இந்திய பைசா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இந்திய பைசா (Indian paisa) (plural: paise) என்பது இந்திய ரூபாயில் 1⁄100 (நூறில் - ஒரு பங்கு)ஆகும். இந்திய ரூபாயை தசம எண்ணிக்கையில் சீர்திருத்தம் செய்த 1957 ஏப்ரல் 1 அன்று பைசா அறிமுகப்படுத்தப்பட்டது. 2011 சூன் 30 அன்று 50 பைசா நாணயத்தைத் தவிர பிற பைசா நாணயங்கள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன.[சான்று தேவை]
1955 ஆம் ஆண்டில், இந்திய அரசு "இந்திய நாணயச் சட்டத்தில்" திருத்தம் கொண்டுவந்து "நாணயங்களை மெட்ரிக் முறையில்" மாற்றியது. 1957 ஆம் ஆண்டு முதல் 1964 வரை, பைசாவானது "நயா பைசா" (புதிய பைசா) என அழைக்கப்பட்டது. 1964 சூன் 1, அன்று "நயா" என்ற சொல் கைவிடப்பட்டு "பைசா" என்று பெயரிடப்பட்டது. பைசாவானது 1, 2, 3, 5, 10, 20, 25 மற்றும் 50 பைசா நாணயங்களில் புழங்கப்பட்டது.
Remove ads
வரலாறு
1957 க்கு முன்னர், இந்திய ரூபாயானது தசமபடுத்தப்படமல் இருந்தது, 1835 முதல் 1957 வரை ரூபாயானது 16 அணாக்களாக பிரிக்கப்பட்டிருந்தது. 1947 ஆம் ஆண்டு வரை ஒவ்வொரு அணாவும் நான்கு இந்திய பைசாக்களாகவும், ஒவ்வொரு பைசாவும் மூன்று இந்திய தம்பிடிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது.[1][2]
Remove ads
நாணயம்
நயா பைசா தொடர் (1957-1964)
பைசா தொடர் (1964 - தற்போதுவரை)
காசாலைக் குறி
Remove ads
மேலும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads