ஈச்சனாரி விநாயகர் கோவில்
தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் நகரில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க விநாயகர் கோயில் From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஈச்சனாரி விநாயகர் கோயில் (Eachanari Vinayagar Temple) தமிழ்நாட்டில் கோயம்புத்தூரருகே ஈச்சனாரியில் அமைந்துள்ள ஒரு இந்துக் கோயிலாகும். இக்கோயிலின் முதன்மைக் கடவுள் பிள்ளையார் ஆவார். கோயம்புத்தூரிலிருந்து பொள்ளாச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலையோரம் (சாலை எண் 209 - பழைய எண்ணிடல்) கிட்டத்தட்ட 10 கி.மீ. தொலைவில் இக்கோயில் உள்ளது.[1]
Remove ads
வரலாறு

5 அடி உயரமும் 3 அடி அகலமும் கொண்ட இக்கோயிலின் பிள்ளையார் சிலை பேரூர் பட்டீசுவரர் கோயிலில் வைப்பதற்காக மதுரையிலிருந்து வண்டியில் எடுத்துச் செல்லப்பட்டது. அப்போது இவ்விடத்தில் வண்டியின் அச்சு முறிந்து போனதாகவும், சிலையையும் அங்கிருந்து நகர்த்த முடியவில்லை என்பதாலும், அதே இடத்தில் அத்திருவுருவத்திற்கு கோயில் அமைக்கப்பட்டதாக, மரபு வரலாறு கூறுகிறது.[2]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads