இங்குசேத்தியா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இங்குசேத்தியக் குடியரசு (Republic of Ingushetia, ரஷ்ய மொழி: Респу́блика Ингуше́тия; இங்கூசு: ГӀалгӀай Мохк) என்பது உருசியக் கூட்டமைப்பின் ஓர் உட்குடியரசாகும். இக்குடியரசின் தெற்கே ஜோர்ஜியா நாடும், கிழக்கே செச்சினியா குடியரசும், மேற்கே வடக்கு ஒசேத்திய-அலனீயா குடியரசும் அமைந்துள்ளன. இது வடக்கு காக்கசு பிராந்தியத்தில் மகாசு நகரைத் தலைநகராகக் கொண்டு அமைந்திருக்கிறது. இதுவே உருசியாவின் மிகச் சிறிய உட்குடியரசு ஆகும். 1992 சூன் 4 ஆம் நாள் செச்சினிய-இங்கூசு சோவியத் குடியரசு கலைக்கப்பட்டு இரண்டாகப் பிரிந்ததை அடுத்து உருவாக்கப்பட்டது.[6] வைனாக் வம்சத்தைச் சேர்ந்த இங்கூசு இன மக்கள் இங்கு வசிக்கின்றனர். மக்கள்தொகை: 412,529 (2010)).

இங்குசேத்தியா உருசியாவின் மிகவும் வறுமை நிலையில் உள்ளதும், அமைதியற்ற குடியரசும் ஆகும். இதன் அயலில் உள்ள செச்சினியா குடியரசில் தொடரும் இராணுவப் பிரச்சினையின் தாக்கம் இங்குசேத்தியாவிலும் காணப்படுகிறது.[7]
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads