உடல் நீர்மம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
உடல் நீர்மம் அல்லது (இலங்கை வழக்கில்:) உடற்பாயம் (Body fluid) என்பது உயிரினங்களின் உள்ளே உருவாகும், அல்லது சுரக்கும் அல்லது கழிவாக வெளியேறும் நீர்மப் பதார்த்தங்களாகும். இந்த உடல் நீர்மத்தின் முக்கியமான பகுதி உடல் நீர் (body water) ஆகும். குருதி, நிணநீர் (Lymph), சிறுநீர், விந்துப் பாய்மம், உமிழ்நீர், சளி (Sputum), கண்ணீர், பால் யோனிச் சுரப்புக்கள் போன்ற அனைத்து நீர்ம வடிவிலான பதார்த்தங்களும் உடல் நீர்மங்களாக இருக்கின்றன. ஆனாலும், பொதுவாக மருத்துவச் சோதனைகளில் சேகரிக்கப்பட்டு சோதிக்கப்படும் உடல் நீர்மங்களைக் குறிக்கவே இந்தச் சொல் பயன்படுத்தப்படுகின்றது.
இந்த உடல் நீர்மத்தின் கிட்டத்தட்ட 2/3 பகுதி உயிரணுக்களின் உள்ளாக இருக்கும் அகஉயிரணு நீர்மம் (Intracellular fluid) ஆகவும், 1/3 பகுதி உயிரணுக்களுக்கு வெளியாக இருக்கும் வெளிஉயிரணு நீர்மம் (Extracellular fluid) ஆகவும் காணப்படும்).[1]. அகஉயிரணு நீர்மம் என்பது உயிரணுக்களின் உள்ளே உள்ள முதலுருவில் உள்ள நீர்மப் பதார்த்தத்தைக் குறிக்கும். வெளிஉயிரணு நீர்மமானது உயிரணுக்களுக்கு இடையே உள்ள இடைவெளிகளிலும், அனைத்து உடல் நீர்மங்களிலும் காணப்படும் நீர்மப் பதார்த்தத்தைக் குறிக்கும்.
Remove ads
உடல் நீர்மமும் மருத்துவச் சோதனையும்
நோய்களைக் கண்டறிவதற்கு பல் வேறு உடல் நீர்மங்களில் செய்யப்படும் மருத்துவ சோதனைகள் உதவுகின்றன. நோய்களைக் கண்டறிய குருதியே மிகவும் பொதுவான உடல் நீர்மச் சோதனையாக உள்ளது[2]. ஆனாலும் வேறு பல உடல் நீர்மச் சோதனைகளும் நோய் பற்றிய நேரடியான முடிவுக்கு வர உதவுகின்றன[3]. சில எடுத்துக்காட்டுகள்:
- குருதிச் சோதனை - குருதி உடல் முழுவதும் சுற்றி ஓடுவதாலும், உடலுக்குத் தேவையான ஆக்சிசன், ஊட்டச்சத்துக்களை உடலெங்கும் எடுத்துச் செல்வதாலும், உடலின் பல பாகங்களிலும் பெறும் கழிவுப் பொருட்களை கழிவகற்றலுக்கு வேண்டிய இடங்களுக்கு எடுத்துச் செல்வதாலும் பல்வேறு வகையான மருத்துவ நிலைகள் குருதிச் சோதனையில் தெரிகின்றது.
- சிறுநீர் சோதனை - வளர்சிதைமாற்றத்தில், சிறுநீரகத்தில் ஏற்படும் சீர்குலைவுகளைக் கண்டறிய, சிறுநீர்த்தொகுதியில் ஏற்படக்கூடிய தொற்றுநோய்களைக் கண்டறிய, நீரிழிவு நோயை கண்டறிய, கருத்தரிப்பு நிகழ்ந்துள்ளதை உறுதிப்படுத்த[4]
- சளி - காசநோயைக் கண்டறிய[5], நுரையீரல் புற்றுநோயைக்[6] கண்டறிய
- விந்துப் பாய்மம் - மலட்டுத்தன்மையைக் கண்டறிய[7]
Remove ads
உடல் நீர்மமும், உடல் நலமும்
உடல் நீர்மங்கள் ஒரு உயிரினத்தில் இருந்து வேறொரு உயிரினத்தினுள் செல்லும்போது, அல்லது மாற்றீடு செய்யப்படும்போது அவதானமாக இருக்க வேண்டியது அவசியமாகும். ஏனெனில் உடல் நீர்மங்கள் தொற்றுநோய்களை ஏற்படுத்தக்ககூடிய, நோய்க்காவியாக இருக்கும் சாத்தியங்கள் உண்டு. குருதி மாற்றீடு செய்யப்படும்போது, மாற்றீடு செய்யப்படும் குருதி தூய்மையானதாக இருப்பது அவசியம். வேறு வழிகளில் குருதி ஒருவரில் இருந்து இன்னொருவருக்கு கடத்தப்படும்போதும் கவனமாக இருக்க வேண்டும்.[8]. இல்லாவிடின், குருதியில் இருக்கக் கூடிய நோய்க்காரணிகள், இன்னொரு உடலினுள் சென்று, அங்கேயும் நோய் ஏற்படக் காரணமாகலாம். இதேபோல் பால்வினை நோய்கள் பரவுவதற்கும் உடல் நீர்மம் காரணமாகலாம்.[9].
Remove ads
உடல் நீர்மமும் தடய அறிவியலும்
தடய அறிவியலில் உயிரியல் ஆதாரமாகக் காட்டுவதற்கு எலும்பு, பல், நகம், தசை போன்ற பல்வேறு உயிரியல் பொருட்களுடன், இந்த உடல் நீர்மங்களும் பயன்படுகின்றன[10].
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads