இணையத் தணிக்கை

From Wikipedia, the free encyclopedia

இணையத் தணிக்கை
Remove ads

இணையத் தணிக்கை என்பது தகவல்களை இணையத்தில் அணுகுதல் அல்லது வெளியிடுதலை கட்டுப்படுத்தும் அல்லது மறைக்கும் செயலாகும். இது அரசாங்கத்தினாலோ, தனியார் நிறுவனங்களினால் அரசாங்கத்தின் சார்பில், ஒழுங்குபடுத்துநர்கள் சார்பில் அல்லது அவர்களது சொந்த முயற்சியில் செயல்படுத்தப்படுகிறது. தனிப்பட்டவர்கள் அல்லது நிறுவனங்கள் தார்மீக, மத, வணிக காரணங்களுக்காக, சமுதாயத்திற்கு கட்டுப்பட்டு, சட்ட சிக்கல்கள் அல்லது மற்ற விளைவுகளுக்கு அச்சப்பட்டு சுய தணிக்கையில் ஈடுபடலாம்.

Thumb
இணைய தணிக்கையின் அளவு நாடுகளுக்கு இடையே மாறுபடும். ஜனநாயகங்கள் பொதுவாக மிதமான தணிக்கையைக் கொண்டுள்ளன, குடிமக்கள் தகவல்களை அணுகவும் பொது விவாதங்களில் பங்கேற்கவும் அனுமதிக்கிறது, இருப்பினும் சில நியாயமான கட்டுப்பாடுகளுடன். இதற்கு நேர்மாறாக, சர்வாதிகார ஆட்சிகள் இணைய அணுகலில் கடுமையான வரம்புகளை விதிக்கின்றன. குறிப்பாக தேர்தல்கள் அல்லது எதிர்ப்புகள் போன்ற முக்கியமான நிகழ்வுகளின் போது, ​​தகவல்தொடர்புகளை கட்டுப்படுத்தவும், அரசியல் மற்றும் சமூக பிரச்சனைகளில் விவாதங்களை தடுக்கவும் தணிக்கையை ஒரு கருவியாக அவர்கள் பயன்படுத்துகின்றனர்.

இணையத் தணிக்கை பற்றிய கருத்துகள் மாறுபடலாம். இணையத் தணிக்கை பற்றி ஆதரவான மற்றும் எதிரான கருத்துகள் இருந்தாலும், இது ஒவ்வொரு நாட்டைப் பொறுத்தும் வேறுபடும். சில நாடுகள் சிறிதளவே இணையத் தணிக்கையில் ஈடுபட்டாலும், சில நாடுகள் தங்களால் இயன்ற அளவு செய்தி, குடிமக்களுக்கு இடைப்பட்ட விவாதங்கள் போன்ற தகவல்களை தடுக்க அல்லது மறைக்க முயல்கின்றன.

Remove ads

உலக நாடுகளில் இணையத் தணிக்கை

இணையத்தின் எதிரிகள்:[1]

 

கண்காணிப்பில் உள்ள நாடுகள்:[1]

 

Thumb
நாடு வாரியாக இணையத் தணிக்கை[1][2] [3]

  ஊடுருவிப் பரந்த அளவிலான தணிக்கை
  பெரிய அளவிலான தணிக்கை
  தேர்ந்தெடுத்த தணிக்கை
  'எல்லைகளற்ற செய்தியாளர்கள்' அமைப்பின் கவனக்கண்காணிப்பில் உள்ளவை
  தணிக்கைக்கான அறிகுறி இல்லை
  வகைப்படுத்தப்படவில்லை / தரவுகள் இல்லை

2006ல் எல்லைகளற்ற செய்தியாளர்கள் (Reporters sans frontières, RSF), பாரிசைச் சேர்ந்த பத்திரிகைச் சுதந்திரத்தை ஆராயும் சர்வதேச அரசு சாரா நிறுவனம் 'இணையத்தின் எதிரிகள்' எனும் பட்டியலை வெளியிட ஆரம்பித்தது.[4] இந்த நிறுவனம் இணையத்தில் செய்தி மற்றும் தகவல்களை மறைக்கும் நாடுகளின் திறனை மட்டும் கணக்கிலெடுத்துக்கொண்டு அவற்றை இணையத்தின் எதிரிகள் என பட்டியலிடுவதில்லை, இணைய பயனர்களின் மீது நாடுகளின் திட்டமிட்ட அடக்குமுறையைக் கொண்டும் கணக்கிடுகிறது."[5] 2007ல் இரண்டாவது பட்டியல் கண்காணிப்பில் உள்ள நாடுகளாகச் சேர்க்கப்பட்டது. இரண்டு பட்டியல்களும் வருடத்திற்கொருமுறை புதுப்பிக்கப்படுகின்றன.[6]

இந்தியா

சீனா

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads