ஐக்கிய நாடுகள் கடைப்பிடிப்புக்கள் - அனைத்துலக ஆண்டு

From Wikipedia, the free encyclopedia

Remove ads

ஐக்கிய நாடுகள் கடைப்பிடிப்புக்கள் - அனைத்துலக ஆண்டு (United Nations observances – International Year) என்பது, ஐக்கிய நாடுகள் பட்டயத்தின் நோக்கங்களை அடைவதற்காகவும், உலகம் தழுவிய அரசியல், சமூக, பண்பாட்டு, மனிதநேய அல்லது மனித உரிமை விடயங்கள் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு ஒரு குறித்த விடயத்துக்காக அறிவிக்கப்படும் ஆண்டில், பன்னாட்டு அளவிலும், நாடுகள் அளவிலும் அவ்விடயம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் அவையின் திட்டங்களிலும் நடவடிக்கைகளிலும் ஆர்வத்தை உண்டாக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. இவ்வாறாக அறிவிக்கப்படும் அனைத்துலக ஆண்டுகள் தொடர்பிலான ஆயத்த வேலைகள், மதிப்பீடு, கண்காணிப்பு ஆகிய செயற்பாடுகளுக்கான அடிப்படைகளை ஐக்கிய நாடுகள் பொதுச் செயலர் உருவாக்குகிறார். பெரும்பாலான அனைத்துலக ஆண்டுகள் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையால் அறிவிக்கப்படுகின்றன. வேறு சிலவற்றை ஐக்கிய நாடுகளின் துணை நிறுவனங்களான யுனெஸ்கோ போன்றவை அறிவிக்கின்றன.

ஐக்கிய நாடுகளின் முதலாவது அனைத்துலக ஆண்டு 1959 ஆம் ஆண்டில், பொதுச் சபையின் 1285 (XIII) ஆவது தீர்மானத்தின் கீழ் அறிவிக்கப்பட்டது. இது உலக ஏதிலி ஆண்டு ஆகும். இதைத் தொடர்ந்து 1961, 1965, 1967, 1968, 1970, 1971, 1974, 1975, 1978/79, 1979, 1981, 1982, 1983, 1985, 1986, 1987, 1990, 1992, 1993, 1994, 1995, 1996, 1998, 1999, 2000, 2000, 2001, 2002, 2003, 2004, 2005, 2006, 2007, 2008, 2009, 2010, 2011, 2012, 2013 ஆகியனவும் பல்வேறு விடயங்களுக்காக அனைத்துலக ஆண்டுகளாக அறிவிக்கப்பட்டன. இதுவரை பெரும்பாலான ஆண்டுகள் ஒரு விடயத்துக்காகவே அனைத்துலக ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளன எனினும், அண்மைக் காலத்தில் ஒரு ஆண்டு ஒன்றுக்கு மேற்பட்ட விடயங்களுக்காகவும் அனைத்துலக ஆண்டாக அறிவிக்கப்பட்டதைக் காண முடிகிறது. மிக அதிக அளவாக 2009 ஆம் ஆண்டு ஐந்து விடயங்களுக்காக அனைத்துலக ஆண்டாக அறிவிக்கப்பட்டது.

Remove ads

இதுவரை அறிவிக்கப்பட்ட அனைத்துலக ஆண்டுகள்

1959 ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை அறிவிக்கப்பட்ட அனைத்துலக ஆண்டுகளின் பட்டியலைக் கீழே காண்க.

ஆண்டுகள் 2011–2020

ஆண்டுகள் 2001–2010

ஆண்டுகள் 1991–2000

  • 2000 – அனைத்துலக நன்றிதெரிவித்தல் ஆண்டு
  • 2000 – அனைத்துலக அமைதிப் பண்பாடு ஆண்டு
  • 1999 – அனைத்துலக மூத்தோர் ஆண்டு
  • 1998 – அனைத்துலகப் பெருங்கடல் ஆண்டு
  • 1996 – அனைத்துலக வறுமை ஒழிப்பு ஆண்டு
  • 1995 – அனைத்துலகச் சகிப்புத்தன்மை ஆண்டு
  • 1995 – இரண்டாம் உலகப்போரில் பாதிக்கப்பட்டோரை மக்கள் நினைவுகூர்வதற்கான அனைத்துலக ஆண்டு
  • 1994 – அனைத்துலகக் குடும்ப ஆண்டு
  • 1994 – விளையாட்டுக்கும் ஒலிம்பிய இலட்சியத்துக்குமான அனைத்துலக ஆண்டு
  • 1993 – அனைத்துலக உலகத் தாயக மக்கள் ஆண்டு
  • 1991 – அனைத்துலக விண்வெளி ஆண்டு

ஆண்டுகள் 1981–1990

  • 1990 – அனைத்துலக எழுத்தறிவு ஆண்டு
  • 1987 – வீடற்றோருக்கு வீடு பெறுவதற்கான அனைத்துலக ஆண்டு
  • 1986 – அமைதிக்கான அனைத்துலக ஆண்டு
  • 1985 – ஐக்கிய நாடுகள் ஆண்டு
  • 1985 – அனைத்துலக இளைஞர் ஆண்டு: பங்கேற்பு, வளர்ச்சி, அமைதி
  • 1983 – உலக தொலைத்தொடர்பு ஆண்டு தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு வளர்ச்சி
  • 1982 – தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தடைகளுக்கான வளத்திரட்டலுக்கான அனைத்துலக ஆண்டு
  • 1981 – ஊனமுற்றோருக்கான அனைத்துலக ஆண்டு

ஆண்டுகள் 1971–1980

  • 1979 – அனைத்துலகச் சிறுவர் ஆண்டு
  • 1978/79 – அனைத்துலக இனவொதுக்கல் எதிர்ப்பு ஆண்டு
  • 1978 – அனைத்துலகப் பெண்கள் ஆண்டு
  • 1974 – உலக மக்கள்தொகை ஆண்டு
  • 1971 – இனவாதம், இன அடிப்படையிலான தப்பபிப்பிராயங்கள் என்பவற்றுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கான அனைத்துலக ஆண்டு

ஆண்டுகள் 1961–1970

  • 1970 – அனைத்துலகக் கல்வி ஆண்டு
  • 1968 – அனைத்துலக மனித உரிமைகள் ஆண்டு
  • 1967 – அனைத்துலகச் சுற்றுலாப் பயணிகள் ஆண்டு
  • 1965 – அனைத்துலக ஒத்துழைப்பு ஆண்டு
  • 1961 – அனைத்துலக மருத்துவத்துக்கும் மருத்துவ ஆய்வுக்குமான ஆண்டு

ஆண்டுகள் 1951–1960

  • 1959/1960 – உலக ஏதிலி ஆண்டு
Remove ads

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads