இலால் மண்டி நடைபாலம்

From Wikipedia, the free encyclopedia

இலால் மண்டி நடைபாலம்map
Remove ads

இலால் மண்டி நடைபாலம் (Lal Mandi Footbridge) என்பது இந்திய ஒன்றிய பிரதேசமான ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள சிறிநகரில் அமைந்துள்ள ஒரு தொங்கு பாலமாகும். இது நகரின் வசீர் பாக் பகுதிகளை நகர மையப்பகுதியான இலால் சௌக்குடன் இணைக்கிறது.

விரைவான உண்மைகள் இலால் மண்டி நடைபாலம் Lal Mandi Footbridge, ஆள்கூற்று ...
Remove ads

வரலாறு

நகரத்தில் ஜீலம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட முதல் தொங்கு பாலம் இதுவாகும்.[1] முப்தி முகமது சயீத் தலைமையிலான சம்மு காசுமீர் மக்களின் சனநாயக கட்சி-காங்கிரசு கூட்டணி அரசாங்கத்தின் கீழ் இரண்டு வருட ஆட்சி காலப்பகுதியில் கட்டப்பட்டது. இது நகரின் மையத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கப் பெரிதும் உதவியது.[2]

அமைவிடம்

சிறிநகரின் தின்டேல் பிசுகோ பள்ளிக்கு அருகில் அமைந்துள்ள இந்தப் பாலம் முக்கியமான நடைபாதையாகும்.

பயன்பாடு

வஜீர் பாக் குடியிருப்புப் பகுதியை இலால் சௌக்குடன் இணைக்கும் பாலம் பரபரப்பான நடைபாதை. இது பெரும்பாலும் தின்டேல் பிசுகோ பள்ளி மாணவர்களால் பயன்படுத்தப்படுகிறது.

மேலும் பார்க்கவும்

படங்கள்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads