கங்கை வடிநிலம்

From Wikipedia, the free encyclopedia

கங்கை வடிநிலம்
Remove ads

கங்கை வடிநிலம் (Ganges Delta) இதனை கங்கை-பிரம்மபுத்திரா வடிநிலம் என்றும் அழைப்பர். இவ்வடிநிலம் கிழக்கு இந்தியாவின் வங்காளப் பகுதிகளான இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலம் மற்றும் வங்காளதேசத்தில் அமைந்துள்ளது. இது உலகின் பெரிய வடிநிலங்களில் ஒன்றாகும்.[1][2]கங்கை ஆறு, ஊக்லி ஆறு, பத்மா ஆறு, மேகனா ஆறு, பிரம்மபுத்திரா ஆறு முதலிய ஆறுகள் இவ்வடிநிலம் வழியாக வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது.

Thumb
கங்கை வடிநிலம், செயற்கைக் கோள் புகைப்படம், 2020
Remove ads

புவியியல்

Thumb
கங்கை வடிநிலத்தின் வரைபடம், ஆண்டு 1778

கங்கை வடிநிலத்தின் பரப்பளவு 105,000 km2 (41,000 sq mi) அதிகாமானது மற்றும் இவ்வடிநிலத்தின் பெரும்பகுதிகள் வங்காளதேசம் மற்றும் மேற்கு வங்காளத்தில் அமைந்துள்ளது.திபெத், இந்தியா, நேபாளம் மற்றும் பூடான் பகுதிகளிலிருந்து வரும் ஆற்று நீரின் 67% வங்காளதேசம் வழியாகவும்; 33% ஆற்று நீர் மேற்கு வங்காளம் வழியாக வங்காள விரிகுடாவில் கலக்கிறது. இவ்வடிநிலம் வண்டல் மண் கொண்டுள்ளதால், இவ்வடிநிலத்தில் பயிர்கள் செழிப்பாக வளர்கிறது. கங்கை-பிரம்மபுத்திரா வடிநிலப் பகுதிகளில் ஏற்படும் ஆற்று வெள்ளம் மற்றும் சூறாவளி புயல் மழை வெள்ளங்களால், மண் அரிப்பு ஏற்பட்டு, நிலப்பகுதிகள் தீவுகளாக காட்சியளிக்கிறது.

Remove ads

மக்கள் தொகை

கங்கை-பிரம்மபுத்திரா வடிநிலப்பகுதிகளின் மக்கள் தொகை ஏறத்தாழ 280 மில்லியன் ஆகும். அதில் 180 மில்லியன் மக்கள் வங்காளதேசத்திலும்; 100 மில்லியன் மக்கள் மேற்கு வங்காள மாநிலத்திலும் உள்ளனர். இவ்வடிநிலப் பகுதிகளில் மக்கள்தொகை அடர்த்தி மிகஅதிக அளவில் உள்ளது.

தென்மேற்கு பருவ மழை மற்றும் வடகிழக்கு பருவ மழையின் போது இவ்வடிநிலப் பகுதிகளின் ஆறுகளில் ஏற்படும் பலத்த மழை வெள்ளத்தால் வங்காளதேச மக்கள் பெரும் இன்னல் ஆளாவதுடன், மண் அரிப்பு ஏற்படுகிறது. [3]

Remove ads

காட்டுயிர்கள்

Thumb
வங்காளப் புலி

கங்கை-பிரம்மபுத்திரா வடிநிலப் பகுதியும், வங்காள விரிகுடாவை இணைக்கும் பகுதியில் உவர் நீர் கொண்ட சுந்தரவன சதுப்பு நிலக்காடுகளில் வங்காளப் புலிகள், முதலைகள் போன்ற விலங்குகளும், சணல் தாவரங்களும், சதுப்பு நிலத் தாவரங்களும் அதிகம் உள்ளது. மேலும் இப்பகுதியில் மீன் பிடி தொழிலும் நடைபெறுகிறது.

பொருளாதாரம்

Thumb
கங்கை-பிரம்மபுத்திரா வடிநில பகுதிகளில் நெல் பயிருடுதல், கால்நடை வளர்ப்பு மற்றும் மீன் பிடித்தொழில்

கங்கை-பிரம்மபுத்திரா வடிநிலப் பகுதிகளில் நெல், கரும்பு, கோதுமை போன்ற தானியங்களை விளைவிப்பதுடன், ஆடு, மாடு போன்ற கால்நடை வளர்ப்புத் தொழில் மற்றும் மீன் பிடித் தொழில்களே இவ்வடிநில மக்களின் முதன்மை பொருளாதாரமாக உள்ளது. மேலும் சணல் செடிகளை வளர்த்து, சாக்குப் பைகள் உற்பத்தி செய்யப்படுகிறது.

தட்ப வெப்பம்

கங்கை வடிநிலப் பகுதியில் ஆண்டுக்கு 1,500 முதல் 2,000 mm (59 முதல் 79 அங்) வரை மழை பொழிகிறது. கோடையில் அதிக வெப்பமும்; குளிர்காலத்தில் மிதமாக குளிரும் உள்ளது.

புயல்கள் மற்றும் வெள்ளம்

பொதுவாக இவ்வடிநிலப்பகுதிகளில் ஆண்டுதோறும் ஏற்படும் புயல் மற்றும் வெள்ளத்தால் பல மக்கள் கொல்லப்படுகின்றனர். 1970 போலா புயல் வெள்ளத்தால் 5,00,000 மக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 1,00,000 மக்கள் காணமல் போயினர்.[4]1991ஆம் ஆண்டில் உண்டான புயலில் 1,39,000 மக்கள் கொல்லப்பட்டனர்[5] மற்றும் கணக்கற்றவர்கள் வீடுகள் இழந்தனர்.

Remove ads

அடிக்குறிப்புக்ள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads