எம்ஜிஆர் மகன்

2021இல் வெளியான தமிழ் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia

எம்ஜிஆர் மகன்
Remove ads

எம்ஜிஆர் மகன் ( MGR Magan ) என்பது 2021 ஆம் ஆண்டு வெளிவந்த இந்திய தமிழ் மொழி குடும்ப அதிரடி நகைச்சுவைத் திரைப்படமாகும், இதை பொன்ராம் இயக்கியிருந்தார். ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் தயாரித்துள்ளது. சசிகுமார், சத்யராஜ், மிருணாளினி இரவி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இப்படத்திற்கு அந்தோணிதாசன் இசையமைத்துள்ளார்.[1][2] இது 4 நவம்பர் 2021 அன்று ஹாட் ஸ்டார் வழியே படம் வெளியிடப்பட்டது.

விரைவான உண்மைகள் எம்ஜிஆர் மகன், இயக்கம் ...
Remove ads

நடிகர்கள்

தயாரிப்பு

படத்தின் முதன்மை புகைப்படம் எடுக்கும் பணி 25 செப்டம்பர் 2019 அன்று தொடங்கியது. படத்தின் ஆரம்ப கால படப்பிடிப்பு தேனியில் படமாக்கப்பட்டது.[3] சூப்பர் டீலக்ஸ் படத்தில் அறிமுகமான மிருணாளினி இரவி இப்படத்தில் சசிகுமாருக்கு கதாநாயகியாக நடித்திருந்தார். ஆரம்பத்தில் சத்யராஜின் வேடத்தில் நடிக்க ராஜ்கிரணுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால் அவரது கால அட்டவணை முரண்பாடுகள் காரணமாக அவர் இந்த வாய்ப்பை மறுத்துவிட்டார்.[4] படத்தின் படப்பிடிப்பு நவம்பர் 2019 இறுதியில் நிறைவடைந்தது [5]

Remove ads

ஒலிப்பதிவு

படத்துக்கு இசையமைப்பாளர் அந்தோணிதாசன் இசையமைத்திருந்தார். ஒலிப்பதிவு தொகுப்பில் யுகபாரதி, முருகன் மந்திரம், அந்தோணி தாசன் எழுதிய நான்கு பாடல்கள் இடம்பெற்றன. இசை உரிமையை சோனி மியூசிக் இந்தியா வாங்கியுள்ளது.[6]

வெளியீடு

எம்ஜிஆர் மகன் படம் 28 ஆகஸ்ட் 2020 அன்று இந்தியத் திரைப்படத் தணிக்கைக் குழுவால் அனுமதிக்கப்பட்டது.[7] படம் முதலில் 2020 தீபாவளி அன்று திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டது. ஆனால் 2020 இந்தியாவில் கொரோனாவைரசுத் தொற்று காரணமாக திரையரங்குகள் மீண்டும் திறக்கப்படுவதில் தாமதம் ஏற்பட்டதால் ஒத்திவைக்கப்பட்டது.[8][9] படத்தின் முன்னோட்டம் 14 நவம்பர் 2020 அன்று வெளியிடப்பட்டது. நவம்பர் 2020 இன் பிற்பகுதியில், படத்தை நத்தார் வெளியீட்டிற்குத் தள்ள குழு திட்டமிட்டது, ஆனால் அதுவும் நடக்கவில்லை.[10][11] பின்னர் திரைப்பட தயாரிப்பாளர்கள் படம் 23 ஏப்ரல் 2021 அன்று திரையரங்குகளில் 50% பார்வையாளர்களுடன் வெளியிடப்படும் என்று அறிவித்தனர்.[12] ஆனால் கோவிட் 19இன் இந்தியாவில் இரண்டாவது அலை காரணமாக தமிழ்நாடு அரசு விதித்த புதிய பொது முடக்க கட்டுப்பாடுகள் காரணமாக வெளியீட்டை மீண்டும் ஒத்திவைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.[13][14] இறுதியாக திரையரங்கு வெளியீடு ரத்து செய்யப்பட்டு ஹாட் ஸ்டார் வழியே நேரடி-காணொளியாக 4 நவம்பர் 2021 அன்று வெளியிடப்பட்டது.[15]

Remove ads

வரவேற்பு

பிலிம் கம்பேனியனின் விஷால் மேனன், "எம்.ஜி.ஆர் மகனில் உள்ள தந்தை-மகன் மோதல் விஷயங்களை வேடிக்கையாக மாற்றும் அளவுக்கு கடினமாக இல்லை அல்லது பதற்றத்தை ஏற்படுத்துவதில் வெற்றி பெறவில்லை" என எழுதினார்.[16]

சான்றுகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads