இந்தியச் சிறுத்தை

From Wikipedia, the free encyclopedia

இந்தியச் சிறுத்தை
Remove ads

இந்தியச் சிறுத்தை என்பது (Indian leopard, பாந்தெரா பார்டசு பசுகா) இந்தியத் துணைக்கண்டத்தில் பரந்து வாழும் சிறுத்தைத் துணையினமாகும். வாழிடம் இன்மை, இடப்பற்றாக்குறை, களவாடப்படல், தோலிற்காகவும் உடலுறுப்புக்களுக்காகவும் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத வர்த்தகம் போன்ற காரணங்களினால்[1] பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் இச்சிறுத்தையினத்தை 2008 ஆம் ஆண்டில் அருகிய இனம் எனப் பட்டியல்ப்படுத்தியுள்ளது.

விரைவான உண்மைகள் இந்தியச் சிறுத்தை, காப்பு நிலை ...

ஆசியச் சிங்கம், வங்கப்புலி, பனிச்சிறுத்தை, படைச்சிறுத்தை ஆகியவற்றுடன் இந்தியச் சிறுத்தையும் இந்தியாவில் காணப்படும் ஐந்து பெரிய பூனைகளுள் ஒன்றாகும்.

Remove ads

அழிவுகள்

வனவிலங்கு வர்த்தகம் இந்தியச் சிறுத்தைகளின் இருப்பிற்குப் பெரும் அச்சுறுத்தலாக அமைகின்றது.[2] இவ்விந்தியச் சிறுத்தைகளின் தோல் மற்றும் சில உடல் உறுப்புக்கள் இந்தியாவிலிருந்து நேபாளம், சீனா போன்ற நாடுகளுக்கு கடத்தப்படுகின்றன. இவ்வாறு களவாடப்படும் இந்தியச் சிறுத்தைகள் பற்றிய விபரம் கீழே தரப்பட்டுள்ளது.

  • இந்தியாவில் 1994 ஆம் ஆண்டு தொடக்கம் 2010 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் வரை 2845 சிறுத்தைகள் களவாடப்பட்டுள்ளன.[3][4][5][6][7]
  • நேபாளத்தில் 2002 ஆம் ஆண்டு மே மாதம் தொடக்கம் 2008 ஆம் ஆண்டு மே மாதம் வரை 243 சிறுத்தைகள் களவாடப்பட்டுள்ளன.[8][9][10]
  • சீனா மற்றும் திபெத்இல் 1999 ஆம் ஆண்டு சூலை மாதம் தொடக்கம் 2005 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் வரை 774 சிறுத்தைகள் களவாடப்பட்டுள்ளன.
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads