ஆலிகார்னாசசு

பண்டைய கரியன் நகரம், தற்கால துருக்கியில் உள்ள போட்ரம் நகரின் ஒரு பகுதி From Wikipedia, the free encyclopedia

ஆலிகார்னாசசுmap
Remove ads

ஆலிகார்னாசசு (Halicarnassus, பண்டைக் கிரேக்கம்: Ἁλικαρνᾱσσός Ἁλικαρνᾱσσός Halikarnāssós or Ἀλικαρνασσός Alikarnāssós, துருக்கியம்: Halikarnas  ; கேரியன் 𐊠𐊣𐊫𐊰 𐊴𐊠𐊥𐊵𐊫𐊰) என்பது அனத்தோலியாவில் உள்ள காரியாவில் உள்ள ஒரு பண்டைய கிரேக்க நகரமாகும். [1] இது தென்மேற்கு காரியாவில், கோகோவா வளைகுடாவில் ஒரு அனுகூலமான இடத்தில் அமைந்துள்ளது. இது தற்கால துருக்கியின் போட்ரம் மாநகரின் ஒரு பகுதியாக உள்ளது. ஆலிகார்னசசு மாசலசின் கல்லறைக்கு பிரபலமானது, இது மவுசோலசின் கல்லறை என்றும் அழைக்கப்படுகிறது. அதன் பெயர் " மாசோலியம் " என்ற சொல்லில் இருந்து தோன்றியது. கிமு 353 முதல் 350 வரை கட்டப்பட்ட கல்லறையானது பண்டைய உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றாக தரவரிசைப்படுத்தப்பட்டது.

விரைவான உண்மைகள் ஆலிகார்னாசசு alos k̂arnos 𐊠𐊣𐊫𐊰 𐊴𐊠𐊥𐊵𐊫𐊰 (in Carian)Ἁλικαρνασσός (in Ancient Greek)Halikarnas (in Turkish), இருப்பிடம் ...
Thumb
காரியாவின் பண்டைய நகரங்கள்

ஆலிகார்னசசு வரலாறு சிறப்பு வாய்ந்தது. இது முடியாட்சி முறையைக் கொண்டிருந்தது. அந்த நேரத்தில் மற்ற கிரேக்க நகர அரசுகள் நீண்ட காலமாக தங்களை ஆண்ட அரசர்களை அகற்றின. பாரசீக ஆட்சிக்கு எதிராக ஐயோனிய அண்டை நாடுகள் கலகம் செய்தபோது, ஆலிகார்னசசு பாரசீகர்களுக்கு விசுவாசமாக இருந்தது. கிமு 333 இல் ஆலிகார்னசசு முற்றுகைக்குப் பிறகு பேரரசர் அலெக்சாந்தர் இதைக் கைப்பற்றும் வரை பாரசீகப் பேரரசின் ஒரு பகுதியாகவே இருந்தது.

செபிரியா என்பது இங்கு உள்ள குடியேற்றத்தின் அசல் பெயராகும். கி.பி 1404 இல் இப்பகுதிக்கு அருகில் நைட்ஸ் ஆஃப் ரோட்சால் செயின்ட் பீட்டர் கோட்டையகம் கட்டப்பட்டது. [2] கோட்டையகம் கட்டபட்ட பகுதி ஒரு தீவு ஆகும். தீவின் அருகில் இருந்த முதன்மை நிலப்பரப்பில் பல கேரியன் குடியிருப்புகளை உள்ளடக்கியதாக படிப்படியாக விரிவடைந்தது. [3] இருப்பினும், காலப்போக்கில், தீவின் நிலப்பரப்பானது முதன்மை நிலப்பரப்புடன் ஒன்றிணைந்தது. மேலும் நகரம் தற்போதுள்ள சல்மாசிஸ், பூர்வீக லெலெஜஸ் மற்றும் கேரியன்ஸ் [2] மற்றும் பிற்கால கோட்டையின் தளத்துடன் இணைக்க விரிவாக்கப்பட்டது. முதலில் குடியேறியவர்கள் பெலோபொன்னீசிய இனத்தைச் சேர்ந்த டோரியன்கள். என்றாலும் இது விரைவில் மறக்கப்பட்டது.

Remove ads

குறிப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads