ஆர்சனிக் மூவயோடைடு

From Wikipedia, the free encyclopedia

ஆர்சனிக் மூவயோடைடு
Remove ads

ஆர்சனிக் மூவயோடைடு (Arsenic triiodide ) என்பது AsI3. என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். அடர் சிவப்பு நிறத்தில் திண்மமாகக் காணப்படும் இச்சேர்மம் எளிமையாக பதங்கமாகிறது பட்டைக்கூம்பு மூலக்கூறான இச்சேர்மம் கரிம ஆர்சனிக் சேர்மங்கள் தயாரிக்க பெரிதும் பயன்படுகிறது.

விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...
Remove ads

தயாரிப்பு

ஆர்சனிக் முக்குளோரைடு மற்றும் பொட்டாசியம் அயோடைடு வினைபுரிவதால் ஆர்சனிக் மூவயோடைடு உருவாகிறது:[2]

AsCl3 + 3KI → AsI3 + 3 KCl.

வினைகள்

ஆர்சனிக் மூவயோடைடு தண்ணீரில் மெல்ல நீராற்பகுப்பு அடைந்து ஆர்சனிக் மூவாக்சைடு மற்றும் ஐதரயோடிக் அமிலம் ஆகியனவற்றைத் தருகிறது. ஐதரயோடிக் அமிலத்துடன் சமநிலை கொண்டுள்ள ஆர்சனசமிலம் உருவாதல் வழியாக இவ்வினை நிகழ்கிறது. இச்சேர்மத்தின் நீர்க்கரைசல் உயர் அமிலத்தன்மையுடன் காணப்படுகிறது. (0.1N கரைசலின் pH =1.1) 200° செல்சியசு வெப்பநிலையில் இது, ஆர்சனிக் மூவாக்சைடு, தனிமநிலை ஆர்சனிக் மற்றும் அயோடினாகச் சிதைவடைகிறது. இருப்பினும் இச்சிதைவு வினையானது 100° செல்சியசு வெப்பநிலையில் அயோடின் வாயுவை வெளியேற்றும் செயலுடன் தொடங்கிவிடுகிறது.

Remove ads

பண்டைய பயன்கள்

லையாம் தோனெலியின் கரைசல் என்ற பெயரில் முற்காலத்தில் இச்சேர்மம் வாத நோய், மூட்டழற்சி, மலேரியா, உறக்கநோய் நச்சுயிரி தொற்றுகள், காசநோய் மற்றும் நீரிழிவு நோய்[3] ஆகியனவற்றிற்குப் பரிந்துரைக்கப்பட்டது.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads