எண்கண் ஆதிநாராயண பெருமாள் கோயில்
தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்திலுள்ள ஒரு பெருமாள் கோயில் From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆதிநாராயண பெருமாள் கோயில் என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் திருவாரூர் மாவட்டத்தின் எண்கண் புறநகர்ப் பகுதியில் அமையப் பெற்றுள்ள ஒரு பெருமாள் கோயில் ஆகும்.
Remove ads
அமைவிடம்
கடல் மட்டத்திலிருந்து சுமார் 38.41 மீட்டர்கள் (126.0 அடி) உயரத்தில் (10.813271°N 79.542385°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு திருவாரூர் மாவட்டத்தில் இக்கோயில் அமைந்துள்ளது.
சிறப்பு
மூலஸ்தானத்தில் மூலவர் ஆதிநாராயண பெருமாள் கருட வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சி தருவது இக்கோயிலின் சிறப்பம்சமாகும்.[1]
பெருமாளும் கருடனும் ஒரே கல்லில் செதுக்கப்பட்டு அருள்பாலிப்பது இக்கோயிலின் இன்னொரு சிறப்பாகும்.[2]
முக்கியத்துவம்
மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இக்கோயிலில் வழிபட்டு பரிகாரம் செய்து கொள்ளும் தலமாக விளங்குகிறது.[3]
புராண முக்கியத்துவம்
முற்காலத்தில் வன்னி மரங்கள் நிறைந்த பகுதியில் பிருகு முனிவர் தவம் இயற்றினார். ஆழ்ந்த தவத்தில் மகாவிஷ்ணுவைத் தரிசனம் செய்து கொண்டிருந்த அவருக்கு, அச்சமயம் அங்கு சிங்க வேட்டைக்கு வந்த சோழமன்னன் ஒருவனின் படைகள் எழுப்பிய சப்தம் இடையூறு ஏற்படுத்தி தவத்தைக் கலைத்தது. அதனால் கோபமுற்ற பிருகு முனிவர், சோழ மன்னனைச் சபித்து, சிங்க வேட்டைக்கு வந்த அவன் சிங்க முகம் கொண்டு உருமாறச் செய்தார். அதன் பின்னர் மனம் வருந்தி மன்றாடிய சோழனின் வேண்டுகோளை ஏற்று, அதற்குப் பரிகாரமாக விருத்த காவிரி என்ற வெற்றாற்றில் நீராடி, இப்போதைய எண்கண் திருத்தலத்தில் பெருமாளை மனமுருகி வேண்டினால் அவர் அருளால் முன்பு போல் தோற்றமளிக்கலாம் என பிருகு முனிவர் பணித்தார். சோழனும் அவ்வாறே மகாவிஷ்ணுவைத் தியானித்தார். மகாவிஷ்ணு ஆதிநாராயண பெருமாளாக கருட வாகனத்தில் காட்சியருளி, சோழனுக்கு மீண்டும் மனித உருவம் தோன்றச் செய்தார். சோழனின் வேண்டுகோளை ஏற்று, கருட வாகனத்தில் அமர்ந்த திருக்கோலத்தில் இங்கு கோயில் கொண்டுள்ளார்.[4]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads