இராஜா நரேந்திர இலால் கான் மகளிர் கல்லூரி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ராஜா நரேந்திர லால் கான் மகளிர் கல்லூரி (கோப் கல்லூரி அல்லது ராஜா நரேந்திர லால் கான் மகிளா மகாவித்யாலயா என்றும் அழைக்கப்படும் தன்னாட்சி பெற்ற இக்கல்லூரி, மேற்கு வங்காளத்தின் மிட்னாபூரில் உள்ள ஒரு இளங்கலை மற்றும் முதுகலைக்கான மகளிர் கல்லூரி ஆகும். 1957 இல் நிறுவப்பட்ட இக்கல்லூரி,[1][2] வித்யாசாகர் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
Remove ads
வரலாறு
இந்த கல்லூரியின் ஆரம்பம், 1957 ஆகஸ்ட் 22 அன்று வரலாற்றுச் சிறப்புமிக்க கோப் அரண்மனையிலிருந்து தொடங்கியது. 1895 ஆம் ஆண்டில் நரஜோல் மன்னரான ராஜா நரேந்திர லால் கானின் காலத்தில் கட்டப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க கோப் அரண்மனையே இந்த கல்லூரியின் தற்போதைய நிர்வாகக் கட்டிடமாக உள்ளது. நரஜோல் அரச குடும்பத்தைச் சேர்ந்த ஸ்ரீ அமரேந்திர லால் கானின் மனைவி கான் என்பவரே, இந்த கல்லூரியை நிறுவுவதற்காக அவர்களது கோப் அரண்மனையை நன்கொடையாக வழங்கியுள்ளார். எனவே தான் இந்த கல்லூரிக்கு அந்த கோப் அரண்மனையின் நிறுவனரான, ராஜா நரேந்திர லால் கானின் பெயர் சூட்டப்பட்டது. இந்த அரண்மனை 2006 ஆம் ஆண்டில் மேற்கு வங்க பாரம்பரிய ஆணையத்தால் (சட்டம் IX of 2001) ஒரு பாரம்பரிய கட்டிடமாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.[3] இந்த கல்லூரி ஆரம்பத்தில் கல்கத்தா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டிருந்தது. 1986 ஆம் ஆண்டில், கல்கத்தா பல்கலைக்கழகத்திலிருந்து வித்யாசாகர் பல்கலைக்கழகத்திற்கு இந்த கல்லூரியின் இணைப்பு மாற்றப்பட்டது. பல்கலைக்கழக மானியக் குழு இந்த ராஜா நரேந்திர லால் கான் மகளிர் கல்லூரிக்கு 2018-19 அமர்வில் இருந்து தன்னாட்சி அந்தஸ்தை வழங்கியதிலிருந்து, சிறந்த தன்னாட்சிக் கல்லூரியாக இயங்கிவருகிறது.
Remove ads
அமைவிடம்
இந்தக் கல்லூரி மேற்கு மெடினிபூர் மாவட்டத்தில் உள்ள கங்காபட்டி என்னும் கிராமப் பஞ்சாயத்தில் அமைந்துள்ளது. தென்கிழக்கு ரயில்வே கீழ் உள்ள மிட்னாபூர் ரயில் நிலையத்திலிருந்து 2 கி.மீ. தொலைவிலும், கரக்பூர் ரயில் நிலையத்திலிருந்து 14 கி.மீ. தொலைவிலும் இக்கல்லூரி உள்ளது, மேலும் மிட்னாபூர் மத்திய பேருந்து நிலையம், இக்கல்லூரியிலிருந்து 3 கி. மீ. தொலைவிலேயே உள்ளது.
துறைகள் மற்றும் படிப்புகள்
இந்தக் கல்லூரியில் அறிவியல் மற்றும் கலைப்பிரிவுகளில் பல்வேறு இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளை வழங்கி வருகிறது. மிட்னாபூர் மாவட்டத்தைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த கீழ் மற்றும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த பெண்களுக்கு இளங்கலை பட்டத்தை கற்பிப்பதை இந்த கல்லூரி தன் முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தக் கல்லூரியின் ஒவ்வொரு துறையும் இளங்கலை பட்டப்படிப்புகளை வழங்குகிறது. சில துறைகளால் மட்டுமே முதுகலை படிப்புகளும் வழங்கப்படுகின்றன.
அறிவியல்
அறிவியல் பிரிவில் வேதியியல், இயற்பியல், கணிதம், கணினி அறிவியல் மற்றும் பயன்பாடு, தாவரவியல், விலங்கியல், உடலியல், நுண்ணுயிரியல், பொருளாதாரம் மற்றும் ஊட்டச்சத்து துறைகளில் பாடங்கள் கற்றுத்தரப்படுகின்றன.
கலை
கலைப் பிரிவில் பெங்காலி, ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம், வரலாறு, அரசியல் அறிவியல், தத்துவம், புவியியல், கல்வி, உடற்கல்வி, இசை, மனித உரிமைகள் மற்றும் உளவியல் துறைகளில் பாடங்கள் கற்றுத்தரப்படுகின்றன.
அங்கீகாரம்
ராஜா நரேந்திர லால் கான் மகளிர் கல்லூரி தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சிலால் (என்ஏஏசி) மறு அங்கீகாரம் பெற்று ஏ தரத்தை அடைந்துள்ளது. மேலும் இக்கல்லூரி பல்கலைக்கழக மானியக் குழுவினாலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.[4]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads