இர்கூத்சுக் மாகாணம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இர்கூத்சுக் மாகாணம் (Irkutsk Oblast, உருசியம்: Ирку́тская о́бласть, இர்கூத்ஸ்கயா ஓப்லஸ்த்) என்பது உருசியாவின் நடுவண் அலகும், ஒரு உருசிய மாகாணமும் ஆகும். இது தென்கிழக்கு சைபீரியாவில் அங்காரா, லேனா, நீசுனயா துங்கூசுக்கா ஆற்றுப்படுகைகளில் அமைந்துள்ளது. இதன் நிருவாக மையம் இர்கூத்சுக் நகரம் ஆகும். மொத்த மக்கள்தொகை 2,428,750 (2010).[7]
Remove ads
புவியியல்


இர்கூத்சுக் மாகாணத்தின் எல்லைகளாக தெற்கே புரியாத்தியா, துவா, மேற்கே கிராசுனயார்சுக் கிராய், வடகிழக்கே சகா குடியரசு, கிழக்கே சபைக்கால்சுக்கி கிராய் ஆகியன உள்ளன.
உலகின் பிரபலமாக பைக்கால் ஏரி இம்மாகாணத்தின் தென்கிழக்கே உள்ளது.
மக்கள் வகைப்பாடு
2010 கணக்கெடுப்பின் படி, இங்குள்ள மொத்த மக்கள்தொகை 2,428,750 ஆகும். இங்குள்ள மக்கள்தொகை அடர்த்தி (3.5 நபர்/சதுரகிமீ) தேசிய சராசரியுடன் (8.7) ஒப்பிடும் போது மிகக் குறைவானதாகும். இர்கூத்சுக் நகரமே இங்குள்ள பெரிய நகரமாகும். இங்கு 612 973 பேர் வசிக்கின்றனர்.
மாகாணத்தின் பெரும்பான்மையானோர் உருசியர்கள் (93.5%) ஆவர். சிறுபான்மையின புரியாத் மக்களுக்கென (3.3%) இம்மாகாணத்தினுள் ஊஸ்த்-ஓர்தா புரியாத் வட்டாரம் (Ust-Orda Buryat Okrug) என்ற நிருவாக அலகு உள்ளது.[7]
இவர்களைவிட போலந்து மொழி பேசும் லூதரனியர்கள் சிறிய அளவில் வசிக்கின்றனர். இவர்கள் 1911-12 காலப்பகுதியில் சைபீரியாவுக்குக் குடி பெயர்ந்தவர்கள்.[11]
Remove ads
சமயம்
2012 அதிகாரபூர்வத் தரவுகளின் படி,[12][13] 28.1% உருசிய மரபுவழித் திருச்சபையினர் ஆவர். 7% பொதுக் கிறித்தவர்கள். 6% பழமைவாத அல்லது உருசியமல்லாத கிழக்கு மரபுவழி திருச்சபையினர். 2% சிலாவிக் பழங்குடி நம்பிக்கையாளர்கள், 1% முசுலிம்கள். அத்துடன் 37% சமயசார்பற்றவர்கள், 17% இறைமறுப்பாளர்கள், 1.9% ஏனைய சமயத்தவர்கள்.[12]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads