என். கே. விசுவநாதன்
திரைப்பட இயக்குநர், ளிப்பதிவாளர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
என். கே. விஸ்வநாதன் (N. K. Vishwanathan, இறப்பு 25 மார்ச் 2017) என்பவர் ஒரு இந்திய திரைப்பட இயக்குநரும், ஒளிப்பதிவாளருமாவார். இவர் பெரும்பாலும் தமிழ் படங்களில் பணியாற்றியவர்.[2][3] 1980 களில் தமிழ் படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றத் தொடங்கிய பின்னர், திரைப்பட இயக்குநராக கிளைத்து 1990 களில் வணிக ரீதியாக வெற்றிகரமான திரைப்படங்களை உருவாக்கினார்.
Remove ads
தொழில்
விஸ்வநாதன் 1970 களில் இருந்து பல படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். முக்கியமாக ராம நாராயணன் இயக்கிய படங்களில் பணியாற்றினார். மேலும் சட்டம் என் கையில் (1978) படத்தில் முதல் முதலில் நடிக்க நடிகர் சத்தியராஜை பரிந்துரைத்து உதவினார்.[4] படத்தின் இயக்குநர் டி. என். பாலு படப்பிடிப்பின் போது இறந்தபோது கமல்ஹாசனின் வற்புறுத்தலின் பேரில், சங்கர்லால் (1981) படத்தை இயக்கினார்.[5] 1990 களில் குடும்ப நாடகப் படங்களில் பணிபுரிந்த இவர் திரைப்படங்களை இயக்கத் தொடங்கினார்.
2000 களின் முற்பகுதியில், ஒளிப்பதிவாளராக பல பக்தி படங்களில் பணியாற்றிய இவர், சிஜிஐ மற்றும் விஎஃப்எக்ஸ் தொடர்பான தொழில்நுட்பங்கள் பற்றிய தனது அறிவை வளர்த்துக் கொண்டார்.[6] விஸ்வநாதன் 1978 ஆம் ஆண்டய ஜகன்மோகினி படத்தின் மறு தயாரிப்பான ஜெகன்மோகினி (2009) படத்தை இயக்கினார், நமீதாவும், நிலாவும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். வெளியீட்டிற்கு முன்னர் கவனத்தை உருவாக்கிய போதிலும், இது கலவையான விமர்சனங்களுடன் வெளியானது.[7][8]
Remove ads
இறப்பு
மாரடைப்பு காரணமாக இவர் 25 ஏப்ரல் 2017 அன்று இறந்தார்.[9]
திரைப்படவியல்
இயக்குநராக
ஒளிப்பதிவாளராக
- சட்டம் என் கையில் (1978)
- கல்யாணராமன் (1979)
- மீண்டும் கோகிலா (1981)
- கடல் மீன்கள் (திரைப்படம்) (1981)
- சங்கர்லால் (திரைப்படம்) (1981)
- எல்லாம் இன்பமயம் (1981 திரைப்படம்) (1981)
- கரையெல்லாம் செண்பகப்பூ (1981)
- மனைவி சொல்லே மந்திரம் (1983)
- எங்கள் குரல் (1985)
- உரிமை (1985)
- செயின் ஜெயபால் (1985)
- வீரன் வேலுத்தம்பி (திரைப்படம்) (1987)
- மேகம் கறுத்திருக்கு (1987)
- சகாதேவன் மகாதேவன் (1988)
- எங்க ஊரு காவல்காரன் (1988)
- தங்கமணி ரங்கமணி (1989)
- பாண்டி நாட்டுத் தங்கம் (1989)
- செந்தூர தேவி (1991)
- புருஷன் எனக்கு அரசன் (திரைப்படம்) (1992)
- காவியத் தலைவன் (1992)
- திருப்பதி ஏழுமலை வெங்கடேசா (1999)
- ராஜகாளியம்மன் (2000)
- குபேரன் (2000)
- கந்தா கடம்பா கதிர்வேலா (2000)
- பாளையத்து அம்மன் (2000)
- நாகேஸ்வரி (2001)
- விஸ்வநாதன் ராமமூர்த்தி (2001)
- கோட்டை மாரியம்மன் (திரைப்படம்) (2001)
- ஷக்கலக்கபேபி (2002)
- அன்னை காளிகாம்பாள் (திரைப்படம்) (2003)
- மண்ணின் மைந்தன் (திரைப்படம்) (2005)
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads