இரிகொபெர்த்தா மெஞ்சூ

அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் From Wikipedia, the free encyclopedia

இரிகொபெர்த்தா மெஞ்சூ
Remove ads

இரிகொபெர்த்தா மெஞ்சூ தும் (Rigoberta Menchú Tum, எசுப்பானியம்: [riɣoˈβerta menˈtʃu]; பிறப்பு: சனவரி 9, 1959)[1] குவாத்தமாலா நாட்டின் கீசெ இனப் பெண்மணி ஆவார். மெஞ்சூ தமது வாழ்நாளை குவாத்தமாலாவின் பழங்குடி மக்களின் உரிமைகளுக்காக அர்ப்பணித்தவர். 1960 முதல் 1996 வரை நடந்த குவாத்தமாலா உள்நாட்டுப் போரின் போதும் பிறகும் இந்த உரிமைகளுக்காக குரல் கொடுத்து வருகின்றார். 1992ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டுள்ளது[2]. 1998ஆம் ஆண்டில் ஆதுரியா இளவரசர் விருதும் கிடைத்துள்ளது. இவரைக் குறித்து நான், ரிகொபெர்த்தா மெஞ்சூ (1983) என்ற வாழ்க்கை வரலாறும் இவரே ஆக்கிய கிராசிங் பார்டர்சு தன்வரலாறும் எழுதப்பட்டுள்ளன.

விரைவான உண்மைகள் ரிகொபெர்த்தா மெஞ்சூ, பிறப்பு ...

மெஞ்சூ யுனெசுக்கோ நல்லெண்ண தூதர் ஆவார். உள்நாட்டு அரசியல் கட்சிகளில் பங்கேற்றுள்ள மெஞ்சூ 2007ஆம் ஆண்டிலும் 2011ஆம் ஆண்டிலும் அரசுத்தலைவர் தேர்தலில் போட்டியிட்டுள்ளார்.

Remove ads

வெளியிணைப்புகள்

விரைவான உண்மைகள்
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads