இந்து சமய விழாக்களின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல் From Wikipedia, the free encyclopedia

Remove ads

இது இந்து சமய விழாக்களை பட்டியலிடும் கட்டுரையாகும்.

நாள்காட்டி வகைகள்

Thumb
பாரதத்தில் ஞாயிறு (நிரயனமுறை, செம்மஞ்சள்), திங்கள் (அமையந்தமுறை, நீலம்), திங்கள் (பூரணையந்தமுறை, சிவப்பு) நாள்காட்டிகள் பின்பற்றும் பகுதிகளின் வரைபடம்

பாரதத்தில் தற்காலத்தில் நான்கு வகை நாள்காட்டிகள் பின்பற்றப்படுகின்றன.

  1. ஞாயிறு நாள்காட்டி
    1. நிரயனமுறை - அயனபாகத்தைக் கணக்கில் கொள்ளாது புவியிலிருந்து பார்க்கும் பொழுது ஓரைகளின் பின்னணியில் ஞாயிற்றின் நகர்வை அளந்து கணக்கிடப்படும் ஆண்டுமுறையும் அந்த ஆண்டைப் பகுத்துக் கணக்கிடப்படும் ஞாயிறுமுறையும் (திங்கள்முறையும்) கொண்டது. - வரைபடத்தில் செம்மஞ்சள்நிறம்
  2. திங்கள் நாள்காட்டி
    1. அமையந்தமுறை - அமையை திங்களின் கடைசி நாளாகக் கொண்டு கணக்கிடப்படும் திங்கள்முறை - வரைபடத்தில் நீலநிறம்
    2. பூரணையந்தமுறை - பூரணையை திங்களின் கடைசி நாளாகக் கொண்டு கணக்கிடப்படும் திங்கள்முறை - வரைபடத்தில் சிவப்புநிறம்
    3. அமைக்குப் பின் பிறை தெரியும் முதல் நாளான மூன்றாம்பிறையை (வளர்பிறை துவிதியையை) திங்களின் முதல் நாளாகக் கொண்டு கணக்கிடப்படும் திங்கள்முறை

இவற்றில், அமையந்தம் முறையில் கணக்கிடப்படும் திங்களில் வளர்பிறை முதலிலும் தேய்பிறை இரண்டாவதாகவும் வரும். பூரணையந்தம் முறையில் கணக்கிடப்படும் திங்களில் தேய்பிறை முதலிலும் வளர்பிறை இரண்டாவதாகவும் வரும். ஒரு திங்களில் இரண்டு முறைகளிலும் வளர்பிறை பொதுவாக வரும். அமையந்தம் முறையில் வளர்பிறை பக்கத்திற்கு பிந்தைய தேய்பிறைப் பக்கத்தை அத்திங்களின் தேய்பிறைப் பக்கமாகவும் பூரணையந்தம் முறையில் வளர்பிறைப் பக்கத்திற்கு முந்தைய தேய்பிறைப் பக்கத்தை அத்திங்களின் தேய்பிறைப் பக்கமாகவும் எடுத்துக்கொள்வர்.

இவையல்லாமல், தமிழ்நாட்டில் சங்ககாலத்தில், நிரயனமுறை ஞாயிறு நாள்காட்டியுடன் சேர்த்து பூரணையைத் திங்களின் முதல் நாளாகக் கொண்டு கணக்கிடப்படும் திங்களைக் கொண்ட திங்கள் நாள்காட்டியும் இருந்துள்ளது. ஞாயிறு நாள்காட்டியில் மற்றொரு முறையான புவியிலிருந்து பார்க்கும் பொழுது ஞாயிறு உதயத்தின் வடக்கு தெற்கு நகர்வை வைத்து ஆண்டைக் கணக்கிடும் அயனமுறையைப் பற்றி அறிந்திருந்தாலும் நிரயனமுறை ஞாயிறு நாள்காட்டியையே பின்பற்றி வந்துள்ளனர்.

Remove ads

ஞாயிறு நாட்காட்டிப்படி கொண்டாடப்படும் விழாக்கள்

தமிழ்நாடு

பொது

மேலதிகத் தகவல்கள் திங்கள், நாள் ...

உள்ளூர்

மேலதிகத் தகவல்கள் திங்கள், நாள் ...

குறிப்பு :

  1. வானியல் குறிப்பு
    1. ஞாயிறு நாட்காட்டி என்றால் திங்கள் என்பது ஞாயிற்றின் இருப்பிடத்தைக் குறிக்கும்(சித்திரைத்திங்கள்=மேழஞாயிறு,...,பங்குனித்திங்கள்=மீனஞாயிறு). 1 ஓரைவட்டம்(ராசிச்சக்ரம்)=12 ஓரை(ராசி)=360 பாகை.
    2. நாளில் உள்ள நாண்மீன்(நாள்+மீன்=நாண்மீன்,நக்ஷத்ரம்) என்பது திங்களின் இருப்பிடத்தைக் குறிக்கும்.
      1. ஞாயிறு நாட்காட்டியில் நாள் என்றால் நாண்மீன். நாண்மீன் என்றால் திங்களின் இருப்பிடத்தைக் குறிக்கும். 1 நாண்மீன்வட்டம்=27 நாண்மீன்=360 பாகை.
      2. திங்கள் நாட்காட்டியில் நாள் என்றால் திதி. திதி என்றால் புவியை நடுவில் வைத்துப் பார்க்கும் பொழுது ஞாயிறு, திங்கள் இடையே உள்ள கோணத்தைக் குறிக்கும். ஞாயிறு-திங்கள்-புவி=0 பாகை=அமை. ஞாயிறு-புவி-திங்கள்=180 பாகை=பூரணை.
    3. நாளைக் குறிக்கும் முறை=திங்கள்+நாள்
      1. ஞாயிறு நாட்காட்டியில், ஞாயிறு இருக்கும் ஓரை=திங்கள், திங்கள் இருக்கும் நாண்மீன்=நாள். இவை இரண்டையும் சேர்த்தே நாள் குறிப்பிடப்படுகிறது. காட்டாக, வைகாசி விசாகம் என்றால் அன்று ஞாயிறு இடப ஓரையிலும்(வைகாசித்திங்கள்=இடபஞாயிறு) திங்கள் விசாக நாண்மீனிலும் இருப்பதாகப் பொருள்.
      2. ஒரு நிகழ்வு நிகழும் பொழுதும் நாள் இதன்படியே கூறப்படுகிறது. நாள் எண் என்பது இன்று ஆங்கில நாட்காட்டியில் உள்ளதைப் போல புறவாழ்வின்(Civil) பயன்பாட்டிற்காக பயன்படுவது. அதே நேரம், இங்கு கூடுதலாக நாள் எண் என்பது ஞாயிற்றின் இருப்பிடத்தையும் குறிக்கிறது. காட்டாக, ஆடி 18 என்றால் தோராயமாக ஞாயிறானவர் ஆயிலிய நாண்மீனில் நுழைகிற நாள் என அறியலாம். இது ஆங்கில நாட்காட்டியில் இயலாது.
      3. பிறந்தநாள்
        1. ஞாயிறு நாட்காட்டியில், ஒருவர் பிறக்கும் பொழுது ஞாயிறு இருக்கும் ஓரை=பிறந்ததிங்கள். திங்கள் இருக்கும் நாண்மீன்=பிறந்தநாள். ஞாயிறு நாட்காட்டியில், ஒருவர் பிறந்த பொழுது ஞாயிறு இருந்த அதே ஓரைக்கும் திங்கள் இருந்த அதே நாண்மீனிற்கும் வருவதே பிறந்தநாள் ஆகும். காட்டாக, வைகாசி விசாகம் பிறந்தநாள் என்றால் ஞாயிறு இடப ஓரையிலும்(வைகாசித்திங்கள்=இடபஞாயிறு) திங்கள் விசாக நாண்மீனிலும் இருப்பதாகப் பொருள். ஆண்டுதோறும் இச்சேர்க்கை நிகழும் நாளே பிறந்தநாள்.
        2. திங்கள் நாட்காட்டியில், ஒருவர் பிறக்கும் பொழுது நடக்கும் திங்கள்=பிறந்ததிங்கள், ஒருவர் பிறக்கும் பொழுது இருக்கும் திதி=பிறந்தநாள்.
        3. வயதைக் கூறும் பொழுது, ஓராண்டு அல்லது ஓராண்டிற்கு மேல் என்றால் முழுமையாக நிறைவடைந்த ஆண்டுகளின் எண்ணிக்கையைக் கூறுவது மரபு.
  2. பொதுக் குறிப்பு
    1. விழா என்றால் நோன்பும் வழிபாடும் சேர்ந்தே இருக்கும்
    2. நோன்பு என்றால் வழிபாடும் சேர்ந்தே இருக்கும்
    3. பிறந்தநாள் என்றால் வழிபாடும் சேர்ந்தே இருக்கும்

ஞாயிறுப்பெயர்ச்சி

  1. ஓரைவட்டத்தில் நிகழும் பெயர்ச்சி=திங்கட்பிறப்பு - ஒவ்வொரு திங்களின் பொழுதும் அதற்கான ஓரை, ஞாயிறு உதயத்தின் பொழுது உதயமாகும்
    1. சங்கராந்தி
      1. சித்திரைப்பிறப்பு - மேழ சங்கராந்தி
      2. ஆடிப்பிறப்பு - கடக சங்கராந்தி
      3. தைப்பிறப்பு - மகர சங்கராந்தி
  2. நாண்மீன்வட்டத்தில் நிகழும் பெயர்ச்சி
    1. கார்த்திகை - ஒவ்வொரு கார்த்திகையின் பொழுதும் அதற்கான நாண்மீன், ஞாயிறு உதயத்தின் பொழுது உதயமாகும்
      1. அச்சுவினி=அச்சுவினிக் கார்த்திகை, பரணி=பரணிக் கார்த்திகை, கார்த்திகை=கார்த்திகைக் கார்த்திகை,...,இரேவதி=இரேவதிக் கார்த்திகை
    2. பிற
      1. ஞாயிறானவர் கார்த்திகை(அழல்=நெருப்பு,அழல்=கார்த்திகை) நாண்மீனில் பயணிக்கும் நாள்கள் அக்கினி நட்சத்திரம் ஆகும். இதை பல்வேறு முறைகளில் கணக்கிட்டுப் பின்பற்றுகின்றனர்.
        1. முறை 1
          1. பரணி 3-கார்த்திகை-உரோகணி 2 - அக்கினி நட்சத்திரம்
            1. கார்த்திகை - கத்தரி
        2. முறை 2
          1. சித்திரை கடைசி ஏழுநாள்கள்-வைகாசி முதல் ஏழுநாள்கள் - அக்கினி நட்சத்திரம்
      2. மகம் 4 - ஆவணி உச்சம்
      3. பூராடம் - கருவோட்டம்=கர்போட்டம்

வியாழன்பெயர்ச்சி

பிற திருநாள்கள்

  1. சிவமதம்(சைவம்)
    1. நடராசர் அபிஷேகம்
      1. சித்திரை ஓணம்
      2. ஆனி உத்தரம்
      3. ஆவணி வளர்பிறை சதுர்தசி
      4. புரட்டாசி வளர்பிறை சதுர்தசி
      5. மார்கழி ஆதிரை
      6. மாசி வளர்பிறை சதுர்தசி
    2. குருபூசை
      1. சமயக்குரவர் நால்வர் குருபூசை
        1. சித்திரைச் சதயம் - திருநாவுக்கரசர் குருபூசை
        2. வைகாசி மூலம் - திருஞானசம்பந்தர் குருபூசை
        3. ஆடிச் சோதி - சுந்தரர் குருபூசை
        4. ஆனி மகம் - மாணிக்கவாசகர் குருபூசை
      2. நாயன்மார்கள் குருபூசை
  2. விண்ணவமதம்(வைணவம்,வைஷ்ணவம்)
    1. பிறந்தநாள்
      1. ஆழ்வார்கள் பிறந்தநாள்
      2. ஆசாரியார்கள் பிறந்தநாள்

நோன்பும் ஆண்டுவிழாவும்

தவறான சொல்லாடல்

பிற

கேரளம்

துளுவம்

குடகு

பிற மாநிலங்கள்

வியாழன்பெயர்ச்சி

Remove ads

திங்கள் நாட்காட்டிப்படி கொண்டாடப்படும் விழாக்கள்

மேலதிகத் தகவல்கள் திங்கள், நாள் ...

குறிப்பு :

  1. திங்கள் நாட்காட்டிப்படி கணிக்கப்பட்ட ஒரு நாளை அப்படியே ஞாயிறு நாட்காட்டியில் பார்த்தால் சில ஆண்டுகளில் திங்கள் மாறி வரும். காட்டாக, இராம நவமி திங்கள் நாட்காட்டிப்படி சித்திரைத் திங்களில் வரும். அதே நேரம், திங்கள் நாட்காட்டிப்படி கணிக்கப்பட்ட அந்த நாளை ஞாயிறு நாட்காட்டியில் பார்த்தால், சில ஆண்டுகளில் பங்குனியில் வரும். சில ஆண்டுகளில் சித்திரையில் வரும். ஞாயிறு நாட்காட்டியில், ஒரு விழாவின் திங்கள் மாறி மாறி வந்தாலே அது திங்கள் நாட்காட்டிப்படி வரும் விழா என்று பொருள்.

நோன்பும் ஆண்டுவிழாவும்

வேறுபாடு

  1. ஆண்டுப்பிறப்பு
  2. புற்று நாகர் வழிபாடு
    1. முறை 1 - ஆந்திரம்,தெலிங்கானம்,கன்னாடகம் - மூன்றுநாள்கள் விழா - [24]
      1. கார்த்திகை வளர்பிறை சதுர்த்தி - நாக சதுர்த்தி
      2. கார்த்திகை வளர்பிறை பஞ்சமி - நாக பஞ்சமி
      3. கார்த்திகை வளர்பிறை சஷ்டி - நாக சஷ்டி - வேறுபெயர்=சுப்பிரமணிய சஷ்டி
    2. முறை 2
      1. மார்கழி வளர்பிறை பஞ்சமி - நாக பஞ்சமி - ஆந்திரம்
      2. மார்கழி வளர்பிறை சஷ்டி - கந்த சஷ்டி - கன்னாடகம் - வேறுபெயர்=சுப்பிரமணிய சஷ்டி,சம்ப சஷ்டி
    3. முறை 3 - ஆந்திரம்,தெலிங்கானம் மாநிலங்களில் சிலர்,கன்னாடகம் உட்பட பிற மாநிலங்கள்
      1. ஆவணி வளர்பிறை சதுர்த்தி - நாக சதுர்த்தி
      2. ஆவணி வளர்பிறை பஞ்சமி - நாக பஞ்சமி
    4. முறை 4 - குசராத்து[25],கன்னாடகம்,இராசத்தானம்
      1. ஆவணி (அமையந்தம் முறை)/புரட்டாசி (பூரணையந்தம் முறை) தேய்பிறை பஞ்சமி - நாக பஞ்சமி
  3. அனுமன் ஜெயந்தி
    1. சித்திரை வளர்பிறை பூரணை=சித்ரா பௌர்ணமி - வடமாநிலங்கள்
    2. வைகாசி (அமையந்தம் முறை) தேய்பிறை தசமி - ஆந்திரம்,தெலிங்கானம்,கன்னாடகம் - [26][27]
    3. மார்கழி வளர்பிறை திரியோதசி - கன்னாடகம் - [28]
  4. பலராம ஜெயந்தி
    1. வைகாசி வளர்பிறை திரிதியை=அட்சய திருதியை
    2. ஆவணி வளர்பிறை பூரணை
    3. புரட்டாசி (பூரணையந்தம் முறை) தேய்பிறை சஷ்டி
  5. துர்கா பூசை
  6. மகாலட்சுமி பூசை
  7. சரசுவதி பூசை
    1. ஐப்பசி வளர்பிறை நவமி - சரசுவதி பூசை
    2. மாசி வளர்பிறை பஞ்சமி - வசந்த பஞ்சமி
  8. விசுவகருமா பூசை
    1. புரட்டாசி வளர்பிறை பஞ்சமி - ரிஷி பஞ்சமி
  9. ரிஷி பஞ்சமி
    1. புரட்டாசி வளர்பிறை பஞ்சமி - ரிஷி பஞ்சமி
    2. மாசி வளர்பிறை பஞ்சமி - வசந்த பஞ்சமி
  10. ரக்ஷா பந்தன்
    1. ஆவணி வளர்பிறை பூரணை - ரக்சா பந்தன்
    2. புரட்டாசி வளர்பிறை பஞ்சமி - ரிஷி பஞ்சமி
  11. பாய் தூஜ்
  12. வட சாவித்திரி

பிற

Remove ads

பிற

பிற

நோன்பு

பிறை வழிபாடு

  • பிறை பார்த்தல்

பிறந்தநாள்

பிற

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads