கசானா கட்டிட அருங்காட்சியகம், ஹைதராபாத்
தெலங்கானாவில் உள்ள அருங்காட்சியகம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
கசானா கட்டிட அருங்காட்சியகம் இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் ஹைதராபாத் நகரில் அமைந்துள்ள ஒரு அருங்காட்சியகம் ஆகும். இந்த அருங்காட்சியகத்தில் குதுப் ஷாஹி, பஹ்மானி மற்றும் ககாதியா வம்சங்களைச் சேர்ந்த நினைவுச்சின்னங்களின் சேகரிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த அருங்காட்சியகம், 2018 ஆம் ஆண்டு நிலவரப்படி, சீல் வைக்கப்பட்டு பொதுமக்களின் பார்வைக்காக திறக்கப்படவில்லை.[1]
Remove ads
வரலாறு
இந்த கட்டிடம் கி.பி 1580 இல் குதுப் ஷாஹி மன்னர்களால் வீட்டு கஜானாக்கள் அல்லது கருவூலத்தினை அமைப்பதற்காக கட்டப்பட்டது. இது கசானா கானா என்ற பெயரில் கூட அழைக்கப்பட்டது. இந்த கட்டிடம் புதுப்பிக்கப்பட்டு 2013 ஆம் ஆண்டில் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டது. இது கோல்கொண்டா கோட்டையின் அருகே அமைந்துள்ளது.
சேகரிப்புகள்
இந்த அருங்காட்சியகத்தில் பல்வேறு அகழ்வாராய்ச்சிகளில் கண்டுபிடிக்கப்பட்ட பல நூற்றாண்டுகள் பழமையான நினைவுச்சின்னங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், குதுப் ஷாஹி மன்னரின் 3,500 ஆயுதங்கள் உள்ளன. அண்டை பகுதிகளான சாளுக்கியா மற்றும் ககாட்டியா ஆகிய இடங்களைச் சேர்ந்த கல் சிற்பங்கள் மற்றும் பஹ்மானி இராச்சியத்தினைச் சேர்ந்த கலைப்பொருட்கள் ஆகியவையும் உள்ளன.
பெயர் குறிப்பிடுவதுபோல், கசானா கட்டிடம் கசானா அல்லது புதையல் சேமிக்கப்பட்ட இடமாகக் கருதப்படுகிறது. அவ்வகையில் இவ்விடம் இப்ராஹிம் குதுப் ஷாஹியின் கருவூலமாகும். ஹைதராபாத்தில் உள்ள கோல்கொண்டா கோட்டைக்கு அருகில் அமைந்துள்ள இந்த கசானா கட்டிடமானது பிரதான சாலையில், ஃபதேஹ் தர்வாசாவிலிருந்து பாலா ஹிசார் சாலைக்கு செல்லும் வழியில் உள்ளது. கசானா கட்டிட அருங்காட்சியகம் என்று அழைக்கப்படுகிற அருங்காட்சியகத்திற்குள் நுழையும்போது, பார்வையிட வருகின்ற சுற்றுலாப் பயணிகள் குதுப் ஷாஹி வம்சத்தின் அரச கருவூலத்தைச் சார்ந்த பாதுகாப்பு அறைகளை காணும் வாய்ப்பு உள்ளது. பரவலாகக் காணப்படுகின்ற இஸ்லாமிய பாணியில் அமைந்த கட்டிடங்களைப் போல, கட்டிடத்தின் கிழக்குப் பகுதியில்அஷ்ரஃபி மசூதி மற்றும் சானி மசூதி (இப்ராஹிம் குதுப் ஷாஹி காலத்தில், கி.பி 1550 - கி.பி 1580 காலங்களில் கட்டப்பட்டன. கசானா கட்டிட அருங்காட்சியகத்திற்கு எதிரே அமைந்துள்ளது ஷாம் ஷீர் கோட்டா அமைந்துள்ளது. இப்ராஹிம் குதுப் ஷாவின் ஆட்சிக் காலத்தில், இந்த கட்டிடத்தில் அரச ஆயுதங்களும் ஆயுதங்களும் சேமிக்கப்பட்டன.[2]
இக் கட்டிடத்தின் நடுவில் ஒரு வளைவு காணப்படுகிறது. அருகில் இரண்டு அரங்குகள் உள்ளன. இந்த அரங்குகளின் கூரைகளை தாங்குகின்ற முறையில் வளைவு அமைக்கப்பட்டுள்ளது. அரங்குகளின் ஒரு சிறப்பு நோக்கம் குறிப்பிடத்தக்கதாக உள்ளது. இவை இராணுவத்தின் அரச கருவூலத்தின் களஞ்சியங்களைக் கொண்டுள்ளது. பல்வேறு அகழ்வாராய்ச்சிகளை மேற்கொண்டபோது கண்டுபிடிக்கப்பட்ட பல நூற்றாண்டு காலங்களைச் சேர்ந்த அரிய நாணயங்கள் முதல் பழமையான நினைவுச்சின்னங்கள் வரை உள்ளன. அவை இப்பகுதியின் வரலாற்றையும், பாரம்பரியத்தையையும் வெளிப்படுத்துவனாக உள்ளன. நிஜாம் மன்னர்களின் ஆட்சி மாறி, ஜனநாயக அரசாங்கம் வந்தபோது, 1948 ஆம் ஆண்டில், கசானா கட்டிடங்களின் உரிமையானது இந்திய அரசுக்கு மாறியது. பின்னர் இந்த கட்டிடமானது இந்திய இராணுவத்திற்கு அதன் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதற்காக ஒதுக்கப்பட்டது. அதே காலகட்டத்தில் இந்த கட்டடத்தோடு ஒரு இணைப்புக் கட்டடமும் கட்டப்பட்டது. 1951-1952 ஆம் காலப்பகுதியில், ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் தெலுங்காணவின் பாரம்பரியத் துறைக்கு மாறியது. கசானா கட்டிடம் ஒரு பாரம்பரிய கட்டிடமாக மாற்றப்பட்டபோது அதன் வடிவில் நினைவுச்சின்னமாக மாறியதைக் காணமுடிகிறது.[2]
Remove ads
இவற்றையும் பார்க்கவும்
- சலார் ஜங் அருங்காட்சியகம், ஐதராபாத், ஆந்திரப் பிரதேசம்
- தொல்லியல் அருங்காட்சியகம், சந்திரகிரி, ஆந்திரப் பிரதேசம்
- தொல்லியல் அருங்காட்சியகம், அமராவதி, ஆந்திரப் பிரதேசம்
- தொல்லியல் அருங்காட்சியகம், கொண்டாப்பூர், ஆந்திரப் பிரதேசம்
- தொல்லியல் அருங்காட்சியகம், நாகார்சுனகொண்டா, ஆந்திரப் பிரதேசம்
- பாபு அருங்காட்சியகம், விஜயவாடா, ஆந்திரப் பிரதேசம்
- தொல்லியல் அருங்காட்சியகம், தெலுங்காணா
- இந்தியத் தொல்லியல் துறையின் அருங்காட்சியகங்கள்
- இந்தியாவில் உள்ள அருங்காட்சியகங்களின் பட்டியல்
குறிப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads