எட்டு-புள்ளி கலை சிற்றுண்டியகம்

இந்தியவின் கேரள மாநிலம் கொல்லம் நகரத்தில் உள்ளது From Wikipedia, the free encyclopedia

எட்டு-புள்ளி கலை சிற்றுண்டியகம்map
Remove ads

எட்டு-புள்ளி கலை சிற்றுண்டியகம் (8 Point Art Cafe) என்பது இந்தியாவின் கேரளா மாநிலத்தில் கொல்லம் (குயிலன்) நகரில் அமைந்துள்ள ஒரு கலைக்கூடம் மற்றும் சிற்றுண்டியகம் ஆகும். கொல்லம் நகரில் உள்ள முதல் சர்வதேச தரமான கலை ரசனையில் அமைந்த சிற்றுண்டியகமாகக் கருதப்படுகிறது. ஆசிரம பிக்னிக் கிராம வளாகத்திற்குள் 'பாரம்பர்யா' என்ற புனரமைக்கப்பட்ட பாரம்பரியக் கட்டிடத்தில் இந்த சிற்றுண்டியகம் அமைந்துள்ளது.[2] பிரபல ஓவியக் கலைரும் கலை இயக்குநருமான ஷென்லி இந்த கலை சிற்றுண்டிச் சாலையை அமைப்பதற்காக கொல்லம் மாவட்ட சுற்றுலா மேம்பாட்டு கவுன்சில் அமைப்பிடமிருந்து பாரம்பர்யா கட்டிடத்தை ஐந்து ஆண்டுகளுக்கு எடுத்துக் கொண்டார். கொல்லம் மாவட்ட சுற்றுலா மேம்பாட்டு கவுன்சில் பாரம்பர்யா கட்டிடத்தில் உள்ள சொத்துக்களை புதுப்பித்தல் மற்றும் அமைத்து சீர் செய்தல் பணிகளுக்காக கிட்டத்தட்ட 2 மில்லியன் இந்திய ரூபாயை செலவிட்டுள்ளது.[3]

விரைவான உண்மைகள் நிறுவப்பட்டது, அமைவிடம் ...

தற்போது இந்த எட்டு-புள்ளி கலை சிற்றுண்டியகம் பல்வேறு கண்காட்சிகள், கலை நிகழ்ச்சிகள் மற்றும் பிற நிகழ்வுகள் நடைபெறுகின்ற இடமாக உள்ளது.[4]

Remove ads

பெயர் வரலாறு

எய்ட்-பாய்ண்ட் எனப்படுகின்ற எட்டு-புள்ளி என்பதானது அஷ்டமுடி ஏரியின் எட்டு சிற்றோடைகளை குறிக்கும் வகையில் எண்கலை வடிவங்களைக் கொண்டு அமைந்துள்ளது.[5]

பார்வையாளர்கள் நேரம்

வாசிக்க நூலகம், பண்பாட்டுக்கான தளம், கண்காட்சிக்கான இடம், சிற்றுண்டியகம் ஆகியவை ஒருங்கே ஒரே வளாகத்தில் இந்த சிற்றுண்டியகம் பெற்றுள்ளது. எட்டு-புள்ளி கலை சிற்றுண்டியகம் பொழுதைப் போக்க சிறந்த இடமாகக் கருதப்படுகிறது. அமைதியான சூழலும், உணவு வகைகளும் இங்கு காணப்படுகின்றன. கொல்லம் நகரில் ஆஸ்ரமம் பகுதியில் இந்த சிற்றுண்டியகம் காலை 11.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை திறந்திருக்கும். இந்த சிற்றுண்டியகத்திற்கு விடுமுறை இல்லை. பொழுதைக் கழிக்க மாலை நேரம் மிகவும் வாய்ப்பான நேரமாக அமையும்.[6]

Remove ads

உணவு வகைகள்

கஞ்சி, பயறு, கப்பா பிரியாணி, சிக்கன் பர்கர், சுலைமணி போன்றவை இங்கு முக்கியமானவையாகும். ஒரு சிற்றுண்டி சாலையில் பார்வையாளர்கள் எதிர்பார்க்கின்ற அனைத்தும் இங்கு காணப்படுகிறது. பாரம்பரிய கேரள உணவு வகை மட்டுமன்றி பிற இடங்களில் காணப்படுகின்ற உணவு வகைகளும் இங்கு உள்ளன. இங்கு வருபவர்கள் முக்கியமாக இங்கு பரிமாறப்படுகின்ற கஞ்சிக்காகவும் பயறுக்காகவும் வருகின்றார்கள். இதே வகையைச் சேர்ந்த பிற சிற்றுண்டி சாலைகளில் கிடைக்கப் பெறாத பல சிறப்பு உணவு வகைகளை இங்கு பெற முடியும். அதைப் போலவே இங்கு பரிமாறப்படுகின்ற பர்கர் மற்றும் வறுவல் வகைகளுக்காக பலர் ஆர்வமுடன் இங்கு வந்து செல்கின்றனர்.[6]

வசதிகள்

Thumb
சிற்றுண்டியகம் அமைந்துள்ள பாரம்பரியக் கட்டடம்

உணவு வகைகளைத் தவிர இங்கு முக்கியமாக அமைந்துள்ள இடமாகக் கருதப்படுவது, கேரள மாநிலத்திலேயே முதலாக அமைந்த, சிறிய இலவச நூலகம் எனப்படுகின்ற நூலகம் ஆகும்.

Thumb
சிற்றுண்டியகத்தில் கேரளாவின் முதல் சிறிய இலவச நூலகம்

கேரளாவில் முதல் சிறிய இலவச நூலகம் 8 பாயிண்ட் ஆர்ட் கபேயில் அமைக்கப்பட்டுள்ளது.[7] நூலகமானது முற்றத்தில் அமைந்துள்ள சிறிய அலமாரியில் 50 நூல்களைக் கொண்டு இயங்கி வருகிறது. மேலும் வாசகர்கள் ஒரு நூலை கட்டணம் இன்றி எடுத்து வாசிக்கலாம். அதே சமயம் அந்த வாசகர்கள் தன்னுடன் ஒரு நூலை அவர்களுடன் கொடுத்து பரிமாறிக் கொள்ளலாம்.[8] அங்கிருக்கும் நூலைப் பெற்றுக்கொண்டு நம்மிடம் உள்ள நூலைத் தருகின்ற வசதி இங்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுபோன்ற வசதியின் காரணமாக இது பிற சிற்றுண்டி சாலைகளிலிருந்து வேறுபடுகிறது. சிறப்பான உணவு வகைகளைத் தவிர இங்கு முக்கியமாக அமைந்துள்ள இடமாகக் கருதப்படுவது, கேரள மாநிலத்திலேயே முதலாக அமைந்த, சிறிய இலவச நூலகம் எனப்படுகின்ற நூலகம் ஆகும். நாம் வைத்திருக்கும் ஒரு நூலை அங்கு கொடுத்துவிட்டு அங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ள நூல் தொகுப்பிலிருந்து ஒரு நூலைப் பெற்றுக் கொள்ளும் வசதி இங்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுபோன்ற வசதியின் காரணமாக இது பிற சிற்றுண்டி சாலைகளிலிருந்து வேறுபட்டுத் திகழ்கிறது.[6]

இங்கு அவ்வப்போது கலைக் கண்காட்சிகள் நடைபெற்றுவருகின்றன. கலைஞர்களின் படைப்புகள் இங்கு காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன. விளக்கு ஒளியோடு அமைந்துள்ள உள் கூடம் தற்கால ஓவியங்களையும் நவீன ஓவியங்களையும் கொண்டு அமைந்துள்ளது. ஒவ்வொரு மாதமும் பண்பாட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.[6]

Remove ads

இவற்றையும் காண்க

குறிப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads