பொட்டாசியம் சல்பேட்டு

From Wikipedia, the free encyclopedia

பொட்டாசியம் சல்பேட்டு
Remove ads

பொட்டாசியம் சல்பேட்டு (Potassium sulfate) என்பது K2SO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டை உடைய கனிமச் சேர்மம் ஆகும். இது வெண்மை நிறம் உடைய நீரில் கரையக்கூடிய திண்மப் பொருளாகும். இது பொதுவாக உரங்களில் பயன்படுத்தப்படுகிறது, இது பொட்டாசியம் மற்றும் கந்தகம் ஆகிய இரண்டிற்குமான மூலமாகச் செயல்படுகிறது.

விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...
Remove ads

வரலாறு

பொட்டாசியம் சல்பேட் (K2SO4) 14 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து அறியப்பட்டுள்ளது. இச்சேர்மத்தை கிளாபர், பாயில், மற்றும் டாசேனியஸ் ஆகியோர் ஆய்வு செய்துள்ளனர். 17 ஆம் நூற்றாண்டில், இச்சேர்மம் ஒரு அமில உப்பாகவும், கார உப்பாகவும் இருந்த காரணத்தால் அல்கானுனி அல்லது சால் டூப்ளிகேட்டம் என்று பெயரிடப்பட்டது. மருந்து வேதியியலாளர் கிறிஸ்டோபர் கிளாசருக்குப் பிறகு இது விட்ரியோலிக் டார்டார் மற்றும் கிளாசரின் உப்பு அல்லது சால் பாலிக்ரெஸ்டம் கிளாசெரி என்றும் அழைக்கப்பட்டது. [4] [5]

அர்கானம் டூப்ளிகேட்டம் என்ற ( "இரட்டை இரகசிய") அல்லது முன் நவீன மருத்துவத் துறையில் சர்வ ரோக நிவாரணியாக அறியப்பட்ட பானாசியா டூப்ளிகேட்டம் என்றும் அழைக்கப்பட்டது. இச்சேர்மம், பொட்டாசியம் நைட்ரைட்டு (KNO3), கந்தக அமிலம் (H2SO4) ஆகியவற்றிலிருந்து நைட்ரிக் அமிலம் (HNO3) தயாரிக்கும் கிளாபர் செயல்முறையில் விடுபட்டுப் போன மீதப்பொருளிலிருந்து தயாரிக்கப்பட்டது.

2 KNO 3 + H 2 SO 4 → 2 HNO 3 + K 2 SO 4

மேற்கண்ட வினையில் கிடைக்கும் துணை விளைபொருளானது, சூடான நீரில் கரைக்கப்பட்டு, வடிகட்டப்பட்டு, ஒரு உறை கொண்டு ஆவியாக்கப்படுகிறது. பின்னர் அது படிகமாக்கப்படுகிறது. இது ஒரு சிறுநீர்பெருக்கியாகவும், வியர்வைதள்ளியாகவும் பயன்படுத்தப்பட்டது. [6]

சேம்பர்ஸ் சைக்ளோபீடியாவின் கூற்றுப்படி, இந்த செய்முறையை ஐநூறு செருமன் வெள்ளி நாணயங்களுக்கு ஹால்ஸ்டீன்-கோட்டார்ப் டியூக் சார்லஸ் ஃபிரடெரிக் வாங்கினார். டியூக்கின் மருத்துவரான ஷ்ரோடர், உடல் நலக்குறைவு வந்து விடுமோ என்ற மிகையச்சம் கொண்டவர்களின் சிகிச்சையிலும், விட்டுவிட்டு வரும் காய்ச்சல், கல் தோன்றுதல், ஸ்கர்வி போன்ற நோய்களின் சிகிச்சையிலும் இச்சேர்மத்தின் பெரிய பயன்பாடுகளின் அதிசயங்களை எழுதினார். [6]

Remove ads

இயற்கை வளங்கள்

பொட்டாசியம் சல்பேட்டின் கனிம வடிவமான ஆர்கனைட் ஒப்பீட்டளவில் அரிதானது. பொட்டாசியம் சல்பேட்டின் இயற்கை வளங்கள் ஸ்டாஸ்ஃபர்ட் உப்பில் காணப்படும் ஏராளமான தாதுக்கள் ஆகும். இவை பொட்டாசியம் சல்பேட் மற்றும் மெக்னீசியம் கால்சியம் மற்றும் சோடியத்தின் சல்பேட்டுகளின் சகபடிவமாக்க உருவங்கள் ஆகும்.

தொடர்புடைய தாதுக்கள்:

  • கைனைட், MgSO4·KCl·H2O
  • ஷானைட் (இப்போது பிக்ரோமைரைட் என அழைக்கப்படுகிறது), K2SO4·MgSO4· 6H2O
  • லியோனைட், K2SO4· MgSO4·4H2O.
  • லாங்பீனைட், K2Mg2(SO4)3
  • ஆப்திடலைட் (முன்பு கிளாசரைட் என்று அழைக்கப்பட்டது), K3Na(SO4)2
  • பாலிஹலைட், K2SO4·MgSO4·2CaSO4· 2H2O.

பொட்டாசியம் சல்பேட்டை கைனைட் போன்ற இந்த தாதுக்களில் சிலவற்றிலிருந்து பிரிக்கலாம், ஏனெனில் அதனுடன் தொடர்புடைய உப்பு நீரில் குறைவாக கரையக்கூடியது.

கீசரைற்று, MgSO4·H2O பொட்டாசியம் குளோரைடு கரைசலுடன் சேர்க்கப்பட்டு வினைப்படுத்தப்படுவதன் மூலம் பொட்டாசியம் சல்பேட்டானது உற்பத்தி செய்யப்படலாம்.

Remove ads

உற்பத்தி

1985 ஆம் ஆண்டில் சுமார் 1.5 மில்லியன் டன்கள் அளவிற்கு பொட்டாசியம் சல்பேட்டு உற்பத்தி செய்யப்பட்டது. பொதுவாக பொட்டாசியம் குளோரைடு சல்பூரிக் அமிலத்துடன் வினைபுரிந்து இச்சேர்மத்தை தந்தது. இது சோடியம் சல்பேட்டை உற்பத்தி செய்வதற்கான மான்கீம் செயல்முறைக்கு ஒப்பானது. இந்த செயல்முறையானது பொட்டாசியம் பைசல்பேட்டினை இடைநிலை விளைபொருளாக உருவாக்கும், அறை வெப்பநிலையில் ஏற்படும் ஒரு வெப்பஉமிழ் வினையாகும்.:

KCl + H 2 SO 4 → HCl + KHSO 4

செயல்முறையின் இரண்டாவது படி வெப்பம் கொள் வினையாகும். வினையின் இப்படிக்கு ஆற்றல் உள்ளீடு தேவைப்படுகிறது:

KCl + KHSO 4 → HCl + K 2 SO 4

கட்டமைப்பு மற்றும் பண்புகள்

இரண்டு படிக வடிவங்கள் அறியப்படுகின்றன. செஞ்சாய்சதுரப்படிக β-K2SO4 என்பது பொதுவான வடிவம், ஆனால் இது 583° செல்சியசு வெப்பநிலைக்கு மேலே α-K2SO4 ஆக மாறுகிறது. சல்பேட்டுகள் வழக்கமான நான்முகி வடிவமைப்பைக் கொண்டிருந்தாலும், இந்த கட்டமைப்புகள் சிக்கலானவையாக இருக்கின்றன. [7]

இது சோடியம் சல்பேட்டு போலல்லாமல் ஒரு ஐதரேட்டை உருவாக்குவதில்லை. உப்பானது, இரட்டை ஆறு பக்க பிரமிடுகளாக படிகமாகிறது, இது செஞ்சாய்சதுரமாக வகைப்படுத்தப்படுகிறது. அவை ஒளிஊடுருவக்கூடியதும், மிகவும் கடினமானதும் மற்றும் கசப்பான, உப்புச் சுவை கொண்டவையும் ஆகும். இந்த உப்பு நீரில் கரையக்கூடியது, ஆனால் பொட்டாசியம் ஐதராக்சைடு ( sp. Gr. 1.35) அல்லது முழுமையான எத்தனால் கரைசலில் கரையாதது.

பொட்டாசியம் சல்பேட்டு தண்ணீரில் சூடுபடுத்தப்பட்டு, ஒரு பீக்கரில் சுற்றுவதற்கு உட்பட்டால், படிகங்கள் உருவாகும்போது பல கை சுழல் கட்டமைப்பை உருவாக்குகின்றன. [8]

Remove ads

பயன்கள்

பொட்டாசியம் சல்பேட்டின் மிக முக்கியமான பயன்பாடு உரமாகும் . K2SO4 குளோரைடைக் கொண்டிருக்கவில்லை. இது சில பயிர்களுக்கு தீங்கு விளைவிக்கும். புகையிலை, சில பழங்கள் மற்றும் காய்கறி பயிர்களுக்கு பொட்டாசியம் சல்பேட்டு விரும்பப்படுகிறது. பாசன நீரிலிருந்து குளோரைடை மண் சேர்த்து வைத்துக் கொண்டால், குறைந்த உணர்திறன் கொண்ட பயிர்களின் உகந்த வளர்ச்சிக்கு பொட்டாசியம் சல்பேட்டு தேவைப்படலாம். [9]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads