ஆயிரம்விளக்கு மசூதி
தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்திலுள்ள ஒரு பள்ளிவாசல் From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆயிரம்விளக்கு மசூதி (ஆங்கிலம்: Thousand Lights Mosque) இந்தியாவில் தமிழகத்தின் தலைநகர் சென்னையில் அண்ணா சாலையில் அமைந்துள்ள பல மாடங்களைக் கொண்ட மசூதியாகும். இது நாட்டில் உள்ள மிகப்பெரும் மசூதிகளில் ஒன்றாகும். இங்கு தமிழக சியா முசுலிம்களின் தலைமையகம் இயங்குகிறது. இதனை 1810ஆம் ஆண்டு நவாப் உம்தத்-உல்-உம்ரா கட்டியதாகத் தெரிகிறது.[1]
Remove ads
வரலாறு
ஆயிரம்விளக்கு மசூதி 1810-ல் ஆற்காடு நவாப் உம்தாத் உல்-உமாராவால் கட்டப்பட்டது.[2][3] இது இடைக்கால கட்டடக்கலை பாணியில் கட்டப்பட்டதாகும்.[2] இந்த மசூதி இருந்த இடம் முன்பு ஒரு சட்டசபை மண்டபத்தால் ஆக்கிரமிக்கப்பட்டது. சபை மண்டபத்தை ஒளிரச் செய்ய ஆயிரம் எண்ணெய் விளக்குகளை ஏற்றும் வழக்கம் அன்று இருந்தது. அந்தப் பாரம்பரியத்தின் நீட்சியாகவே இம்மசூதிக்கு ஆயிரம்விளக்கு மசூதி என்று பெயரிடப்பட்டது.[4]
சென்னையின் தலைமை ஷியா காசி இம்மசூதியில் இருந்துதான் செயல்படுகிறார். தொடர்ந்து இப்பதவியை ஒரே குடும்பம் வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.[3]:128
Remove ads
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads