இசுக்கொட்டிய தேசியக் கட்சி

From Wikipedia, the free encyclopedia

Remove ads

இசுக்காட்டிய தேசியக் கட்சி (Scottish National Party, SNP, சுகாத்து: Scots Naitional Pairtie) என்பது இசுக்கொட்லாந்தின் தேசியவாத,[13] சமூக-சனநாயக,[14][15][16] அரசியல் கட்சி ஆகும். ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து இசுக்கொட்லாந்தின் விடுதலைக்காக இக்கட்சி குரல் கொடுத்து வருகிறது.[17][18] ஐக்கிய இராச்சியத்தின் மக்களவையில் கன்சர்வேட்டிவ், தொழிற் கட்சி ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக மூன்றாவது பெரிய கட்சி இதுவாகும். இசுக்கொட்லாந்து நாடாளுமன்றத்தில் மிகப் பெரும் கட்சியாகவும் விளங்குகின்றது. இக்கட்சியின் தலைவராக இசுக்கொட்லாந்தின் தற்போதைய முதல்வர் நிக்கொலா ஸ்டர்ஜன் இருந்து வருகிறார்.

விரைவான உண்மைகள் இசுக்காட்டிய தேசியக் கட்சி Scottish National Party, தலைவர் ...

1934 ஆம் ஆண்டில் இசுக்கொட்லாந்து தேசியக் கட்சியும், இசுக்கொட்டியக் கட்சியும் இணைந்து இக்கட்சி உருவானது. 1967 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக மக்களவையில் உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.[19] 1999 இல் இசுக்கொட்டிய நாடாளுமன்றம் உருவானதன் பின்னர், எஸ்.என்.பி கட்சி இசுக்காட்டிய நாடாளுமன்ரத்தில் இரண்டாவது பெரிய கட்சியானது. 2007 இசுக்காட்டியத் தேர்தலில் வெற்றி பெற்று சிறுபான்மை அரசாக ஆட்சியைப் பிடித்தது. 2011 தேர்தலில் பெரும் வெற்றி பெற்று பெரும்பான்மை அரசை அமைத்தது.[20]

மே 2015 இன் படி, இக்கட்சியில் 115,000 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் 64 பேர் இசுக்கொட்டிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், 56 பேர் மக்களவை உறுப்பினர்கள், 424 பேர் உள்ளூராட்சி உறுப்பினர்கள் ஆவர்.[1][21][22] இக்கட்சி ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் 2 பேரையும் கொண்டுள்ளது.

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads