க. மலைச்சாமி

தமிழக அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia

Remove ads

கருப்பையா தேவர் மலைச்சாமி (1936/1937 - 6, நவம்பர், 2024) என்பவர் ஓர் முன்னாள் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியும், அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.

பிரித்தானிய இந்தியாவின், சென்னை மாகாணத்தின், பழைய இராமநாதபுரம் மாவட்டத்தில் (இன்றைய சிவகங்கை மாவட்டம்) மலைச்சாமி பிறந்தார். 1978 ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணி அதிகாரியானார். பின்னர் தமிழகத்தின் வேளாண் துறை இணை இயக்குநராக தனது பணியை தொடங்கினார். அதன் பின்னர், கோவை மாவட்ட ஆட்சியர், மதுரை மாநகராட்சி ஆணையர், தமிழ்நாடு உணவுப்பொருள் வழங்கல் துறை மேலாண் இயக்குநர், வேளாண் துறை இயக்குநர், சென்னை மாநகராட்சி ஆணையர், எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை இயக்குநர், கைத்தறி மற்றும் துணி நூல் துறை இயக்குநர், தொழிலாளர் துறை ஆணையர், பொதுவிநியோகத்துறை ஆணையர், கூட்டுறவுத்துறை செயலர், உள்துறை செயலர், மாநில தேர்தல் ஆணையர் போன்ற பொறுப்புகளை வகித்தார்.[1]

Remove ads

அரசியல்வாழ்வு

பணியிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு, அதிமுகவில் இணைந்தார். 1999ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் அக்கட்சி சார்பில் போட்டியிட்டார். தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட தி.மு.கவின் பவானி ராஜேந்திரனைவிட சுமார் ஆறாயிரத்து அறுநூறு வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார். பிறகு, 2004ஆம் ஆண்டிலிருந்து 2010ஆம் ஆண்டுவரை அக்கட்சியின் சார்பில் மாநிலங்களவைக்கு உறுப்பினராகவும் இருந்தார்.[2] இவர் 2014 ஆம் ஆண்டு மே மாதம் 15 ம் தேதி அதிமுகவிலிருந்து அதன் பொதுச்செயலாளரான ஜெயலலிதாவால் நீக்கப்பட்டார்.[3]

Remove ads

இறப்பு

சென்னையில் வசித்துவந்த இவர் மூப்பின் காரணமாக தன் 87வது வயதில் இறந்தார்.[4]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads