இறேந்தை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இறேந்தை என்பது நூலினால் அல்லது இழைகளினாற் பின்னப்படும் ஒரு வகையான வலைகள் போன்ற துணிப் பின்னல் ஆகும்.[1] இது பாரம்பரியக் கருவிகளைக் கொண்டோ கையாலோ பின்னப்படுகிறது..
தொடக்கத்தில் லினன், பட்டு, பொன், அல்லது வெள்ளி இழைகளே இதற்காகப் பயன்படுத்தப்பட்டன. தற்காலத்தில் லினன், பட்டு போன்ற நூல் வகைகள் கிடைக்கப் பெறினும் பெரும்பாலும் பருத்தி நூலே பயன்படுத்தப்படுகிறது. சில வகையான இறேந்தைத் துணிகளுக்கு செயற்கை நார் பயன்படுத்தப்படுவதுமுண்டு. ஐரோப்பியக் குடியேற்றவாத ஆட்சியின் போது குறிப்பாக போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் ஆகியோரிடமிருந்து இலங்கை, இந்தோனேசியா போன்ற நாடுகளில் இறேந்தை பின்னும் தொழினுட்பம் பரவியது. தற்போதும் தென்னிலங்கையின் வெலிகமை நகரிலும் அண்டிய ஊர்களிலுமுள்ள கடற்கரைப் பகுதிகளில் பாரம்பரிய இறேந்தை பின்னும் கைத்தொழிலைக் காணலாம். இறேந்தை என்னும் சொல் போர்த்துக்கேய மொழியிலிருந்து வந்ததாகும்[2].
Remove ads
படக்காட்சி
- வெண்ணிற இறேந்தை பொதுவாக துணியின் ஓரங்களிலும் கரையிலும் பயன்படுத்தப்படுகிறது.
- பெல்ஜியம் நாட்டின் அரச சேகரிப்பிலுள்ள இறேந்தைத் துணி
- விக்டோரியா, அல்பர்ட் அருங்காட்சிகத்தில் வைக்கப்பட்டுள்ள 1884 ஆம் ஆண்டின் இறேந்தை
- 2004 இல் ஆர்மேனியா நாட்டில் பெறப்பட்ட இறேந்தை
- கோனியாக்கோவ் பாரம்பரிய இறேந்தை
- அயர்லாந்து நாட்டில் பெறப்பட்ட 19 ஆம் நூற்றாண்டின் இறேந்தை
- இறேந்தை இழை
- பரகுவை நாட்டில் காணப்படும் பாரம்பரிய நண்டுத்தி இறேந்தை
Remove ads
உசாத் துணை
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads