இந்தியப் பத்திரிகையாளர் மன்றம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

இந்தியப் பத்திரிகையாளர் மன்றம் (Press Council of India), என்பது இந்தியாவில் 1966ல் நாடாளுமன்றத்தால் உருவாக்கப்பட்ட ஒரு சட்டப்பூர்வ தன்னாட்சி அமைப்பாகும். இது 1978ஆம் ஆண்டில் இந்தியப் பத்திரிகையாளர் மன்றம் ஒரு சுய-ஒழுங்குமுறை கண்காணிப்பு அமைப்பாக இயங்கத் தொடங்கியது.[1][2] இக்குழு ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதியரசர் தலைமையில் 28 உறுப்பினர்களைக் கொண்டது. இக்குழுவின் 20 ஊடக உறுப்பினர்கள் செய்தித்தாள்கள், தொலைக்காட்சி நிறுவனங்கள் மற்றும் இந்தியாவில் செயல்படும் பிற ஊடகங்கள் மூலம் பரிந்துரைக்கப்படுகின்றனர்.[3][4] 28 உறுப்பினர் குழுவின், 5 பேர் இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களாக உள்ளனர். மேலும் மூன்று உறுப்பினர்கள் சாகித்திய அகாதமி, பல்கலைக்கழக மானியக் குழு மற்றும் இந்திய வழக்குரைஞர் கழகம் ஆகியவற்றால் பரிந்துரைக்கப்பட்டவர்களாக உள்ளனர்.[1]

Remove ads

மரபு நெறிப்பாடுகள்

பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா "பத்திரிகை நடத்தை விதிமுறைகளை" வெளியிட்டுள்ளது. இது இந்தியாவில் பயன்பாட்டில் உள்ள இரண்டு பத்திரிகை தொடர்பான குறியீடுகளில் ஒன்றாகும்.[5]

புகார்கள்

ஒரு பத்திரிக்கையாளர் அல்லது ஊடகங்களுக்கு எதிரான புகார்களை இந்திய பிரஸ் கவுன்சில் கவனிக்கிறது. இக்குழு புகார்களை விசாரித்து அறிக்கை வெளியிடலாம். தவறு செய்தவர்களை கண்டறிந்து "எச்சரிக்கலாம், அறிவுறுத்தலாம், தணிக்கை செய்யலாம். ஆனால் தனிப்பட்ட பத்திரிகையாளர்கள் மற்றும் வெளியீடுகள் மீது எந்தத் தண்டனையையும் செயல்படுத்தவோ அல்லது தடை விதிக்கவோ அதற்கு அதிகாரம் இல்லை.[1]

21 சூலை 2006 அன்று அது மூன்று செய்தித்தாள்கள் - டைம்ஸ் ஆஃப் இந்தியா (டெல்லி மற்றும் புனே), பஞ்சாப் கேசரி (தில்லி) மற்றும் மிட்-டே (மும்பை) - பத்திரிகை நடத்தை விதிமுறைகளை மீறியதற்காக தணிக்கை செய்தது.[6]

Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads