கேரள மாநிலச் சாலைப் போக்குவரத்துக் கழகம்

From Wikipedia, the free encyclopedia

கேரள மாநிலச் சாலைப் போக்குவரத்துக் கழகம்
Remove ads

கேரள அரசின் கட்டுபாட்டில் உள்ள பேருந்து நிறுவனமான கேரள மாநில சாலை இடபெயர்ப்பு கழகம்(Kerala State Road Transport Corporation) இந்தியாவில் மாநில அரசின் கீழ் உள்ள மிக பழமையான இடப்பெயர்பு கழகமாகும்.[1][2][3]

விரைவான உண்மைகள் வகை, நிறுவுகை ...
Remove ads

வரலாறு

திருவிதாங்கூர் தேச இடப்பெயர்ப்பு துறை என்ற பெயரில் திருவிதாங்கூர் அரசு இக்கழக நிறுவனத்தை தொடங்கியது. திருவிதாங்கூர் தேசத்தின் இடப்பெயர்ப்பு தேவையைப் பூர்த்தி செய்தல் என்பதே இது நிறுவப்பட்டதின் நோக்கம். லண்டன் பயணிகள் இடப்பெயர்ப்பு வாரியத்தின் உதவி இயக்கு கண்காணிப்பாளராக இருந்த இ.ஜி. சாள்ட்டர் 1937 செப்டம்பர் 20-ல் இடப்பெயர்ப்பு துறையின் கண்காணிப்பாளராக பதவி அமர்த்தப்பட்டார். திருவனந்தபுரம் - கன்னியாகுமரி, பாலக்காடு - கோயம்புத்தூர் முதலான முக்கிய பன்மாநில பாதைகள் தேசிய மயமாக்கப்பட்டதால் கழகம் வளர்ச்சியுற்றது. இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட, கோமட் ஷாஸியில் பெர்கின்ஸ் டீசல் பொறி பொருத்திய 60 பேருந்துக்களாகும் முதல் பேருந்து கழகம். சாள்ட்டரின் மேற்பார்வையில் திருவிதாங்கூர் தேச இடப்பெயர்ப்புத் துறையின் ஊழியர்களே பேருந்து கட்டுமான பணிகளை செய்திருந்தார்கள். திருவனந்தபுரம்-கன்னியாகுமரி வழித்தடம் தேசியமயமாக்கப்பட்டதால் தனியார் இடப்பெயர்ப்பு நிறுவனங்களில் இருந்து பணி இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளவர்களுக்கு கழகத்தில் அன்று பணியமர்த்தலில் முன்னுரிமை வழங்கப்பட்டிருந்தது. அன்றைய முறை இன்றும் கழக ஊழியர்களை தேர்ந்தெடுப்பதில் பின்பற்றப் படுகிறது. நூறு ஊழியர்களை ஆய்வாளராகவும் நடத்துநர்களாகவும் நியமித்துக் கொண்டு இடபெயர்ப்பு துறை ஆரம்பிக்கப்பட்டது. தேச தன்னுந்தி சேவை(State Motor Service) மன்னர் சித்திரைத்திருநாள் 1938, பிப்ரவரி 20-ல் தொடங்கிவைத்தார். திருவிதாங்கூர் திவானாக இருந்த சி.பி.ராமசுவாமி ஐயரின் எண்ணமாகும் அரசு சார்பில் பேருந்து சேவை. மன்னரும் மன்னர் குடும்பத்தினரும் ஆவர் துடக்க பயணத்தில் பயணிகள். சாள்ட்டர் அவர்கள் தான் முதல் பயணத்தின் ஓட்டுநர். இந்த பேருந்தும் மற்றுள்ள 33 பேருந்துக்களும் கவடியார் நகரத்தில் அணிவகுத்து சென்றது அன்று அணைவரையும் கவர்ந்திருந்தது.

Remove ads

பணிமனைகள் மற்றும் பட்டறைகள்

மேலதிகத் தகவல்கள் வரிசை எண், பெயர் ...
Remove ads

பட்டறைகள்

மேலதிகத் தகவல்கள் வரிசை எண், பெயர் ...

படத்தொகுப்பு

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads