உருசியேந்திரமணி

இந்திய நடிகை From Wikipedia, the free encyclopedia

Remove ads

உருசியேந்திரமணி ( Rushyendramani ) (1 ஜனவரி 1917 - 17 ஆகஸ்ட் 2002) ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஓர் இந்திய நடிகையும், பாடகியும், நடனக் கலைஞரும் மற்றும் பின்னணிப் பாடகியும் ஆவார்.[1] இவர் 150 க்கும் மேற்பட்ட திரைப்படங்களின் பணிபுரிந்துள்ளார். மேலும், 1935 முதல் 1986 வரை தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி படங்களில் நடித்துள்ளார். சீதா ராம ஜனனம் (1944), மல்லீஸ்வரி (1951), விப்ரநாராயணா (1954), சிந்தாமணி (1956) போன்றவை இவரது குறிப்பிடத்தக்க படங்களில் அடங்கும். ஸ்ரீ ஷீரடி சாய்பாபா மஹாத்யம் (1986) இவரது கடைசி படமாகும்.[2]

விரைவான உண்மைகள் உருசியேந்திரமணி, பிறப்பு ...
Remove ads

ஆரம்ப கால வாழ்க்கை

உருசியேந்திரமணி 1917 ஜனவரி 1 அன்று ஆந்திரப் பிரதேசத்தின் விசயவாடாவில் பிறந்தார்.

நாடக அரங்கம்

இந்திய பாரம்பரிய இசை மரபுகள் இரண்டிலும் பயிற்சி பெற்ற பாடகியான இவர் குச்சிப்புடி மற்றும் பரதநாட்டியம் ஆகியவற்றிலும் பயிற்சி பெற்றுள்ளார். தனது ஏழு வயதில் மேடையில் தனது வாழ்க்கையைத் தொடங்கிய இவர் பத்து வயதிலேயே கிருட்டிணன் மற்றும் பிரகலாதன் போன்ற வேடங்களில் நடிக்கத் தொடங்கினார். பின்னர் கொம்முரி பட்டாபி ராமையாவின் இலட்சுமி விலாச நாடக சபையில் சேர்ந்தார். கபிலவை ராமநாத சாஸ்திரி, புவ்வுலா ராமதிலகம் ஆகியோரிடம் பயிற்சி பெற்ற இவர் சிந்தாமணி, சாவித்திரி ஆகிய நாடகங்களில் நடித்தார்.

கே. பி. நாகபூசணம் மற்றும் ப. கண்ணாம்பா ஆகியோர் நடத்திவந்த ஸ்ரீ ராஜராஜேஸ்வரி நாட்டிய மண்டலியில் சேர்ந்து, ஆந்திரப் பிரதேசம், கருநாடகம், மகாராட்டிரம், ஒடிசா மற்றும் தமிழ்நாட்டின் சில பகுதிகளை விரிவாகச் சுற்றி வந்தார். ரங்கூன் ரவுடியில் பிரபாவதியாகவும் சாவித்திரியில் நாரதராகவும் நடித்ததற்காக இவர் பாராட்டுகளைப் பெற்றார். இவரது புகழ் மற்றும் நடிப்புத் திறமை இவருக்கு "ராயலசீமா ராணி" என்ற பெயரைப் பெற்றுத் தந்தது.

Remove ads

திருமணம்

பல மேடை நாடகங்களுக்கு இசையமைத்த ஒரு சிறந்த இசைக்கலைஞரும் இசையமைப்பாளருமான ஜவ்வாடி ராமகிருஷ்ண ராவ் நாயுடுவை 1939 இல் திருமணம் செய்து கொண்ட இவர் அவருடன் சென்னைக்கு சென்றார். ராமகிருஷ்ண ராவ் தமிழில் மாத்ரு பூமி படத்தில் இசை உதவியாளராகப் பணியாற்றினார். அந்தக் காலத்தின் பல நடிகர்களைப் போலவே, உருசியேந்திரமணியும் ஒரு சிறந்த பாடகியாகவும் இருந்தார்.[3]

வெள்ளித் திரை

1935 இல் ராஜாராவ் நாயுடு தயாரித்த ஸ்ரீகிருஷ்ண துலாபாரம் என்ற படத்தின் மூலம் வெள்ளித்திரைக்கு சென்று சத்யபாமாவாக நடித்தார். இது வணிகரீதியாக தோல்வியடைந்தது. ஆனால் இவர் தனது பாடல் மற்றும் நடிப்பு திறமைக்காக பாராட்டைப் பெற்றார். பின்னர் ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தின் அடிப்படையில் படமாக்கப்பட்ட பத்னி (1942) திரைப்படத்தில் கண்ணகியாக நடித்தார். கோவலன் வேடத்தில் கோ. சூ. பிரகாஷ் ராவ் நடித்திருந்தார். இந்தப் படத்தின் வெற்றியின் மூலம் உருசியேந்திரமணி திரையுலகின் உச்சத்தை எட்டினார். பின்னர், செஞ்சு லட்சுமி படத்தில் ஆதிலட்சுமியாக நடித்திருந்தார். அதுவும் வெற்றி பெற்றது. 1944 இல் சீதா ராம ஜனனம், அதைத் தொடர்ந்து மல்லீஸ்வரி, விப்ர நாராயணா, மாயா பஜார், ஜகதேக வீருணி கதா, அக்கி ராமுடு, ஸ்ரீ கிருஷ்ணா சத்யா மற்றும் பாண்டுரங்க மஹாத்யம் போன்ற அனைத்து முக்கிய தென்னிந்திய மொழிகள் மற்றும் இந்தியில் 150 படங்களுக்கு மேல் பல்வேறு கதாபாத்திரங்களை ஏற்று நடித்தார். இவரது பாடும் திறமைக்காக கார்வேதிநகரம் மன்னரால் "மதுர கான சரசுவதி" பட்டம் வழங்கப்பட்டது. இவர் தனது பேத்தி பவானியுடன் பூதய்யனா மக அய்யு(1974) என்ற கன்னடத் திரைப்படத்தில் நடித்தார். இப்படத்திற்காக பவானி சிறந்த நடிகைக்கான விருதையும், உருசியேந்திரமணி சிறந்த துணை நடிகைக்கான விருதையும் வென்றார்.

Remove ads

இறப்பு

உருசியேந்திரமணி 17 ஆகஸ்ட் 2002 அன்று சென்னையில் இறந்தார்.[2]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads