எக்ஸ்பிரஸ் அவென்யூ
From Wikipedia, the free encyclopedia
Remove ads
எக்ஸ்பிரஸ் அவென்யூ (ஆங்கில மொழி:Express Avenue) சென்னையில் உள்ள ஒரு பேரங்காடியாகும். இது இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தை சார்ந்ததாகும்.[2] இது 900,000 சதுர அடி இட வசதியைக் கொண்ட சென்னையின் மிகப் பெரிய பேரங்காடியாக உள்ளது. மற்றும் தென் இந்தியாவின் மிக பெரிய விளையாட்டு அரங்கின் தாயகமாகவும் விளங்குகிறது.
Remove ads
விளக்கம்
எக்ஸ்பிரஸ் அவென்யூவில் வணிகம் , தொழில் , பொழுது போக்கு ஓய்வகம், மற்றும் ஒரு கலவைப் பொருள் வங்கிகள் (Shopping) என இவை அனைத்தையும் உள்ளடக்கியிருக்கிறது. இந்தப் பேரங்காடியானது சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒயிட்ஸ் சாலை, பிடல்லாஸ் சாலை, மற்றும் உட்ஸ் சாலை ஆகிய சாலைகளில் கட்டப்பட்டுள்ளது. மேலும் 1500 க்கும் மேற்பட்ட நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் விசையுந்து வாகனங்கள் (மொட்டார் சைக்கிள்) நிறுத்துவதற்கென்று மூன்று நிலை அடித்தள இட வசதிகளும் உள்ளது.
Remove ads
பொழுது போக்கு மற்றும் ஓய்வு
இந்த பேரங்காடியில் பொழுது போக்குக்காக ஒதுக்கப்பட்ட பகுதி மாத்திரம் 70,000 சதுர அடி ( 6,500மீட்டர்2 ) ஆகும். மேலும் சத்தியம் சினிமா (ESCAPE) நிறுவனமானது எக்ஸ்பிரஸ் அவென்யூ நிறுவனத்துடன் ஒப்பந்த அடிப்படையில் இந்தப் பேரங்காடியில் பல் வேறு சிறப்பு அமைப்புகள் கொண்ட எட்டு திரையரங்குகளை அமைத்துள்ளது. இதில் மொத்தம் 1300 மக்களை மகிழ்விக்கும் அளவிற்கு கொள்ளலவு திறன் கொண்ட இருக்கைகளும் உள்ளது. இந்த பேரங்காடியானது, தென் இந்தியாவிலேயே மிகப் பெரிய விளையாட்டு நடை வாணப்பந்தலின் தாயகமாக அமைந்துள்ளது. மேலும் புகழ் சேர்க்கும் வகையில் உலக அளவில் மிகவும், பிரபலமான இங்கிலாந்தைச் சார்ந்த நிறுவனமான ஹாம்லேஸ் (Hamleys) கடை இதனுள் அடங்கியுள்ளது.[3] இதில் குழந்தைகளின் விளையாட்டுப் பொம்மைகள், லண்டன் பேருந்து (London Bus), பர்பி பொம்மை வீடு (Barbie Doll House) என இவை அனைத்தையும் நீங்கள் ஹாம்லேஸ்சில் காண்பீர்கள். இந்தக் கடை 11,000 சதுர அடி பரப்பளவைக் கொண்டுள்ளது. இதன் அருகில் ஒரு தானியங்கி பணம் வழங்கி (ATM) உள்ளது.
Remove ads
வணிக வளாகம்
இந்த வணிக வளாகம் இந்தியாவிலேயே முதல் முறையாக பேரங்காடிக்குள் கட்டப்பட்ட முதல் வணிச் சந்தை இடமாகும். இந்த மண்டலப் பகுதியின் உள் ஒரு சிறப்பு பொருளாதார மண்டலம் உள்ளது. இது 200,000 சதுர அடி (19,000 ச.மீ.) க்கும் மேல் இட வசதியைக் கொண்டுள்ளது.
மொத்த முதலீடு
இந்த பேரங்காடியைத் திறப்புக்கு மொத்த முதலீட்டுத் தொகையானது,
"750 கோடி" என்று புள்ளி விபரம் (Culley) மூலம் உறுதிப்படுத்தப்பட்டது.[4] இதை மே 26 ஆம் தேதி 2010 அன்று தொடங்கிவைக்கப்பட்டது.[1]
ஆதாரம்
வெளியிணைப்பு
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads