இருந்தது. கொல்லம் மாநகராட்சி முன்பு இருந்த இடத்தில் சுரங்கப்பாதை அமைக்க முடிவு செய்தது. இதையடுத்து. மாவட்ட போக்குவரத்து ஆலோசனைக் குழுவின் முடிவின்படி, பேருந்து நிலையம், 2008 ஆம் ஆண்டில், ஆண்டமுக்கத்துக்கு மாற்றப்பட்டது. [3]
நிறுவனங்கள்
- கேரள அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் மாவட்ட அலுவலகம் [4]
- நானி உணவுவிடுதி
- மாநகராட்சி கட்டிடம், ஆண்டமுக்கம்
- மாநகராட்சி கட்டிடம், சின்னக்கடை
- குயிலான் கூட்டுறவு நகர வங்கி
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads