இரவி இரஞ்சன்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

இரவி இரஞ்சன் (Ravi Ranjan)(பிறப்பு 20 டிசம்பர் 1960) என்பவர் இந்திய நீதிபதி ஆவார். இவர் தற்போது, ஜார்கண்ட் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உள்ளார்.[1][2] பஞ்சாப் மற்றும் அரியானா உயர்நீதிமன்றம் மற்றும் பாட்னா உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாகவும் இவர் பணியாற்றி உள்ளார்.

விரைவான உண்மைகள் மாண்புமிகு தலைமை நீதிபதிஇரவி இரஞ்சன், தலைமை நீதிபதி ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் ...
Remove ads

கல்வி

இரவி இரஞ்சன் 1960-ல் பாட்னாவில் பிறந்தார். இவர் புவியியல் பாடத்தில் முது நிலை அறிவியல் பட்டத்தினை பாட்னா பல்கலைக்கழகத்தில் பெற்ற பின்னர் 1989-ல் எல். எல். பி. சட்டப் படிப்பினை பாட்னா சட்டக் கல்லூரியில் படித்தார். பாட்னா பல்கலைக்கழகத்தில் புவியியலில் முனைவர் பட்டம் பெற்றார். பின்னர் பீகார் பொறியியல் கல்லூரியின் குடிசார் பொறியியல் பிரிவில் பகுதி நேர விரிவுரையாளராகச் சேர்ந்தார். இளங்கலைச் சட்டம் படிப்பினை முடித்தவுடன், இரஞ்சன் சட்டப் பயிற்சிக்காக பாட்னா உயர் நீதிமன்றத்தில் சேர்ந்தார்.

Remove ads

சட்டப் பணி

இரஞ்சன் 26 ஜூன் 2004 அன்று மூத்த நிலை வழக்கறிஞராக இந்திய ஒன்றியத்தினால் நியமிக்கப்பட்டார். 14 ஜூலை 2008 அன்று பாட்னா உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக இரஞ்சன் பதவி உயர்வு பெற்றார். ஜனவரி 16, 2010 அன்று நிரந்தர நீதிபதியானார். இவர் நவம்பர் 17, 2019 அன்று ஜார்கண்ட் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.[3][4]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads