இலித்தியம் சல்பேட்டு
வேதியியல் சேர்மம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
இலித்தியம் சல்பேட்டு (Lithium sulfate) என்ற வெள்ளை நிற கனிம உப்பின் மூலக்கூறு வாய்ப்பாடு Li2SO4. இது கந்தக அமிலத்தின் இலித்தியம் உப்பு ஆகும்.
Remove ads
பண்புகள்
இலித்தியம் சல்பேட் நீரில் கரையும் என்றாலும் வழக்கமான வெப்பத்திற்கு எதிரான கரைதல் போக்குகளை பின்பற்றுவதில்லை. வெப்பநிலை அதிகரிக்கும்போது தண்ணீரில் இதனுடைய கரைதிறன் குறைகிறது. இவ்வாறு தண்ணீரில் இது கரையும்போது வெப்பம் உமிழப்படுகிறது. இலந்தனைடு சல்பேட்டு போன்ற கனிமச் சேர்மங்களுடன் இலித்தியம் சல்பேட்டு இப்பண்பில் ஒத்திருக்கிறது.
அழுத்தமின் விளைவு கொண்ட இலித்தியம் சல்பேட்டு படிகங்கள் சிறப்பான ஒலி உற்பத்திசெய்யும் சாதனங்கள் ஆகையால் அழிவை ஏற்படுத்தாத மீயொலி வகை ஆய்வுகளில் இவை பயன்படுகின்றன. எனினும் அவற்றின் தண்ணீரில் கரைதிறன் பண்பு இந்த ஆய்வுகளிலும் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
Remove ads
பயன்கள்
இலித்தியம் சல்பேட்டு இருமுனையப் பிறழ்வு சிகிச்சையில் பயன்படுகிறது.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads