இலட்சுமிநாராயண் கோயில்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இலட்சுமிநாராயணன் கோயில் (Laxminarayan Temple) மற்றும் பிர்லா மந்திர் என்றும் அழைக்கப்படும் இக்கோயில், இலட்சுமிநாராயணனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்தியாவின் தில்லியில் உள்ள ஒரு இந்துக் கோவிலாகும். லக்ஷ்மிநாராயண் பொதுவாக மும்மூர்த்தியில் பாதுகாப்பாளராக இருக்கும் விஷ்ணுவைக் குறிப்பதாகும். இவர் தனது துணைவி இலட்சுமியுடன் இருக்கும்போது நாராயணன் என்றும் அழைக்கப்படுகிறார். மகாத்மா காந்தியால் திறக்கப்பட்ட இந்த கோயில், ஜுகல் கிசோர் பிர்லா [1] என்பவரால் 1933 மற்றும் 1939 ஆம் ஆண்டுகளில் கட்டப்பட்டது. அண்மைக் கோயில்கள் சிவன், கிருட்டிணர் மற்றும் புத்தருக்கு அர்ப்பணிக்கப்பட்டவை.
இது தில்லியில் கட்டப்பட்ட முதல் பெரிய இந்துக் கோயிலாகும். இந்த கோயில் 7.5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. பல சிவாலயங்கள், நீரூற்றுகள் மற்றும் இந்து மற்றும் தேசிய சிற்பங்களுடன் ஒரு பெரிய தோட்டத்தால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேலும் சொற்பொழிவுகளுக்காக கீதா பவன் என்ற அரங்கம் உள்ளது. தில்லியின் முக்கிய ஈர்ப்புகளில் ஒன்றான இந்த கோயில் கிருட்டிண ஜெயந்தி மற்றும் தீபாவளி பண்டிகைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்களை ஈர்க்கிறது.
Remove ads
வரலாறு

தொழிலதிபரும், பரோபகாரியுமான பால்தேவ் தாஸ் பிர்லா மற்றும் பிர்லா குடும்பத்தைச் சேர்ந்த அவரது மகன் ஜுகல் கிஷோர் பிர்லா ஆகியோரால் கட்டப்பட்ட இக்கோயிலின் கட்டுமானம் 1933 ஆம் ஆண்டில் தொடங்கியது. இதனால் இது "பிர்லா கோயில்" என்றும் அழைக்கப்படுகிறது. ஜாட் மகாராஜ் உதய்பானு சிங் என்பவர் இக்கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார். பண்டிட் விஸ்வநாத் சாஸ்திரியின் வழிகாட்டுதலில் இந்த கோயில் கட்டப்பட்டது. [2] நிறைவு விழா மற்றும் யாகத்தை சுவாமி கேசவநந்தஜி நிகழ்த்தினார். [3] புகழ்பெற்ற இக்கோயில் 1939 இல் மகாத்மா காந்தியால் திறந்து வைக்கப்பட்டது. அந்த நேரத்தில், மகாத்மா காந்தி கோவிலுக்குள் உயர் சாதி இந்துக்களுக்கு மட்டுமல்லாமல் ஒவ்வொரு சாதியினரும் அனுமதிக்க வேண்டும் என்ற நிபந்தனையை வைத்தார். [4]
இந்தியாவின் பல நகரங்களில் பிர்லாக்கள் கட்டிய தொடர் கோயில்களில் இதுவே முதன்மையானது. அவை பெரும்பாலும் பிர்லா கோயில் என்றும் அழைக்கப்படுகின்றன.
"நவீன இந்திய கட்டிடக்கலை இயக்கத்தின்" முக்கிய ஆதரவாளரான சந்திர சாட்டர்ஜி என்பவர் இதனை கட்டமைத்தார். [5] இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் சுதேசி இயக்கத்தின் கொள்கைகள் மற்றும் பயன்படுத்தப்பட்ட நியமன நூல்களால் இந்த கட்டிடக்கலை பெரிதும் பாதிக்கப்பட்டது. புதிய கட்டுமான யோசனைகள் மற்றும் தொழில்நுட்பங்களை இணைப்பதை இயக்கம் நிராகரிக்கவில்லை. சாட்டர்ஜி தனது கட்டிடங்களில் நவீன பொருட்களை விரிவாகப் பயன்படுத்தினார்.
மூன்று மாடி கொண்ட கோயில் வடக்கு அல்லது இந்துக் கோயில் கட்டிடக்கலையில் கட்டப்பட்டுள்ளது . தற்போதைய கோவில் பிரபஞ்ச சுழற்சியின் தங்க யுகத்தின் காட்சிகளை சித்தரிக்கும் செதுக்கல்களால் முழு கோயிலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. ஆச்சார்யா விசுவநாத் சாத்திரி தலைமையிலான வாரணாசியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட திறமையான கைவினைஞர்கள் கோயிலின் சின்னங்களை செதுக்கினர். கருவறைக்கு மேலே உள்ள கோயிலின் மிக உயர்ந்த விமானம் சுமார் 160 அடி உயரம் கொண்டது. இந்த கோயில் கிழக்கு நோக்கி உள்ளது. மேலும் ஆழமான அஸ்திவாரத்தில் அமைந்துள்ளது. அவரது வாழ்க்கை மற்றும் வேலையை சித்தரிக்கும் பிரெசுகோ ஓவியங்களால் இந்த ஆலயம் அலங்கரிக்கப்பட்டுள்ளது. கோயிலின் சின்னங்கள் ஜெய்ப்பூரிலிருந்து கொண்டு வரப்பட்ட பளிங்குகளில் உள்ளன. மகரணா, ஆக்ரா, கோட்டா, ஜெய்சால்மர் ஆகிய இடங்களைச் சேர்ந்த கோட்டா கல் கோயில் வளாகத்தின் கட்டுமானத்தில் பயன்படுத்தப்பட்டது. கோயிலின் வடக்கே உள்ள கீதா பவன் கிருட்டிணருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. செயற்கை நிலப்பரப்பு மற்றும் அடுக்கு நீர்வீழ்ச்சிகள் கோயிலின் அழகை அதிகரிக்கின்றன. [6]
Remove ads
கோயில்
பிரதான கோவிலில் நாராயணன் மற்றும் லட்சுமி தேவியின் சிலைகள் உள்ளன. சிவன், விநாயகர் மற்றும் அனுமன் ஆகியோருக்கு அர்ப்பணிக்கப்பட்ட பிற சிறிய ஆலயங்களும் உள்ளன. பகவான் புத்தருக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு சன்னதியும் உள்ளது. இடது பக்க கோயில் குவிமாடம் சக்தியின் தெய்வமான தேவி துர்காவைக் கொண்டுள்ளது . இந்த கோயில் 7.5 ஏக்கர்கள் (30,000 m2) வரப்பளவில் அமைந்துள்ளது. கோயில் கட்டப்பட்ட பகுதி 0.52 ஏக்கர்கள் (2,100 m2) ஆகும் .
Remove ads
இடம்
புது தில்லியிலுள்ளா கன்னாட் பிளேசுக்கு மேற்கே அமைந்துள்ள மந்திர் மார்க்கில் இந்த கோயில் அமைந்துள்ளது. உள்ளூர் பேருந்துகள், மற்ரும் தனி வாகனங்கள் மூலம் இந்த கோவிலை நகரத்திலிருந்து எளிதாக அணுக முடியும். அருகிலுள்ள தில்லி மெட்ரோ நிலையம் ஆர்.கே.ஆசிரமம் மார்க் மெட்ரோ நிலையம், சுமார் 2 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது அதே சாலையில் புது தில்லி, காளி கோயிலும் உள்ளது.
புகைப்படத் தொகுப்பு
குறிப்புகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads

