ஐஎன்எஸ் விராட்

From Wikipedia, the free encyclopedia

ஐஎன்எஸ் விராட்
Remove ads

ஐ. என். எஸ். விராட் இந்தியாவிடம் பயன்பாட்டிலுள்ள இரு வானூர்தி தாங்கிக் கப்பல்களில் ஒன்றாகும். இது 23 ஆயிரத்து 900 டன் எடை கொண்ட இந்த கப்பல் 226.5 மீட்டர் நீளமும், 49 மீட்டர் அகல மும் கொண்டது. இக்கப்பலிருந்து ஒரே நேரத்தில் 18 விமானங்களைத் செலுத்த முடியும். [2]

விரைவான உண்மைகள் Career (இந்தியா), பொது இயல்புகள் ...
Remove ads

வரலாறு

எச்எம்எஸ் ஹெர்மெஸ் என்ற பெயரில் இந்தக் கப்பல் பிரிட்டன் கடற்படையில் பணியாற்றி வந்தது. 1984-ல் இது பிரிட்டன் கடற்படையில் இருந்து நீக்கப்பட்டது. இதன் பின்னர் இதை இந்திய அரசு வாங்கி 1987-ம் ஆண்டு மே 12-ம் தேதி இந்திய கடற்படையில் இணைத்தது.

1989-ல் இலங்கையில் இந்திய அமைதிப் படை பணியிலும் 1999-ல் கார்கில் போரின் போதும் இக்கப்பல் முக்கியப் பங்காற்றியுள்ளது. நீரில் மட்டுமின்றி, நிலத்தில் இருந்தும் மேற்கொள்ளப்படும் ராணுவ செயல்பாடுகளுக்கும் இக்கப்பல் சிறப்பாக உதவக் கூடியது. நீர்மூழ்கி கப்பல்களுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபடக்கூடியது. 27,800 டன் எடை கொண்ட இக்கப்பல் 11 லட்சம் கிலோ மீட்டர் பயணித்துள்ளது.

இறுதியாக கடந்த ஆண்டு விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற சர்வதேச கடற்படை நிகழ்ச்சியில் இக்கப்பல் பணியில் ஈடுபடுத்தப்பட்டது. இக்கப்பல் முழுச் செயல்பாட்டில் இருந்தபோது, 1,500-க்கும் மேற்பட்டோர் பணியாற்றினர். கடைசி பயணத்துக்குப் பிறகு இக்கப்பலின் பணியாளர்களின் எண்ணிக்கை 300-க்கும் கீழ் குறைக்கப்பட்டது.

Remove ads

ஓய்வு

உலகின் மிகப் பழமையான விமானம் தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விராட் இந்திய கடற்படையில் 30 ஆண்டுகள் சேவை உட்பட அந்தக் கப்பலின் 55 ஆண்டு கால நீண்ட பயணத்திற்குப் பின்னர் 6 மார்ச் 2017 அன்று ஐஎன்எஸ் விராட் கப்பலுக்கு ஓய்வு தரப்பட்டது. [3]

உடைப்பு

முன்னதாக பிரிட்டன் கடற்படையில் எச்,எம்.எஸ் ஹெர்மஸ் என்ற பெயரில் இந்த கப்பல் சேவையாற்றியது. 1944 ம் ஆண்டு விக்கர்ஸ் ஆம்ஸ்ட்ராங் என்ற பிரிட்டன் நிறுவனத்தால் கட்டப்பட்டது இந்த கப்பல். 1959 ம் ஆண்டு பிரிட்டன் கப்பற்படையில் இது இணைந்தது. 1971ல் ஹெலிகாப்டர்கள் தாங்கும் கப்பலாக மாற்றி அமைக்கப்பட்டது. இது 1984ம் ஆண்டு இந்திய கப்பற்படைக்கு விற்கப்பட்டது. மே 1987 முதல் இந்திய கடற்படையில் விமானம் தாங்கி கப்பலாக சேவையை துவங்கியது. இது பிரிட்டனிலிருந்து இந்தியாவுக்காக வாங்கப்பட்ட ஒரே கப்பலாகும். கடந்த 30 ஆண்டு கால சேவைக்குப் பிறகு இந்திய கடற்படை விமானம் தாங்கி கப்பல் ஐஎன்எஸ் விராத் கப்பல், குஜராத்தில் கப்பல்களை உடைக்கும அலாங்க் துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.[4][5] INS Viraat final journey and what lies ahead]</ref>[6]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads