எம். வி. இராகவன்
இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
மேலத்து வீட்டில் இராகவன் (Melathu Veettil Raghavan) (5 மே 1933 - 9 நவம்பர் 2014) ஓர் மூத்த பொதுவுடைமைத் தலைவரும், இந்தியாவின் கேரள மாநிலத்தின் முன்னாள் அமைச்சரும் ஆவார்.[1] இவர் பொதுவுடைமை மார்க்சிசக் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்தார். ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டணி பங்காளியாக இருந்தார். பொதுவுடைமை மார்க்சிசக் கட்சி உருவாவதற்கு முன்பு இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிசம்) முக்கிய தலைவராக இருந்தார்.[2] [3]
இவர் கேரளாவின் வடக்கு மலபார் பகுதியில் உள்ள கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். கண்ணூர் மாவட்டத்தில் நாட்டின் முதல் கூட்டுறவு துறை மருத்துவக் கல்லூரியான பரியராம் மருத்துவக் கல்லூரியை இராகவன் நிறுவினார். பாப்பினிசேரியில் மாநிலத்தில் முதல் 'நஞ்சு சிகிச்சை மையம்' (பாம்பு நஞ்சு அகற்றும் மையம்) கட்டிய முக்கிய நபராகவும் இருந்தார். தர்மசாலையில் ஒரு பாம்புப் பூங்கா அமைத்தது இவரது மற்றொரு முக்கிய சாதனையாகும். இது ஒரு பெரிய சுற்றுலாத் தலமாக மாறியுள்ளது.[4]
Remove ads
சொந்த வாழ்க்கை
இராகவன், 5 மே 1933 அன்று கண்ணூரில் சங்கரன் நம்பியாருக்கு பிறந்தார்.[5] ஜானகி என்பவரை மணந்தார். இந்த தம்பதியருக்கு மூன்று மகன்களும் ஒரு மகளும் உள்ளனர், [6] இவரது மகன்களில் ஒருவரான எம். வி நிகேஷ் குமார், செய்தி வாசிப்பாளராக இருக்கிறார்.[7]
இறப்பு
2005 முதல், இவர் மேம்பட்ட நடுக்குவாத நோயால் பாதிக்கப்படிருந்த இவர் 9 நவம்பர் 2014 அன்று தனது 81 வயதில் இறந்தார்.[8] [9] பையம்பலம் கடற்கரையிலுள்ள சுடுகாட்டில் சுதேசாபிமானி இராமகிருட்டிண பிள்ளை, ஏ. கே. கோபாலன், கே.ஜி. மாரார் எ. கி. நாயனார் ஆகியோரின் கல்லறைக்கு அருகே இவருடைய உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads